Saturday, February 8, 2014

I'm a Blogger man & Never Let Me Go (2010)


ஒரு வருஷம்... அதுக்கும் மேல ஆயிருச்சு பதிவு எழுதி. Compose பகுதிக்கு வந்து பார்த்தால் ஏதோ பல மாற்றங்கள் நடந்திருக்க மாதிரியும், எல்லாத்தையும் முதல்ல இருந்து தொடங்கற மாதிரியும் ஒரு பிரமை!

ஒரு படத்தை பார்த்து, ஃபீல் பண்ணி யோசிச்சு, யோசிச்சு பதிவு எழுதுவோம். நல்லதோ, மொக்கையோ சில கமெண்டுகள் வரும். அதுக்கு பதில் கமெண்டுகள் எழுதுறதும், மத்தவங்களோட பதிவுகளை படிக்கறதுமாவே இருக்கப்போ நமக்கும் கொஞ்சம் எனர்ஜியாகி அடுத்தடுத்து பதிவுகள் போடுறதுக்கு ஒரு மோட்டிவேஷன் கிடைக்கும். அப்புறம் ரெண்டு, மூணு பேர் மாயமாகிருவாங்க.. நம்ம கடையும் சைலண்டாகிடும்.  சின்னதா ஒரு பிரேக் எடுத்துக்குவோம்னு நெனைச்சு கழண்டுக்கிட்டா அது சில, பல மாதங்களாகி கடைசியில ஒரு வருஷமாவும் ஆயிடுச்சு..

நிறையப்பேருக்கு பிளாக்கிங் மேல இருந்த ஆர்வம் குறைஞ்சிடுச்சுன்னு நினைக்குறேன். சில பேர் தனி டொமெய்ன் வாங்கிகிட்டு போயிட்டாங்க. சில பேரோட வலைகள் பல வருடங்களாவே தூங்கிக்கிட்டிருக்கு. சில பேர் அவங்க கடையை எந்த தடயமுமே இல்லாம காலி பண்ணிக்கிட்டாங்க...
ஒரு காலத்துல ரெண்டு நாள் பிளாக்கர் வராமல் போனாலே ஐந்தாறு தடவை Dashboardஐ Scroll பண்ணித்தான் விட்ட இடத்துல இருந்து வாசிக்க முடிந்தது. இப்போ நாள்கணக்குல டேஷ்போர்ட் அப்டேட் ஆனாம கிடக்குறதைப் பார்க்கிறபோது மனசோரம் சின்னதா ஒரு கவலை துளிர்விடுது. :( Facebook, Twitter எல்லாம் போய் பார்த்திருக்கேன். இருந்தாலும் Blogger தரும் சுகமே தனி என்று தான் சொல்லவேண்டும். பத்து போட்டோ ஷேர் பண்ணுறதைக் காட்டிலும், உருப்படியா யோசிச்சு பத்து வரி எழுதி பதிவேத்துறதுதான் மனசுக்கு ஒரு நிறைவைக் கொடுக்குது. lol எனும் ஒற்றைச்சொல் கமெண்டை விட, 'வடை' எனும் டெம்ப்ளேட் பதிலைத்தான் மனமும் எதிர்பார்க்குது.ஹி..ஹி.. நாமதான் எதுவுமே பண்ணலைன்னாலும் சில மக்கள் நம்ம வலைப் பக்கமா தடுக்கி வந்துகிட்டேதான் இருக்காங்க. நேற்று கூட 34 ஹிட்ஸ் வந்திருக்கு. என்னவென்று சொல்ல இந்த நல்ல உள்ளங்களை?
பதிவெழுத வந்த இந்த குறுகிய காலத்துல எனக்கு கிடைச்ச இந்த சின்ன ஆன்லைன் நட்பு வட்டாரமும், மகிழ்ச்சியான தருணங்களும், அனுபவங்களும் அலாதியானது. நமக்கு இவ்வளவும் கொடுத்த பிளாக்கரை நாமே உதாசீனப்படுத்தலாமா? அதான், மகிழ்ச்சியோடு ஒரு ரீ-என்ட்ரி கொடுக்கிறேன்!

