லியனார்டோ டிகாப்ரியோ நடித்த படங்களை பிடித்த வரிசையில் அடுக்கச் சொன்னால் டைட்டானிக், இன்செப்ஷனுக்குப் பிறகு இந்தப் படத்தைத் தான் தேர்ந்தெடுப்பேன். படம் ரிலீசான ஒரு மாதத்திலேயே படம் பார்த்துவிட்டேன். ஆனால் அப்போது என்னால் கதையை முழுதாக விளங்கிக் கொள்ளவில்லை. படத்தை இரண்டாவது தடவையாகப் பார்க்கும் போது தான் குழப்பம் தீர்ந்தது...
இப்படம் டென்னிஸ் லிஹேனால் எழுதப்பட்ட
shutter island நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட, ஸ்கார்சேஸி-டிகாப்ரியோ கூட்டணியில் உருவாகும் 2வது படமாகும். இந்தப்படத்தை முதல்தடவை பார்க்கும் போது ஒருமாதிரியும், 2ம் தடவை பார்க்கும் போது வேறு மாதிரியும் தென்படும்... அதாவது ஒரே கல்லுல ரென்டு மாங்கா!!
குழப்புகிறதா?.... படத்தின் கதை ஒன்று தான். ஆனால் முதல் தடவையின் போது ஹீரோவின் பார்வையிலும் (கிட்டத்தட்ட 1st person view)
2வது தடவை ஹீரோ தவிர்ந்த ஏனைய பாத்திரங்களின் பார்வையிலும் (இது 3rd person view) படத்தை அனுபவிப்பீர்கள்..