இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்ட படத்தையும் விடயங்களையும் சீரியஸாக எடுத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பில்லை. எல்லாம் கற்பனையே....
டாவின்சி கோட், ஏஞ்சல்ஸ் அன்ட் டெமன்ஸ் படங்களுக்கு கிடைத்த அபரிமிதமான எதிர்ப்புக்களையும், வந்த சர்ச்சைகளையும் பார்த்துட்டுக் கூட இத போடலைன்னா எப்படி??
கிறிஸ்தவ சமயத்தின் மூடப்பட்ட ரகசியங்களை (பொய்யோ.. உண்மையோ.. யாருக்குத்தெரியும்?) கரைம் த்ரில்லர் பாணியில் சொல்ல வந்த முதல் படம் த டாவின்சி கோட் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அதன் அடுத்தகட்டமாக வரும் கதைதான் இது. இரண்டுமே டான் பிரெளன் எழுதிய நாவல்களைத் தழுவி எடுக்கப்பட்டவை.. படம் பார்த்த/பார்க்கும் கிறிஸ்தவ நண்பர்கள் கதையை ஆராய்வதை விட்டுவிட்டு படத்தில் வரலாற்றின் முடிச்சுக்கள் அவிழும் விதத்தை மட்டும் பார்க்கலாமே என்பது எனது வேண்டுகோள்!!
படம் நிறைய பேர் பார்த்திருப்பீர்கள்.. படத்தின் கதை அழகாக தமிழ் விக்கிபீடியாவில் சொல்லப் பட்டுள்ளது..
17ம் நூற்றாண்டு... பூமிதான் சூரியனைச்சுற்றி வருகிறது என்ற கருத்தை கலிலியோ கலிலி முன்வைத்தார்... ஆனால் கத்தோலிக்க சமயத்தின் பிரகாரம் பூமிதான் பிரபஞ்சத்தின் மையம். அதைச்சுற்றித் தான் எல்லா கிரகங்களும் (சூரியன் உட்பட) சுற்றுகின்றன... விட்டால் இவன் சமயத்தையே பிழை கூறுவான்.. இவனது கொள்கைகள் தவறானவை என கத்தோலிக்க திருச்சபை பிரகடனப்படுத்தியதோடு அவருக்கு தண்டனையும் வழங்கியது.
சில வருடங்கள் கழித்து... கத்தோலிக்க திருச்சபைதான் நாட்டின் அதிகாரங்களைக் கொண்டிருந்தது. அரசனே பாப்பாண்டவருக்கு கீழ்தான்!! இதனால் ஜனநாயக மக்கள் முறைமை தோன்றுவதற்கான சாத்தியப்படுகள் இல்லாதிருந்தது.. மக்களுக்கு உரிமைகள் குறைவு.. திருச்சபையையும் யாரும் எதிர்க்க முடியாது.. அவர்கள் வைத்தது தான் சட்டம்!! எத்தனை நாட்களுக்குத் தான் மக்கள் பொறுத்திருப்பார்கள்???
விளைவு........?? கிறிஸ்துவ மதத்தின் பெயரால் கத்தோலிக்க திருச்சபை கொண்டிருந்த மூட நம்பிக்கைகளையும், அதிகாரத்தையும் எதிர்த்து ஒரு குழு உருவானது...The Illuminati !! இவர்களது நோக்கம்- ரோமன் கத்தோலிக்கத்தையும், பவாரியா ராஜ்ஜியத்தையும் தூக்கியெறிந்து அதற்குப் பதிலாக ஜனநாயக ஆட்சியைப் பரப்புதல்..
உலகம் அனைத்தும் ஒரே நாடு என்ற new world order கொள்கையை அவர்கள் கொண்டிருந்தனர்.
கத்தோலிக்க மதத்தின் மூட நம்பிக்கைகளை விஞ்ஞானத்தின் உதவிகொண்டு தகர்த்தெறிந்தனர்.
படத்தின்படி இந்த இல்லுமினாட்டியின் ஆரம்பகர்த்தா கலிலியோ கலிலி.. சிற்பக்கலைஞர் பெர்னினி அதன் முக்கியமான உறுப்பினர்களுல் ஒருவர்..
(ஆனால் உண்மையில் இல்லுமினாட்டி உருவானது 1776ல்... கலிலியோ இறந்தது 1642ல்... எங்கேயோ இடிக்கிறதே.. நமக்கேன் அது??)
1668ல் இல்லுமினாட்டியின் குடைச்சல் தாங்காமல் திருச்சபையினர் அவர்கள் மீது போர் தொடுத்தனர். இந் நிகழ்வு la purga என அழைக்கப்படுகிறது. இல்லுமினாட்டியின் உறுப்பினர்களைக் கைது செய்து அவர்களது நெஞ்சில் சிலுவை வடிவமாக சூடு வைத்து அனுப்பினர்... இத்தோடு அவர்கள் ஒழிந்தார்கள் என்ற நிம்மதி திருச்சபைக்கு..
ஆனால்... அவர்கள் தீர்ந்து போகவில்லை.. தலைமறைவாகினர். பரம்பரை பரம்பரையாக தலைமுறைகளைத் தாண்டி வாழ்ந்து வருகின்றனர். தங்களுக்கு நிகழ்ந்த கொடூரத்திற்கு பதிலடி கொடுக்க தருணம் பார்த்துக் காத்திருக்கின்றனர்..
