Saturday, January 12, 2013

Django Unchained (2012)


டாரண்டினோ + லியோ டிகாப்ரியோ!! உங்களுக்கு எப்படியோ தெரியாது.. ஆனா எனக்கு இதுதான் எதிர்பார்ப்புக்களின் உச்சம்! ஏன்ன டாரண்டினோ திரைக்கதையின் "கிங்"! எவ்வளவு தந்தாலும் 'இன்னும் இவருகிட்ட இருந்து நெறைய எதிர்பார்க்கலாம்!'னு யோசிக்க வைக்கிற ஆளு.. அப்புறம் லியோ நம்ம ஹீரோ.. ஆனா இங்க அன்ட்டி ஹீரோ! ஸோ, படம் எதிர்பார்க்குற அளவுக்கு இருக்குமா? பார்ப்போம் வாங்க..

ஒரு டாரன்டினோ படத்துல இருக்கவேண்டிய அத்தனை அம்சங்களும் இந்தப் படத்திலும் இருக்கு.. தக்காளி ஜுஸ் மாதிரி தெறிச்சுக்கிட்டே இருக்கும் ரத்தம்!... அதிகம் அலட்டிக்கொள்ளாத ஒரு வயலன்ட் கதை.. நினைவில் நிற்கக்கூடிய கதாப்பாத்திரங்கள்.. நேர்த்தியான ஒரு திரைக்கதை.. ஒரு சில 'பன்ச்'சான வசனங்கள்.. வேணுங்கற இடத்துல dark comedy.. அப்புறம் ஒரு டாரண்டினோவின் டிரேட்மார்க் cameo!
இவ்வளவும் இருந்தாலே ஓ.கேன்னா படம் கண்டிப்பா உங்களைத் திருப்திப்படுத்தும்!! அதுக்கும் மேல வேணும்னா, கொஞ்சம் சந்தேகம்தான்..

கதைக்குள்ள போவோமா?..
Bounty Hunter எனும் தொழிலைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?.. "தலைக்கு ஒரு விலை" நிர்ணயிக்கப்பட்டு பொலிசாரால் தேடப்படும் அதிமுக்கிய குற்றவாளிகளை பிடித்துக்கொண்டு போய் அதில் கிடைக்கும் சன்மானத்தில் காலத்தை ஓட்டுவதே இந்த Bounty Hunterகளின் வேலை. இப்படிப்பட்ட ஒரு கில்லர் ஹன்ட்டர்தான் Dr.Shults என்பவர். இவர் தேடும் குற்றவாளிகள் "Wanted Dead or Alive" ஆகத்தான் இருப்பார்கள். ஆனால் இவருக்குத்தான் 'அலைவ்' எனும் வார்த்தையே அகராதியில் கிடையாது! 

இவர் தேடிக்கொண்டிருக்கும் முக்கியக் குற்றவாளி ஒருவனின் இருப்பிடங்கள் பற்றி "ஜாங்கோ" (D எழுத்து சைலண்டாமாம்..) எனும் நீக்ரோ அடிமைக்கு தெரிந்திருப்பதாக இவர் அறிகிறார். உடனே போய் ஜாங்கோவை அவனது மாஸ்டரிடமிருந்து வயலண்டாக விடுவித்து தன்னோடு அஸிஸ்டெண்டாக சேர்த்துக்கொள்கிறார். 'சுதந்திர மனிதனான' Djangoவும் Schultzவும் தொடர்ந்து பல குற்றவாளிகளை வேட்டையாடுகின்றனர். வரும் வருமானத்தில் Django தன் பங்கைக்கொண்டு, சில வருடங்களுக்கு முன் வேறொருவருக்கு விற்கப்பட்ட தனது மனைவியைத் தேடிச் செல்லப் போவதாக கூறுகிறான்!
உடனே Dr.Schultzம் அவனுக்கு உதவத் தயார் என்று சம்மதிக்கிறார்! ஆனால் ஜாங்கேவின் மனைவி மாட்டிக் கொண்டிருப்பதோ கொடுமைக்கார 'கெல்வின் கேண்டி'யிடம்! (லியனார்டோ டிகாப்ரியோ..) ஜாங்கோவின் பயணம் கேண்டியைத் தாண்டி வெற்றியளிக்குமா என்பதே கதை!

நான் pulp fiction பார்த்ததில்லை.. ஸோ டாரண்டினோவின் "பெஸ்டு" மீட்டர் எங்கவரைக்கும் போகும்னு எனக்குத் தெரியாது.. ஆனா பார்த்து, ரொம்பவும் பிடித்துப்போன Inglorious Basterds படத்துல இருந்த அவரோட மேஜிக் இதுல கொஞ்சம் கம்மியாகப் படுது.. குறிப்பாக Basterds படத்துல கிளைமேக்ஸ் சீனுக்கு கெத்தா பல பில்டப்புகள் கொடுத்து கட்டியெழுப்பி, அதையும் convincing ஆன முறையில execute பண்ணி முடித்திருப்பார்!
ஆனா இந்தப் படத்துக்கு கினைமேக்ஸ் சீன்தான் மைனஸே.. ஒரு மணித்தியாலத்துக்கு அழகா டெவலப் பண்ணி பார்வையாளனுக்கு தரவேண்டிய சீன்களை லாஜிக் குடைச்சல்களோடு அடித்துப் பிடித்து 20 நிமிடங்களுக்குள் தந்து விடுகிறார். அதுவும் டாரண்டினோ cameo செய்யும் சீன் புஸ்ஸென்று ஆகிவிடுகிறது.

அதுக்கு அப்படியே நேர்மாறா ஓப்பனிங் சீன்கள்.. டாரண்டினோவின் படு ஸ்டைலான இயக்கத்துக்கு பறை சாற்றுகின்றன.. குற்றவாளிகளை கொல்வதும், ஜாங்கோவுக்கு துப்பாக்கி சுடுவதற்குப் பழக்கிக் கொடுப்பதும் ரசிக்க வைக்கின்றன.. பல இடங்களில் டாரண்டினோவின் டிரேட்மார்க் காமெடிகளை எதிர்பார்க்கலாம்! குறிப்பாக ஜாங்கோவும், டாக்டரும் தங்கியிருந்த கூடாரத்தை எரிப்பதற்காக ஊர்மக்கள் சிலர் முகமூடி அணிந்து கொண்டு வருவார்கள் பாருங்கள்.. எத்தனை வாட்டி வேணும்னாலும் பார்க்கலாம் அந்த சீனை! சிரிப்புக்கு ஃபுல் கேரண்டி!
இந்தப் படத்துல இசை மோசம்னு சொல்றாங்க.. ஆனா, எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது.. ஓப்பனிங்கில் வரும் 'Django Django' சாங் அருமை! இது தவிர எல்லா பீட்டையும் சொய்ங்.. சொய்ங்..னு இழுத்து முடிக்குறது இன்னும் சூப்பர்.

லியோ பத்தி சொல்லனும்னா.. ஆரம்பத்துல பட போஸ்டர்கள்ல இவரது தாடி மீசை கெட்டப்பை பார்த்துட்டும், படத்துல வில்லன் கேரக்டர் பண்ணுறார் என்கிற நியூஸை கேட்டும், 'எங்க முகமூடி நரேன் மாதிரி காமெடியாகிடப் போவுதோ?'ன்னு பயந்துக்கிட்டிருந்தேன்.. ஆனா கச்சிதமா பொருந்தியிருக்கார். 'படத்தை தூக்கி நிறுத்துரதே இவர்தான்'  என்றெல்லாம் புளுக மாட்டேன். (ஆக்சுவலா கேண்டியின் மாளிகைக்கு வந்ததுக்கப்புறம் தான் கதை லைட்டா டல்லடிக்குது). ஆனா இந்தக் கேரக்டருக்கு இருந்த potentialஐ மேக்ஸிமம் யூஸ் பண்ண டாரண்டினோவின் திரைக்கதை இடமளிக்காததால பெருசா ஷைன் பண்ணக் கிடைக்கவில்லை. அப்படியே ஆஸ்கர் நாமினேஷனும் கைநழுவிப் போயிடுச்சு!
ஆனாலும் இதே படத்தில் Dr.Schultz ஆக கலக்கியிருக்கும் Christopher Waltzக்கு நாமினேஷன் கிடைத்திருப்பதில் ஆறுதல் மகிழ்ச்சி! ஹீரோ Jamie Foxxஉம் தன் பங்குக்கு வேலையை செவ்வனே செய்திருக்கிறார்..

அமெரிக்க அடிமைகள் பற்றிக்கூறும் படம் என்றவுடன், வரலாற்று ரீதியா பெரிய நிகழ்வுகள் எதையும் காட்டுவதாக யோசிக்க கூடாது. Basterdsல எப்படி நாஸியோ, அப்படித்தான் இங்கே நீக்ரோக்கள்.. டாரண்டினோவுக்குத் தேவை அவர்களின் கேரக்டரைஸேஷன் மட்டுமே! 'nigger' எனும் உளவியல் தாக்கத்துக்கு உட்படுத்தக்கூடிய தடை செய்யப்பட்ட சொல், படத்தில் அளவுக்கதிகமான இடத்தில் வந்தாலும், வரலாற்றை அப்படியே? காட்ட வேண்டியிருப்பதால் சென்சார் போர்டு கைகட்டி நிற்க வேண்டியதாயிருக்கிறது.. டாரண்டினோ+டிகாப்ரியோ பெயருக்காகல படம் ஏனைய பெரிய ரிலீஸுகளுக்கு மத்தியிலும் வெற்றிகரமாக கலெக்ஷன் கட்டுகிறது!