இடைப்பட்ட மாதங்களில் நான் பல படங்களைப் பார்த்துவிட்டேன். நண்பர்களின் முந்தைய ரெக்கமெண்டேஷன்களாக இருந்த நிறையப் படங்களை டிக் செய்தாயிற்று!! சில படங்கள் பார்த்தவுடனே பதிவெழுதி விடவேண்டும் போல் இருக்கும். ஆனால் கூகுள் பண்ணிப் பார்க்கும் போது வேறொருவர் அதை அறிமுகப்படுத்தி வைத்திருப்பார். அவரது பதிவில் 'நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்' என்பது போல எல்லாம் செப்பனிட்டு டக்கராக இருக்கும். அப்புறம் வந்த வழி திரும்பிட வேண்டியதுதான். இன்னும் சில காரணங்களாலும் நானே எனக்கு சில விதிகளைப் போட்டுக்கொள்ளப் போகிறேன்.
1. ஏற்கெனவே பலராலும் அறிமுகப்படுத்தப்பட்ட படங்கள் கட்.
2. படம் பார்த்த உடனே சுடச்சுடப் பதிவேற்றுவது கட்.  (இது என்னுடைய சிறிய அனுபவத்திலிருந்து. இப்படி நான் ஏற்கெனவே எழுதிய பல பதிவுகளைப் பின்னர் சாவகாசமாக படித்துப் பார்க்கும் போது படத்தை நான் வெகுவாக Overrate செய்து எழுதுவது புரிகிறது. அதனால் படம் பார்த்து சில நாட்களுக்குப் பின்னும் அதன் தாக்கம் இருந்தாலேயே அதைச்சுற்றி பதிவைப் பின்னுவதாக முடிவெடுத்துள்ளேன். நான் தியேட்டரில் பார்க்கும் படங்களுக்‌கு மட்டும் இங்கே விதிவிலக்கு)
3. ரேட்டிங்ஸும் படத்தின் overall பாதிப்பு /entertaining தன்மையைப் பொறுத்தே (டைரக்ஷன், கதை என்று எனக்கு நானே பல்பு கொடுத்துக்கொள்ளும் நிகழ்வுகள் இனியும் அரங்கேறா..)
4. ஒரு லைட்டான ஷெட்யுல் வைச்சிருக்கேன். மாதம் மினிமம் 2 பதிவுகள். படங்கள் கிடைக்காமல் போகும் பட்சத்திலும் விட்டுப்போகாமல் இருப்பதற்காக 5 அல்லது 6 பதிவுகள் கொண்ட தொடர்களை தொடங்கலாமென்று நினைக்கிறேன்.
அம்புட்டுதேன்...

அப்புறம், நம்ம கடையில் இந்த வாரம் முழு  Feedback வாரமாக அறிவிக்கப்படுகிறது.
ஷெட்யுல், தொடர்பதிவு குறித்த கருத்துக்கள், ஆலோசனைகள் தேவை. நான் எழுதும் பாணியில் உள்ள குறைகள், பிளாகின் டெம்ப்ளேட்டில் உள்ள குறைகளை ப்ளீஸ் சுட்டிக் காட்டவும். எழுத்து அளவு, பேக்ரவுன்ட் கலர் அது, இதுவென்று எதுவாக இருந்தாலும் எழுதித் தள்ளவும். கன்ஸிடர் செய்யப்படும்.
:-D

அப்புறம் சுயபுராணமே நீண்டுவிட்டதால் இத்தோடு போதும் என்று உங்களை அனுப்ப என்னால் தயவு தாட்சண்யம் காட்ட முடியாது. (பாதிப்பேர் ஏற்கெனவே எஸ்ஸாகி விட்டதையும் என்னால் ஊகிக்க முடிகிறது)
 கடைக்கு வந்தவுங்க சாப்பிட்டே ஆகனும்.. ஆங்!
----------------------------------------------------------------------------------------------------------

நான் திருப்பி வந்து எழுதும் போது ஒரு நல்ல படத்தோட தான் ஆரம்பிக்கனும்னு நினைச்சிருந்தேன். Hachi பார்த்தவுடனேயே எழுதித் தீர்த்துவிட வேண்டும் போலிருந்தது. ஆனாலும் நண்பர் டோஹா டாக்கீஸ் ஏற்கெனவே அதைப் பதிவிட்டதால் முயற்சியைத் தள்ளிப்போட்டேன். காத்திருப்புக்கு ஏற்ற பலன் போல செமையாக இந்தப் படம் மாட்டியிருக்கிறது.
2010.. எனது சினிமா ரசனைகள் நல்லவிதமாக மாறிய காலம். அப்போது வந்த எல்லா நல்ல படங்களையும் துருவித் துருவிப் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்தப் படம் எந்த சந்துக்குள்ளாக கை நழுவிப் போனதென்றே தெரியவில்லை. இப்போதுதான் இந்தப் படத்தை பார்க்கும் பாக்கியம் கிட்டியுள்ளது.

Kathy H. எனும் பெண் சிகிச்சைக் கூடத்திற்கு வெளியில் இருந்து கண்ணாடி வழியாக ஆப்பரேஷனுக்காக படுத்துக்கிடக்கும் இளைஞனின் முகத்தைப் பார்க்கிறாள். அவன் கண்களில் வலிகளுக்கு நடுவே ஒரு புன்னகை எட்டிப் பார்க்கிறது. அந்த வசீகரப் புன்னகை அவள் பார்வையில் பட்டதும், அவள் எண்ணவோட்டங்கள் வாயிலாக அவளது கடந்த காலம் நம் கண்முன்னே விரிகிறது. Hailsham Boarding Schoolல் ஒன்றாகப் படிக்கும் ஆதரவற்ற குழந்தைகளான Kathy, அவ் இளைஞன் Tommy மற்றும் Ruth எனும் அவளின் தோழி. இம் மூவரின் மாறுபட்ட வாழ்க்கையும், வலிகளும், காதலும் குழந்தைப் பருவம் தொடக்கம் இளமைப்பருவம் வரை காட்டப்படுவதே கதை......................
படம் பார்த்திராதவர்களுக்கு இவ்வாறு நான் முடிப்பதே பொருத்தமாயிருக்கும்.
 மெயின் கதை இதுவல்லவென்பதே நிஜம். கதையின் மையக்கருவை சொல்லிவிடுவது உங்களுக்கு படத்தை spoil பண்ணிவிடக்கூடும் என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன், சாரி..

படத்தைப் பார்க்கவிருக்கும் நண்பர்கள் ஆர்வமிகுதியால் IMDB, Wikipedia தளங்களில் போய் தேட வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறான படங்களை எந்தவித முன்னறிவுமின்றி, எதிர்பார்ப்புமின்றிப் பார்ப்பதே உசிதம்!
Hailsham, Cottages, Completion என மூன்று அத்தியாயங்களாக நிகழும் இக் கதை கஸுவோ இஷிகுரோவின் நாவலின் தழுவலாகும். இந் நாவல் பிரபல 'டைம்' சஞ்சிகையால் 2005ன் சிறந்த ஆங்கில நாவலாக தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஆகவே தரமான கதைக்கு இதோ உங்கள் கியாரண்டி! :)
நாவல் வாசித்தவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை. வாசிக்காதவர்களை நிச்சயம் பிரமிப்பில் ஆழ்த்தும்.

மூன்று கதாப்பாத்திரங்களாகவும் Carey Mulligan, Andrew Garfield, Keira Knightley பணியை செவ்வனே செய்திருக்கிறார்கள். குறிப்பாக ஆன்ட்ரு தனக்கே அளவெடுத்து செய்த கதாப்பாத்திரம் போல அதகளப்படுத்துகிறார். கேரியும், முன்பு Great Gatsbyயில் பார்க்கும் போது பிடிக்காமல் போனவர் இதில் பிடிக்கிறார். முன்பை விட அழகாகவும் தெரிகிறார்!
படத்தின் மிகப்பெரிய பலமே ஒளிப்பதிவுதான். லொக்கேஷன்களும், கேமிரா கோணங்களும் இதைவிட அருமையாக வேறு படத்தில் பார்த்திருக்கக் கூடியதற்கான சாத்தியக்கூறுகள் சொற்பமே. முழுப் படமும் ஒரு இதமான தென்றலைப் போல வருடிச் செல்கிறது.

கதை, நடிப்பு, இயக்கம், இசை, எல்லாவற்றையும் விட ஒளிப்பதிவு எல்லாமே சேர்ந்து உயர்தரத்தில் இருக்கும் போது சில திரைப்படங்கள் சினிமாப் படம் என்பதையும் தாண்டி, சினிமா எக்ஸ்பீரியன்ஸாக மனதில் நிலைகொள்ளும். இதுவும் என்னைப் பொறுத்தவரையில் அதே கேட்டகரிதான். படம் கண்டிப்பாக எல்லோரும் பார்க்க வேண்டும் 10ல் 9 பேருக்காவது பிடிக்கும். மீதியிருக்கும் ஒருவருக்கு ஒளிப்பதிவு மாத்திரமே worth the time ஆக இருக்கப் போவது உறுதி!!

ரேட்டிங் -81%

Never Let Me Go (2010) on IMDb

* நண்பர்கள் ராஜ், குமரன், உலக சினிமா ரசிகன் ஆகியோருக்கு என் ஸ்பெஷல் நன்றிகள். உங்கள் கமெண்ட்களே இப் பதிவின் மூலாதாரம்!

22 comments:

 1. ரொம்ப அருமையான விமர்சனம் நண்பரே..ஒரு வருஷம் ஆனாலும் உங்களோட விமர்சன நடை குறையவே இல்ல..வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி நண்பா!!

   Delete
 2. Welcome back..
  படம் பாத்துட்டன் ஆனா எனக்கு எதோ கொஞ்ம் மொக்கையா இருந்திச்சி... அப்பால தல படம் வந்துருக்கு பாத்துட்டீங்களா.. அதான்... வால் ஸ்ட்ரீட்

  ReplyDelete
  Replies
  1. உங்க டேஸ்டுக்கு இல்லையா, ப்ரோ? வால் ஸ்ட்ரீட் இன்னமும் பார்க்கலை தல. கொஞ்சம் வெயிட் பண்ணித்தான் தரிசனம் கிடைக்கனும்னு எனக்கு எழுதி வைச்சிருக்கு... நீங்க பார்த்தாச்சா? படம் எப்படி?

   Delete
  2. அதகளம்.. அத நான் சொல்லியா தெரியனும்.

   Delete
 3. உங்க ப்ளாக் பேரை என் ப்ளாக் ரோல்-ல போட்டு வச்சிட்டு என்னிக்காச்சும் அப்டேட் வருதானு பாத்துட்டே இருப்பேன்.. வரவே வராது.. இன்னிக்கு ஓப்பன் பண்ணா உங்க ப்ளாக் டாப்ல வந்து நிக்குது.. சந்தேகத்தோடயே வந்து பாத்தா, நீங்க ரீ-என்ட்ரி ஆகிருக்கீங்க.. சூப்பர். தொடர்ந்து எழுதுங்க தல..!!

  அப்றம் ஒரே ஒரு சஜஷன்.. மாதம் 2 பதிவுங்கறதுக்கு பதிலா, உங்களுக்கும் வேணாம் எங்களுக்கும் வேணாம்.. வாரத்துக்கு ஒரு பதிவுனு வச்சிக்கோங்க.. :) :)

  அப்றம் எனக்கும் உங்களப்போல தான்.. ஃபேஸ்புக்ல என்னதான் போஸ்ட் போட்டாலும், ப்ளாக்ல எழுதுற சொகமே தனிதான்.. :)

  நெவெர் லெட் மி கோ - இன்னும் பாக்கல தல.. இனிமே தான் பாக்கனும்..!!

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப தேங்க்ஸ் நண்பா. நான் எழுதாத போதும் உள்ள பல பதிவுகள் படிச்சுட்டேதான் இருந்தேன். உங்க சைட்டுக்கும் (கில்லாடி ரங்கா) வந்து இரண்டாம் உலகம், தமிழ் மொக்கைப்படங்கள் லிஸ்ட் வாசிச்சிருக்கேன். மாதம் 5,6 பதிவுன்னு கட்டவிழ்த்து விட்ட ரேஸ் குதிரை மாதிரி அதகளப்படுத்தியிருக்கீங்க. நாம அந்த ஸ்பீடுக்கு கிட்டப் போவது எட்டாக்கனியே :)
   உங்கள் அறிமுகமும் நட்பும் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி!!

   Delete
 4. ஆக்சுவலி, ஒரு வருஷமா ஆளை காணோமேன்னு என் ப்லாக்ரோல்ல இருந்து உங்களை தூக்கிட்டேன். இதோ மறுக்கா ஆட் பண்னுறேன். WElcome back

  ReplyDelete
  Replies
  1. தேங்க் யு தல. உங்கள் வருகையில் நம்ம கடை பெருமை கொள்கிறது. :)

   Delete
 5. தல,
  உங்களப்பத்தி ஃபேஸ்புக்ல நிறையப் பேரு கேட்டுனே இருக்காங்க.. உங்க ஃபேஸ்புக் ப்ரஃபைல் லிங்க் கொடுங்க.. அல்லது நீங்க யாருனு ஒரு அறிக்கை விடுங்க தல.. :)

  ReplyDelete
  Replies
  1. //அல்லது நீங்க யாருனு ஒரு அறிக்கை விடுங்க தல.. :)//
   அறிக்கையா?.... :P இந்த அறிக்கைலாம் ஒரு நாள் வரும். ஆனா அதுக்கான நாள் இது இல்லை ப்ரோ.. அதுவரைக்கும் Dr.Jekyllம் Mr.Hydeம் பிரிந்தே இருப்பார்கள்..

