Tuesday, September 21, 2010

Toy Story 3 (2010)


படம் வந்து நாலு மாசம் ஆகுது... அப்படியா? சொல்லவே இல்லை...
டைம் கிடைக்கல, ஏனைய பதிவுகளில் பிஸி(இன்செப்ஷன் தான்..ஹி..ஹி..), வேற படங்கள் பார்த்துக் கொண்டிருந்தேன்..
இப்படி எவ்வளவு காரணம் சொன்னாலும் தப்பு தப்புதான்.. போன வாரம்தான் படம் பார்த்தேன்..

பல ஆண்டு இடைவெளிக்குப்பின் மீண்டும் டாய் ஸ்டோரி!! உலகத்திலேயே அதிக வசூல் செய்த அனிமேஷன் திரைப்படம்!!



ஓப்பனிங்கில இருந்து கடைசி சீன் வரை படம் படு கலக்கல்! எல்லாம் பிக்ஸாரின் கைவேலைதான்!!

ஆன்டிக்கு 18 வயசாச்சு.. காலேஜ் போகனும்.. இன்னுமா பொம்மைங்களோட விளையாடிகிட்டு இருப்பான்? காலேஜுக்கு கிளம்ப முதல் அம்மா அவனது அறையை அடுக்கச் சொல்கிறார். அவனும் தனது (அன்புக்குப் பாத்திரமான) வுடி பொம்மையை மட்டும் வெளியில் வைத்துக் கொண்டு ஏனைய பொம்மைகளை வீட்டுப் பரணில் வைப்பதற்காக அட்டைப் பெட்டியில் போட்டு வைக்கிறான். ஆனால் அந்த அட்டைப் பெட்டியுடன் ஆன்டியின் தங்கையின் பொம்மையான பார்பியும் தவறுதலாக குப்பைக்குள் போடப்படுகிறது.

மற்ற பொம்மைகளுக்கெல்லாம் அதிர்ச்சி!! ஆன்டிதான் குப்பைக்குள் போட்டிருக்கிறான். இனிமேல் அவனுக்கு விளையாட நாங்கள் தேவையில்லை..இனி எங்கள் எதிர்காலம் எங்கள் கையில்... என எண்ணி எல்லாப் பொம்மைகளும் "சன்னிவில்" எனப்படும் குழந்தைகள் காப்பகத்திற்கு செல்லும் ஏனைய பொம்மைகளோடு ஏறிக் கொள்கிறார்கள். வுடியும் அவர்களைப் பின் தொடர்ந்து வருகிறான்.

சன்னிவிலில் அவர்களைப் போலவே ஏராளமான பொம்மைகள்.. அவர்கள் ஆன்டியின் பொம்மைகளை அன்போடு (பலிக்கு கொண்டு வரும் கிடாவுக்கு கொடுப்பது போல்??) உபசரிக்கின்றன. குழந்தைகள் காப்பகமென்பதால் குழந்தைகள் அதிக நேரம் எங்களை வைத்து விளையாடுவார்கள்.. குழந்தைகளுக்கு வயசு ஏற..ஏற புதுப்புது குழந்தைகள் வருவார்கள் என ஆசைவார்த்தை காட்டுகிறார்கள் சன்னிவில் பொம்மைகள். வுடியோ "ஆன்டி வேண்டுமென்றே உங்களை குப்பையுள் தள்ள எண்ணவில்லை. உங்களை பரணில் வைக்கத் தான் தீர்மானித்தான். எல்லோரும் வாருங்கள்.. ஆன்டியிடமே திரும்பிச் செல்வோம்." என கெஞ்சுகிறான். ஆனால் மற்ற பொம்மைகள் ஒரேயடியாக மறுக்கின்றன.

விளைவு? வுடி தனியே விலகிச் செல்கிறான்...

சன்னிவில்லின் பொம்மைகளின் சுய ரூபம் தெரியும் போது ஆன்டியின் பொம்மைகள் அங்கிருந்து தப்பிக்க எடுக்கும் முயற்சிகள், அவர்களைக் காப்பாற்றும் வுடியின் போராட்டங்கள் கதையை கிளைமேக்ஸ் வரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்த்துகின்றன.

நூற்றுக்கும் மேற்பட்ட பாத்திரங்கள்! காட்சிகள் ஒவ்வொன்றும் அருமை.. சாதுவாக காட்சியளிக்கும் டெடி பெயாரின் வில்லத்தனங்கள்- தமிழ் சினிமா வில்லன்கள் அதன் பக்கத்திலும் நிற்க முடியாது!
பஸ் லைட்இயரும், வுடியும் சேர்ந்து மிரட்டும் அதிரடி காட்சிகளெல்லாம் இன்னொரு ஜாக்கி-ஜெட்லி தான்!



ஆன்டி சிறுவயதில் தனது பொம்மைகளுடன் சேர்ந்து விளையாடுவது போன்ற புகைப்படம்.. செம டச்சிங்!!
ஆன்டி தனது பொம்மைகளை பொன்னியிடம் விட்டுச் செல்லும் காட்சி மறக்க முடியாதது, எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது.. அந்த 3 நிமிடக் காட்சியில் டாய் ஸ்டோரியின் முதலிரண்டு பாகங்களின் நினைவுகள் எம் மனதில் ப்ளாஷ்பேக்காய் வந்து நிழலாடும். (அப்ப டாய் ஸ்டோரி 4 எடுத்தால் அது பொன்னியுடன் தானா?)

படம் பார்த்தவுடன் எமக்கும் எமது பழைய பொம்மைகளையெல்லாம் ஒரு எட்டு பார்த்து வர வேண்டும் எனத் தோன்றும்.. ஊஹும்.. இருந்தால் தானே!!