படம் இப்பவே ஒரு மாஸ்டர் பீஸ் என்ற கருத்துக்கள் அடிபட்டுக்கொண்டிருக்கின்றன. இன்னமும் உறுதிபடக் கூறமுடியாது.. கண்டிப்பாக பார்க்க வேண்டிய தரத்தில் தான் இருக்கு (அடல்ஸ் மட்டும்)! ஆனா பின்பாதி ஒரு letdown மாதிரியேதான் ஃபீல் ஆகுது. repeat viewingல தான் படத்தோட முழு வேல்யூவும் தெரியும்னு நினைக்கிறேன்.. இப்போதைக்கு, பார்த்தவங்க உங்க வியூவையும் சொல்லிட்டுப் போங்க.  :)


ரேட்டிங்ஸ்,
நடிப்பு = 17
இசை = 16
கதை+திரைக்கதை = 15
கலை+ஒளிப்பதிவு = 17
இயக்கம் = 15

மொத்தம் = 80% சூப்பர்!

Django Unchained (2012) on IMDb

16 comments:

 1. தல, பார்த்துடீங்களா ....சூப்பர். இந்தியாவுல மார்ச் மாசம் தான் தியேட்டர் ரீலீஸ்.யு.ஸ் போய் தான் இந்த திரைகாவியத்தை ரசிக்கணும்...
  நான் டாரண்டினோ வெறியன் :) .. விமர்சனம் செம.
  //நான் pulp fiction பார்த்ததில்லை//
  பாருங்க தல...ரொம்ப நல்ல அனுபவம் கிடைக்கும் . மெதுவா ஆரம்பிச்சு, செம ஸ்பீட்டா முடியும். pulp விட எனக்கு பிடிச்சது kill Bill தான் ..

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக பார்க்கிறேன், நண்பா! முழு டாரண்டினோ ரசிகன்னா உங்களை படத்தின் மைனஸ் எதுவும் பெருசா பாதிக்காதுன்னு நம்புறேன் :)

   Delete
 2. விமர்சனம் மிக அருமை நண்பா படம் இங்கு(Doha) ரிலீஸ் ஆகவில்லை. நானும் மிக ஆவலோடு எதிர்பார்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. காத்திருப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கட்டும்!

   Delete
 3. Excellent review. I felt Di Caprio and Waltz were perfect in their supporting performances. But, somehow the last 30 minutes was a let down. The ending was dragged a bit.

  ReplyDelete
 4. தல, படம் எனக்கு மிகவும் பிடித்தது. கிளைமாக்ஸ் உட்பட. குவெண்டின் காட்டும் வன்முறை அழகியலுக்கு நான் அடிமை. அதனாலேயே கிளைமாக்ஸையும் ரசித்தேன். மனிதர் இந்தப் படத்திலும் என்னைப் பொறுத்த வரை கலக்கியிருக்கிறார். அலட்டல் இல்லாத திரைக்கதை, ஆங்காங்கே கொஞ்சம் காமெடி, நச் நச் வசனங்கள், கெட்ட வார்த்தைகள், உச்சகட்ட பெர்பாமன்ஸ் கொடுக்கும் நடிகர்கள், ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள், கன்வின்ஸிங்கான மியூசிக், அலப்பறை கிளைமாக்ஸ். எனக்கு படம் முழு திருப்தி :-)

  மார்ச்சில் இங்கு வெளியானவுடன் திரையிலும் கண்டு ரசிப்பேன்.

  ReplyDelete
  Replies
  1. நானும் ரிப்பீட் பார்த்தாகனும் தல. குவெண்டின் படத்துக்கு ஒருவாட்டி மட்டும் எப்புடி? அப்போ ஒருவேளை கிளைமேக்ஸ் பிடிக்கலாம்!

   Delete
 5. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் .....

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பா! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும், இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!

   Delete
 6. லியோ, ஜெமிக்காக பார்க்கலாம்னு இருக்கன்

  ReplyDelete
 7. என்ன நண்பா ஆஸ்கர் நாமினேஷன் பத்தின பேச்சே காணல்ல

  ReplyDelete
  Replies
  1. ஆஸ்கர் நாமினேஷன் லிஸ்டுதான் எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சே.. predictions மட்டும் தயாராகி டைமுக்குள்ள வந்துரும்.. அதுக்கு இன்னும் 7 முக்கிய படங்கள் பார்க்கனும்!

   Delete
 8. தமிழ்படம் என்பார்கள். ஆனால் சில படங்கள் ஒட்டவே ஒட்டாது. உங்கள் எழுத்திலும் நிறைய அந்நியம் தெரிகிறது. தமிழ் வாசகர்களுக்காக எழுதுவதால், கொஞ்சம் தமிழுக்காகவும் மெனக்கெடலாம்.

  ReplyDelete
  Replies
  1. திருத்திக்க முயற்சிக்கிறேன் நண்பா!

   Delete

Related Posts with Thumbnails