Saturday, August 25, 2012

Damsels in Distress (2012)

ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு காதல்-காமெடி-கல்லூரிக் கதை பார்க்கக் கிடைத்தது.. அதுவும் சமூக ரீதியிலான அழுத்தங்களை, ஆண்-பெண் misunderstandingகளை பெண்களின் பக்கத்திலிருந்து காமெடியாக காட்டி நிறைய சிரிக்கவைப்பதோடு, கொஞ்சம் சிந்திக்கவும் வைக்கும் ஒரு படம்!
கதைக்குள் போவோமா?
Seven Oaks னு ஒரு காலேஜ் டெக்னாலஜி, கமூக ஊடகத்தொடர்புகள் பெரிதும் இல்லாத பிரபலமில்லாத சிறிய ஊரொன்றில் அமைந்திருக்கிறதாம்.. லில்லி எனும் இளம்பெண் அந்த Seven Oaks கல்லூரிக்கு புதிதாகச் சேர்ந்து கொள்வதுடன் ஆரம்பிக்கிறது கதை.. முதல் நாளன்றே வயலட்,ரோஸ், ஹீதர் எனும் மூன்று சக மாணவிகளின் நட்பு அவளுக்கு கிட்டுவதோடு, அவர்களது வேண்டுகோளின் பேரில் அவர்களுடனேயே சேர்ந்து தங்குகிறாள்..

அந்த மூன்று பெண்களும் காலேஜுக்கு அண்மையிலிருக்கும் அவர்களது கட்டிடத்தில் suicide prevention centre என்ற பேரில் ஒரு சிறு அமைப்பை நடத்தி வருகின்றனர்.. அந்த அமைப்பின் நோக்கம் கல்லூரியில் நிலவும் ஆணாதிக்கத்தை எதிர்ப்பதும், சக தோழிகளுக்கு ஆண்களினால் ஏற்படுத்தப்படும் மன உளைச்சல், விரக்தி போன்றவற்றில் இருந்து மீட்பதும், மிக முக்கியமாக காதல் தற்கொலைகளை தடுப்பதுமேயாகும். மன உளைச்சலில் இருப்பவர்களுக்கு இவர்கள் தரும் ட்ரீட்மெண்ட் அவர்களுடன் சேர்ந்து tap dance ஆடுவது! இவர்களது பார்வையில் சுத்துவட்டாரத்தில் ஆண்களே இல்லாமல் போனால்தான் இந்தக் காலேஜ் வெளங்கும். இந்த க்ரூப்புக்கு வயலட்தான் தலைவி! புதிதாக சேர்ந்திருக்கும் லில்லியையும் தங்களது சின்ன கேங்குக்குள் சேர்த்துக் கொள்கின்றனர்..

இவ்வாறு "சுயமாக இருக்க விரும்புகிறோம், சுத்தமாக இருக்க விரும்புகிறோம்" என சொல்லிக்கொண்டும், பிறரையும் ஆண்களை வெறுக்கச் செய்வதால், இந்த க்ரூப்புக்கு காலேஜில் சகல தரப்பினரிடமும் ஏகோபித்த எதிர்ப்புத்தான் மிஞ்சுகிறது.. பெண்கள் கூட இவர்களுடன் சேர்ந்தாலே தங்களையும் பைத்தியமென நினைத்துவிடுவார்களோ என பயப்படுகிறார்கள்..
லில்லியோ இவர்களோடு சேர்ந்து இவர்களது பாணியிலேயே மாறி விடாமல், இவர்கள் பிறருக்கு உதவி பண்ணும் சமயங்களில் ஆதரவாகவும், ஆண்களை அநியாயத்துக்கு ஓவரா எதிர்க்கும்போது, அவர்களது பிழையை சுட்டிக் காட்டுபவளாகவும் செயற்பட்டு வருகிறாள்...
நாட்கள் செல்லச் செல்ல இரு ஆண்களின் நட்புக் கிடைக்கும் லில்லிக்கு, அதில் ஒருவருடன் காதல் தொடங்குகிறது.. அதே போல வயலட்டும் இன்னொருவனுடன் காதல் வயப்படுகிறாள். ஆண்களிடமிருந்து விலக முடியாது என்பதை உணரும் வயலட், ஆண்களைத் திருத்த தீர்மானம் எடுக்கிறாள்! இவர்களது முயற்சி பலித்ததா? காதல்கள் வெற்றியடைந்தனவா? என்பதே மீதிக்கதை..

கதைக்கேற்றாற் போலவே அந்தக் கல்லூரியிலிருக்கும் ஆண்களெல்லாம் அடிமுட்டாள்களாகவும், சுத்தமில்லாதவர்களாகவும் காட்டப்படுகிறார்கள்.. அதுலயும் ஒருத்தன் கல்லூரியில் படிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்ட பின்னரும் பச்சைக் கலருக்கும், நீலக் கலருக்குமே வித்தியாசம் தெரியாமல் இருப்பான்.. அதைப் பற்றிக் குத்திக் காட்டியவுடன் "அதுக்கென்ன, நான் இப்பதானே கத்துக்கிறேன்.. கத்துக்க கத்துக்கத்தானே அறிவு வளரும்.. அடுத்த முறை சந்திக்கும்போது இதை விட நெறைய கலர்கள் பத்தி தெரிஞ்சு வைச்சிருப்பேன்"னு ஓவர் எமோசனலா பேசுவான்! ஒருகட்டத்தில் இவர்களது unhygenic பழக்கத்திலிருந்து மாற்றுவதற்காக இந்த க்ரூப் சொந்த செலவில் 'சோப்'பெல்லாம் கொடுத்து உதவுவார்கள்.
ஆகவே  எதையும் அதிகம் உள்ளர்த்தத்தோடு யோசிக்காமல் காமெடியை காமெடியாகவே பார்த்தல் நலம்!

படத்தோட இயக்குனர் பேரு விட் ஸ்டில்மேன்.. நான் இதுவரையிலும் கேள்விப்பட்டதில்லை.. ஆனால் இவர் ஒரு ஹாலிவுட்டில் பலரால் மதிக்கப்படும் ஒரு இயக்குனர்.. நீங்களும் பெரும்பாலும் இவரைப் பற்றி அறிந்திருக்காமல் இருக்கலாம்.. ஆனால் அதற்கு தகுந்த காரணமும் உண்டு. இவர் நம்ம terrence malikