Saturday, September 18, 2010

Inception (2010)-4

இன்செப்ஷனோட இறுதிக் காட்சி பற்றி உலகத்தின் எல்லா மூலை முடுக்குகளிலிருந்தும் பலவிதமான தியரிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. சிலபேர் காப் நிஜமான உலகத்துக்கு திரும்பி அவனது பிள்ளைகளை சந்தித்தாக சொல்கிறார்கள். சிலபேர் அதுவும் ஒரு கனவுதான் என்கிறார்கள். இன்னும் சிலபேர் படம் முழுதும் காப்போட கனவுதான் என்கிறார்கள்.

படத்தை உற்று நோக்கும் போது சாய்டோவும், காப்பும் லிம்போவிலிருந்து எழும்பிவரும் சீனைத் தொடர்ந்து வரும் எல்லாக் காட்சிகளுமே ரசிகர்களின் யூகத்துக்கும், சுய சிந்தனைக்கும் விடப்பட்டுள்ளன. குறிப்பாக அதற்குப் பின்னால் வரும் எல்லாக் காட்சிகளிலும் உரையாடல்களே இடம்பெறவில்லை. காப் தொடர்ந்தும் கனவு காண்கிறானா? க்ரூப் மெம்பர்களும், குடும்பமும் விம்பங்கள் தானா? அல்லது அவன் நிஜமாகவே வேலையை முடித்துக் கொடுத்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளானா? இந்தக் கேள்விகளெல்லாம் நோலனுக்குத் தான் வெளிச்சம். இருந்தாலும் ஒருசில ஆதாரங்களின் அடிப்படையில் அலசுவோம்.



* சாய்டோவால் ஒரேயொரு போன் காலைப் போட்டு காப்பின் பிரச்சனைகள் எல்லாவற்றையும் தீர்த்து வைக்க முடியுமா?

பணம் இருக்கும் கையில் தானே அதிகாரமும் இருக்கும். நம்மூரில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் பணத்தைக் கொடுத்து சட்டங்களை வளைக்கலாம்.


* காப்பின் தந்தைக்கு காப் வருவது பற்றி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதாக படத்தில் காட்டப்படவில்லையே.. ஆகையால் அவர் காப்பின் விம்பமாக இருக்கலாமே?

இருக்கலாம் தான். ஆனாலும் இது பிளான் பண்ணப்பட்ட ஒரு திட்டம். எனவே கண்டிப்பாக விமான நிலையத்தில் வந்திறங்கும் போது கூட்டிச் செல்வதற்காக தந்தை அழைத்திருக்கப் பட்டிருப்பார். அப்படி முன்கூட்டியே அழைத்திருக்காவிட்டாலும் விமானத்தில் போன் இருக்கிறது. அதனால் சுலபமாக கால் செய்து அழைத்திருக்கலாமே..


* படம் முழுக்க காப்பின் கனவாக இருக்கலாமே, நிஜ உலகம் இருந்தது என்பதற்கான திட்டவட்டமான ஆதாரங்கள் இல்லையே?

ஏன் இல்லை! படத்தில் சில தடவைகள் காப்பின் பம்பரம் சுற்றிவிட்ட பின் விழுந்ததே... அது மட்டுமல்லாது பழைய கனவு சீன்களில் காப் கையில் wedding band அணிந்திருப்பார். சில சீன்களில் band இருக்காது. அப்போ band இல்லாத சீன்களெல்லாம் கனவாக இருக்கவும் வாய்ப்புக்கள் உண்டு.


* காப் மாலின் டாட்டமை உபயோகப்படுத்துவதால் ஒருவேளை அவரது கணிப்புகள் பொய்யாக இருக்கலாம் அல்லவா?

அந்த டாட்டமை (பம்பரம்) உபயோகப்டுத்த தெரிந்தவர்கள் மாலும், காப்பும் தான். மால் இறந்து விட்டதால், டாட்டம் பற்றிய உண்மையான விபரங்கள் தெரிந்த காப்பும் அதைப் பயன்படுத்துகிறான். அவன் பயன்படுத்துவதால் டாட்டமின் செயல்திறன் ஒன்றும் கெட்டுப் போக போவதில்லை.


* காப் திரும்பி வரும் பொழுது அவனது குழந்தைகள், அவனது நினைவுகளில் இருந்த குழந்தைகள் அணிந்திருந்த அதே ஆடைகளைத் தானே அணிந்திருக்கிறார்கள். அப்படியானால் அவர்கள் காப்பின் விம்பங்கள் தானே?

அவர்கள் ஒரே ஆடைகளைத் தான் அணிந்திருக்கிறார்கள், ஆனால் அவர்களது செருப்புக்கள் வேறுபட்டுள்ளன. IMDB ஐ பார்த்தீர்களானால் அதில் 2 விதமாக குழந்தைகளுக்கான நடிகர்களைப் பிரித்து கூறியிருக்கிறார்கள். பிலிபியாவுக்கு 3 மற்றும் 5 வயது பிள்ளையாகவும், ஜேம்சுக்கு 20 மாத மற்றும் 3 வயது பிள்ளையாகவும் நடித்திருப்தாக குறிப்பிட்டுள்ளார்கள்.




* கடைசி சீனில் காப் சுற்றி விட்ட பம்பரம் சுற்றிக் கொண்டே இருந்ததா, அல்லது சீன் கட்டாகும் போது விழும் நிலையில் இருந்ததா?

அதை நீங்களே யூகித்துக் கொள்ள வேண்டியதுதான். தெளிவான பதில் யாரிடமும் இல்லை.வேண்டுமானால் படத்தை இன்னுமொருமுறை பாருங்கள்....





படத்தின் ஆரம்ப சீன்களில் காப் தனியாக ஹோட்டல் அறையொன்றில் உட்கார்ந்து பம்பரத்தை சுற்றிவிட்டு கையில் துப்பாக்கியோடு நிற்கிறான். பம்பரம் சுற்றிக் கொண்டே இருந்தால் துப்பாக்கியால் தன்னை சுட்டுவிட்டு கனவைக் கலைத்துவிடுவான். அந்த அளவு நிஜத்தையே நாடிக் கொண்டிருப்பது அவனது இயல்புகளில் ஒன்று.

படம் முழுக்கவும் பம்பரத்தை சுற்றிவிட்டே தீர்மானத்தை எடுத்துக் கொள்வதாக காட்டப்பட்டிருக்கிறான். எனினும் இறுதிக் காட்சியில் பம்பரத்தை சுற்றிவிட்டு தீர்வைக் கவனிக்காமல் குழந்தைகளைப் பார்க்க போய்விடுகிறான். அவன் அந்த மனநிலையில் அவன் எது ரியாலிட்டி என்றோ, இன்செப்ஷன், பிரித்தெடுப்பு பற்றியோ கணக்கெடுக்வேயில்லை. அவனுக்கு வேண்டியதெல்லாம தனது குழந்தைகளுடன் நிம்மதியான ஒரு வாழ்க்கை.
அது கனவுலகமாயிருந்தாலும் சரி, நிஜ உலகமாயிருந்தாலும் சரி...

The lesson is over. any doubts?..

தொடரும் முடியுது, கடைசியில் வாக்குப் பெட்டியிலும் இன்செப்ஷன் தான் முதலிடத்தில் இருக்கிறது... ஆஹா!!

இப்போ ரேட்டிங்ஸ்,

நடிப்பு = 18
இசை = 17
கலை+ஒளிப்பதிவு = 18
கதை+திரைக்கதை = 20
இயக்கம் = 19

மொத்தம் = 92% அசத்தல்!!
THANX TO - SCREENRANT.COM

11 comments:

  1. கஜாகரன்September 21, 2010 at 2:29 AM

    பதிவு சூப்பர்!! நோ டவுட்ஸ்...

    ReplyDelete
  2. கருத்துக்கு நன்றி கஜாகரன்!

    ReplyDelete
  3. உண்மையில் அருமையான பதிவு....
    ஒரு படத்திற்கு Stanley Kubrick பிறகு christber nolan திரைக்கதை அலச எத்தனை தொடர் பதிவு எழுதினாலும் அது முழுமை ஆகாது. அந்த அளவுக்கு திரைக்கதையில் அதிக விசயம் பார்வையாளர்களுக்கு வைக்கப்பட்டிருக்கும். இதை எத்தனை பேர் புரிந்துக் கொண்டார்கள் என்பது அவர்களின் அறிவினைப் பொறுத்ததே....

    ReplyDelete
  4. சரியாகச் சொன்னீர்கள்!! நானும் ஏதோ புரிந்து கொண்டேனே தவிர, முழுமையாகப் புரிந்து கொள்ள இன்னும் ஏழெட்டுத் தடவை படத்தை உற்றுக் கவனித்தால்தான் முடியும்..

    ReplyDelete
  5. cob's children's not in same dress. cob has no totum the ring is his totum .then cob already lot of time in limbo. it's easy to come out for him. i see the film 8 times.

    ReplyDelete
    Replies
    1. //cob has no totum the ring is his totum //
      பாஸ், நான் பம்பரம் மாலினுடையது என்றுதான் சொல்லியிருக்கிறேன்.. ஆனால் நீங்கள் குறிப்பிடுவது போல படத்தில் மோதிரம் ஒரு டாட்டம் என்றோ, அதை எப்படி உபயோகிப்பது என்றோ எங்கும் வெளிப்படையாக குறிப்பிடவில்லை..

      //cob already lot of time in limbo. it's easy to come out for him//
      Agreed.. நான் இல்லைன்னு சொல்லலையே..

      //cob's children's not in same dress.//
      இதுதான் சின்ன ப்ராப்ளமா இருக்கு.. இன்னொருவாட்டி பார்த்து கன்ஃபார்ம் பண்ணிக்கறேன்..

      Delete
  6. இவ்வளவு விலாவாரியா கலக்கிட்ட மச்சி சூப்பர் பதிவு

    ReplyDelete
  7. இந்த பதிவில் கமண்ட் பண்ணனும்னு ரொம் நாள் ஆசை

    என்ன பெருத்தவரையில் உங்களது பெஸ்ட் பதிவு இது

    கலக்கிட்டீங்க...!!!

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி நண்பா!! உங்களைப் போன்றவர்களின் ஊக்கம்தான் எனக்கே தோளில் ஒரு கை தட்டிக் கொடுப்பதைப் போலிருக்கிறது!

      * இந்தப் பதிவுக்கு முழு க்ரெடிட்டும் நான் எடுத்துக்க மாட்டேன்.. முதல் தடவை பார்த்து விளங்காமல் போனதால், நெட்டெல்லாம் தேடி விளங்கி மறுபடியும், மறுபடியும் பார்த்து தெரிந்து கொண்டு பின் அதைப் பகிர்ந்த பதிவுகள்தான் இன்செப்ஷனும், பிரைமரும்.. அதன் க்ரெடிட்டெல்லாம் நெட்டையும், என் நெட் சேர்வீஸ் ப்ரொவைடரையுமே சேரும் :)

      Delete
  8. எனக்கு ஒரு சின்ன சந்தேகம்..... லெவல் 3- பனிக் கோட்டை இல் ஃபிஷெர் தான் கனவு கான்பவர் என்று நினைக்கிரென்...............

    ReplyDelete

Related Posts with Thumbnails