   பதிவுலக நண்பர்களுடன் டச்ல இருக்கலாமேனுதான் g+ல சேர்ந்தேன். அப்புறம் inactive-ஆவே இருந்துட்டேன். இதோ உங்களை வட்டத்துக்குள்ள சேர்த்துக்குறேன். அங்க கான்டாக்ட் பண்ணலாம் :)

   *//உங்களப்பத்தி ஃபேஸ்புக்ல நிறையப் பேரு கேட்டுனே இருக்காங்க..//
   இந்த பிட்டு நம்பும்படியாவே இல்லையே.. :)

   Delete
  2. //*//உங்களப்பத்தி ஃபேஸ்புக்ல நிறையப் பேரு கேட்டுனே இருக்காங்க..//
   இந்த பிட்டு நம்பும்படியாவே இல்லையே.. :) // அட சத்தியமா ஜீ... நம்ம டைம் லைன்லயே இருக்கு... போயி பாருங்க... பப்ளிக்குட்டியா போய் கேட்டு இருக்கேன்... எனிவே...

   உங்க பதிவுகள்ள பிடிச்சது... டிம் பர்டன் ப்ளஸ் ஜானி டெப்...

   Delete
 6. நான் பார்த்திட்டன்,,என்னோட ஓல் ட்டைம் பேவரிட் மூவி பாஸ்.. காரே முல்லிகன் ஓட படம்னாலே எனக்கு ஒரு இது,,செம்மயா நடிப்பாப்ல..ஒரு செல்வராகவன் படத்த சயன்ஸ் பிக்சனோட ஆங்கிலத்தில பார்த்த மாதிரியே இருந்திச்சு,,,உங்க கிட்ட இருந்து சட்டர் ஐலாண்ட் மாதிரி ஒரு பதிவு எதிர் பார்கிறோம் புரோ,,,

  ReplyDelete
  Replies
  1. ஃபீட்பேக்குக்கு நன்றி நண்பா. ஷட்டர் ஐலண்ட் மாதிரின்னா முழு கதையையும் அலச சொல்றீங்களா.. அவ்வகையான பதிவுகளுக்கு உங்கள் வரவேற்பு உற்சாகமளிக்கிறது. ஏற்கனவே நண்பர் ஹாரியும் கேட்டிருந்தார். அப்படிப்பட்ட ரிப்பீட் வியூவிங் படங்கள் வந்தால், spoiler-period முடியவிட்டு (நெறைய பேர் படங்களை பார்க்கும் அளவுக்கு டைம் கொடுத்துட்டு) கண்டிப்பாக உழுதுகிறேன். அதுவரை இவ்வகையான அறிமுகங்களே சேஃப்.. தேங்க்ஸ்!!

   Delete
 7. ஹாய், ரொம்ப நாளைக்கி அப்புறம். எங்க போயிருந்தீங்க...???? எனிவே வெல்கம் பெக். உங்க பேஸ்புக் லிங்க் கொடுங்க...

  ReplyDelete
  Replies
  1. எங்கேயும் போகலை நண்பா.. சேம்பேறித்தனம்!?..
   மேலே நண்பர் அந்திச்சாமிக்கு சொன்னது போல ஃபேஸ்புக் இன்னும் கொஞ்ச காலம் வெயிட் பண்ணட்டும்.. நீங்கள் சமீப காலமாக வலையுலகை பேயெழுத்தால் மிரட்டி வருவது மகிழ்ச்சியளிக்கிறது!! வேர்ட்பிரஸை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என அறியலாமா?

   * உங்கள் வலையில் blog archive widget போட முடியுமா? தேந்தெடுத்து வாசிக்க வசதியாய் இருக்கும்.. :)

   Delete
  2. எனக்கு நீங்க யாருனு தெரிஞ்சுபோச்சு... அதுக்கு க்ளூ மேல இருக்கற கமெண்ட்லயே இருக்கு.. :) :)

   Delete
  3. //எனக்கு நீங்க யாருனு தெரிஞ்சுபோச்சு... அதுக்கு க்ளூ மேல இருக்கற கமெண்ட்லயே இருக்கு.. :) :)// இருக்குதா???

   //வேர்ட்பிரஸை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என அறியலாமா?// No idea... ஆனா ப்யூச்சர்ல வெப்சைட்டா மாத்துறதுக்கு உபயோகமா இருக்குமேனுதான்...

   மத்தபடி, ப்ளாக் அறிவுசூன்யம் நான்.

   Delete

Related Posts with Thumbnails