Thursday, April 26, 2012

டிம்மும் டெப்பும் - 5

தன்னோட ரெண்டு படங்கள், ஒரு பில்லியன் வசூலைத் தாண்டி விட்டதாலோ என்னவோ.. ஜானிக்கு வித்தியாசமான ஐடியா ஒன்று மனதில் உதித்தது!!
"நாமளே காசு போட்டு படங்களைத் தயாரிக்கத் தொடங்கினால் என்ன?"

முதன் முதலில் இறங்குவதால், பாதுகப்பாக கூட்டுத் தயாரிப்பில் இறங்குவோம்.. அதுவும் நம்ம படத்திலிருந்தே ஆரம்பிப்போம்னு ஜானி முடிவு செய்த படம் தான் 2011ல் ரிலீசான The Rum Diary!.. சொந்தக் காசை காப்பாத்தனுமேங்கறதுக்காக, ஜானி தனது நடிப்பால் படத்தை எவ்வளவோ உயர்த்தி விட்டும், மோசமான இயக்கத்தின் காரணமாக படம் தோல்வியடைந்தது! படம் பட்ஜெட் வெறும் 45 மில்லியனாக இருந்ததால், நல்ல வேளையாக ஜானிக்கு நட்டம் இரண்டரை மில்லியனோடு நிறுத்தப் பட்டுக் கொண்டது!

Monday, April 23, 2012

டிம்மும் டெப்பும் - 4

மியூசிக்கல் அனிமேஷன் படமான corpse bride வெற்றியடைந்ததை தொடர்ந்து, "அனிமேஷன் இல்லாமல் முழு நீள மியூசிக்கல் படம் எடுத்தா என்ன?" ங்கற ஐடியா பர்ட்டனோட மூளையில் உதிச்சது.. The Killers என்கிற இசைக்குழுவின் Bones அப்படீங்கற பாட்டுக்கு, வீடியோவை இயக்கிக் கொடுத்தாரு.. (வீடியோ கீழே..) அது அவருக்கு பிடிச்சுப் போகவே, தனது நீணட நாள் கனவொன்றை நனவாக்கும் முயற்சியிலிறங்கினாரு..

Friday, April 20, 2012

டிம்மும் டெப்பும் - 3

டிம் என்ன பண்ணிக்கிட்டிருந்தாரு??.....
ரொமான்ஸ் பண்ணிக்கிட்டிருந்தாரு. வேற என்ன பண்ணுவாரு.. ஏன்னா, அதான் வாலிப வயசாச்சே..

ஜானி டெப்புக்கு அப்புறம், டிம் பர்ட்டனோட சேர்ந்து அதிக படம் பண்ணியது யாரு தெரியுமா? Helena Bonham Carter..
Planet of the Apes படத்துக்காக, ஆரி-ங்கற பிரதான பெண் குரங்கா நடிக்க வைப்பதற்கு ஆள் தேடினப்ப, இவங்க பர்ட்டன் கண்ணுல பட்டாங்க. இந்தப் படம் செய்யும் போதுதான் இவங்களுக்குள்ள மெல்லக் காதல் துளிர்த்தது... (அப்போ டிம்முக்கு வயது 45, ஹெலனாவுக்கு 37..)

Thursday, April 19, 2012

டிம்மும் டெப்பும் - 2

Ed Wood தோல்வியடைந்திருந்த போதிலும், ஜானி டெப்புக்கு வாய்ப்புக்கள் சரளமாக வந்துகொண்டேயிருந்தன.. அடுத்த 5 வருடங்களில் 8 படங்கள் நடித்துக் கொடுத்தார்.. அதிலே மிக முக்கியமான career-turning படம் 'Donnie Brasco'.. இன்னொரு ப்ளாக்பஸ்டர் படம்!
Undercover வேலையில் இறங்கிக் கலக்கிய FBI ஏஜென்டின் கதை.. மாஃபியா, ஆக்ஷன் எல்லாம் ஜானிக்கு புதுசுன்னாலும் தன்னோட திறமையை வெளிப்படுத்தி, எந்தவொரு ரோலிலும் நடிக்கும் திறமை தனக்கு இருக்குன்னு நிரூபிச்சுட்டாரு! ஜானியோட திறமை அவரை ரோமன் பொலான்ஸ்கியோடு சேர்ந்து படம் செய்யும் அளவுக்கு (The Ninth Gate) கூட்டிட்டு போக, ஹாலிவுட்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் நாயகர்களில் ஒருவனாக மாறிப் போனான்..
இவரு கதை இப்படிப் போக அங்கே..
Related Posts with Thumbnails