நிகழ்காலத்திற்கு வருவோம்.. ஐரோப்பியன் நியூக்கிளியர் ஆராய்ச்சி மையத்தில் இதுவரை இருந்ததிலேயே மிக அதிக அன்டிமேட்டர் துகள்களைக் கொண்ட 3 குப்பிகளை பாதுகாத்து வைக்கின்றனர். 3 குப்பிகளும் வைக்கப்பட்ட இடத்திற்கு பாதிரியார் சில்வானோ, டாக்டர் விட்டோரியா ஆகியோருக்கு மட்டுமே அனுமதி உண்டு. அதுவும் பாதுகாப்புக்காக retina- scan machine பொருத்தியிருக்கின்றன. ஒரு நாள் யாரோ ஒருவன் பாதிரியார் சில்வானோவைக் கொன்று, அவரது கண்ணை வெட்டியெடுத்து, அதைப்பயன்படுத்தி ரெடினரா ஸ்கானரை ஏமாற்றி குப்பியை திருடிக் கொண்டு போய் விடுகிறான்.
அந்தக் குப்பியில் இருக்கும் அன்டிமேட்டரின் காந்தக் கொள்கைப் புலம் செயலிழந்தால் பாரிய சக்தியை உருவாக்கும். அந்த சக்தி வெளிப்படுமானால் ஒரு நகரையே அழித்துவிடுமாம்..
இலுமினாட்டிக்கு நேர்ந்தது என்ன? அன்டிமேட்டர் யாரால் திருடப்பட்டது? ஏன்?
பதிவு போடவிருக்கும் நண்பர்களே..
ReplyDeleteநான் இன்செப்ஷன், ஷட்டர் ஐலன்டுக்கு தொடர் பதிவெழுத காரணம் அவற்றை ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பார்த்து திரைக்கதையிலுள்ள சூட்சுமங்களை அறிய வேண்டும்!!
ஆனால் இது அப்படியல்ல... கதையை ஆராயும் போதே வரலாற்றையும் கொஞ்சம் நோண்ட வேண்டியிருக்கிறது.. நேரமும் அவ்வளவாக கிடைப்பதில்லை.. இதனால் இப்படி துண்டுதுண்டாக பிரித்து சிறிய பதிவுகளாய் போட வேண்டி இருக்கிறது!!
மேற்குறிப்பட்ட பதிவில் வரலாற்று ரீதியாக பிழைகள் ஏதாவது இருக்கலாம்.. (இந்த மாதிரியான விஷயங்களுக்கு நான் விக்கிபீடியாவைத்தவிர எதையும் நம்புவதில்லை)
அப்படி ஏதாவது பிழைகள் இருந்தால் தாராளமாக சுட்டிக்காட்டலாம்.
நாங்களும் கேப்புல ஹிஸ்டரிய கொஞ்சம் தெரிஞ்சுகிட்ட மாதிரி ஆயிடும்ல!!
சூப்பர் படத்துடன் வரலாறு சம்பந்தமான விஷயங்களா? அருமை நண்பரே! நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள்! நீங்கள் எப்போது எழுதினாலும் படிக்க காத்திருக்கிறோம்!
ReplyDeleteஅந்த 2 படங்களையும் பார்த்திருக்கிறேன்! நன்றாக இருக்கும் உண்மையான சில விசயங்களை கற்பனையுடன் எழுதப்பட்ட நாவல்கள் அவை என கேள்விப்பட்டுள்ளேன். இலுமினாட்டி பற்றியும் கிறிஸ்துவ மதம் தோன்றியது பற்றியும் படத்தில் சொல்வது எந்த அளவிற்கு உண்மையாக இருக்குமோ!
ReplyDeleteநண்பா...
ReplyDeleteநல்ல பதிவு..சினிமா குறித்து எழுதுவதை விட இதுபோல எழுதுவது நல்லது.
//இந்த மாதிரியான விஷயங்களுக்கு நான் விக்கிபீடியாவைத்தவிர எதையும் நம்புவதில்லை//
விக்கிபீடியா அவ்வளவு நம்பத்தகுந்ததில்லை என்பது என் கருத்து.
http://saravanaganesh18.blogspot.com/2010/08/blog-post_12.html
http://saravanaganesh18.blogspot.com/2010/08/blog-post.html
இந்த ரெண்டு பதிவையும் படித்துப்பாருங்கள். இதில் Giordano Bruno, கலிலியோ, Coppernicus குறித்து எழுதியுள்ளேன். கிறிஸ்துவ தேவாலயங்கள் குறித்தும் எழுதியுள்ளேன். ஏதாவது உங்களுக்கு உபயோகப்படுமா என்று பாருங்கள்..
@ எஸ்.கே- உண்மையோ, பொய்யோ இந்த மாதிரி படங்கள் பார்க்கும் போதுதான் நாமே சரித்திரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுற மாதிரி ஒரு பீல் கிடைக்குது...
ReplyDelete@ கொழந்த - தங்களது "மாஸ்டர் கமான்டர்" பதிவு அருமை!! உதவி செய்ய முன்வந்தமைக்கு நன்றி நண்பா!!
எப்படி இருக்கீங்க! ரொம்ப நாள போஸ்ட காணோமே!
ReplyDeleteவெட்டியாத்தான் இருக்கேன்.. ஒரே புட்பால் மேட்சஸும் வீடியோசுமா இருந்துட்டனா.. பதிவு பண்ண டைம் கிடைக்கல.. இன்னைக்கு sure வந்திரும்!
ReplyDelete