இவை எல்லாவற்றையும் தாண்டி எம்மை வியக்க வைப்பது பிக்ஸாரின் கடின உழைப்புத் தான்! அப்பப்பா.. நினைத்தாலே வியர்த்துக் கொட்டுகிறது..
பரவாயில்லை சின்னதா ஒரு ப்ரீவியூ..

இந்த படத்தின் உழைப்புக்கு முழுமுதல் காரணம் இவர்கள் நால்வரும் தான்-

லீ அன்க்றிச் - இயக்குனர்.. சாதாரணமாக அதிரடி படங்கள் எடுத்துத் தள்ளுபவர்.. இந்த ஃபீல்டுலயும் வெளுத்து வாங்கியிருக்கிறார்.




டார்லா ஆன்டர்சன் - ப்ரொடியுசர்.. பக்ஸ் லைஃப், மொன்ஸ்டர்ஸ் இன்க், கார்ஸ் படங்களைத் தொடர்ந்து பிக்ஸாருடன் நான்காவது தடவையாக கைகோர்த்து வெற்றியை அள்ளியிருக்கிறார்.




பொபி பொடெஸ்டரா - அனிமேட்டிங் மேற்பார்வையாளர்.. கம்ப்யூட்டரிலுள்ள பல்கோணி உருவங்களுக்கு உயிர் கொடுத்து திரையில் நடமாடச் செய்வது இவர்தான்.



குய்டோ குவாரொனி - தொழில்நுட்ப மேற்பார்வை இயக்குனர்.. இவரைப் பொருத்தவரை இயக்குனரின் எல்லா வேண்டுகோளுக்கும் யெஸ் சொல்லி எல்லா அனிமேஷன் மைல்கற்களையும் தாண்டிவந்த முதல் படம் இது தானாம்.


பிக்ஸாரின் 5-Step Success..

1. ஸ்கெட்சிங்- படத்திற்காக மொத்தம் 49,516 ஸ்கெட்சஸ் வரையப்பட்டதாம். இவ்வொரு புதுக் காட்சிக்கும் பிள்ளையார் சுழி இவைதான்.


2. கலர் ஸ்கிரிப்ட்ஸ்- வரையப்பட்ட ஸ்கெட்சுக்கான முதல் வடிவமைப்பு இது. இந் நிலையில் ஒவ்வொரு ப்ரேமினதும் ஸ்டைல், ஒளியமைப்பு என்பன தீர்மானிக்கப் படும்.


3. ப்ராப்பர்டீஸ்- அனிமேஷன் உருவங்கள் முப்பரிமான(3D) வடிவமைப்பில் உருவாக்கப்படுகின்றன. இந்த நிலை முடிந்தால் மட்டுமே எந்தக் கோணத்தில் காமிராவை வைத்து எடுப்பது என தீர்மானிக்கலாம்.


4. தரவுகள்- இப்பொழுது ஒவ்வொரு பாத்திரத்திற்கும் தனிக்கவனம் செலுத்தி அதன் உருவத்தை நேர்த்தியான தரவுகளுடன் உருவாக்குவார்கள். இந்த நிலை முடிந்தால் பாத்திரங்களுக்கு அசைவுகளை கொடுக்கலாம்.


5. இறுதி- ஒளி, நிழல் எனள்பவற்றைக் கொடுத்து ப்ரேமை தத்ரூபமாக்குவார்கள். இனி ரென்டரிங்..
சாதாரணமாக ஒரு ப்ரேமை ரென்டர் செய்யவே 7 மணித்தியாலங்கள் தேவைப்படுமாம். அதுவும் இந்த மாதிரியான சிக்கலான(பாத்திரங்கள் அதிகமாக உள்ள) ப்ரேம்களுக்கு 11 மணித்தியாலங்கள் வரை தேவைப்படும்.


ரொம்ப நீளமாயிருச்சு.. ரென்டு பதிவா போட்டிருக்கலாம் தான்.. பரவாயில்லை (நான் என்ன பிக்ஸார் ரேஞ்சுக்கா கஷ்டப்பட்டேன்.. இதை எழுத?)

ரேட்டிங்ஸ் (அனிமேஷன் படம் என்பதால் கொஞ்சம் வித்தியாசமாக),

பாத்திரங்கள்- 20
அனிமேஷன்- 20
பின்னணித் தரவுகள்- 19
கதை+திரைக்கதை- 19
இயக்கம்- 19

மொத்தம்- 97% அசத்தல்!

9 comments:

  1. அட நீங்க வேற நான் இன்னும் டாய் ஸ்டோரி 2 -வே பார்க்கலை! :-) உங்க கிட்ட பிடிச்சது படத்தின் கதையை விட அதன் தொழிற்நுட்ப விஷயங்கள விளக்கமா சொல்றீங்களே அதான்!

    ReplyDelete
  2. கருத்துக்களுக்கு நன்றி எஸ்.கே

    ReplyDelete
  3. கஜாகரன்September 24, 2010 at 3:07 AM

    சூப்பர் விமர்சனம் தல! பிக்ஸார் உழைப்பு பிரமிக்க வைக்குது!!

    ReplyDelete
  4. @கஜாகரன்- நன்றி..தொடர்ந்தும் விசிட் பண்ணுங்க!!

    ReplyDelete
  5. மிகவும் நல்ல விமர்சனம்

    ReplyDelete
  6. Superda maamu 1 2 3 fouru

    ReplyDelete
  7. //மொத்தம்- 97% அசத்தல்!//

    எதிர் பார்த்தது தான்

    ReplyDelete

Related Posts with Thumbnails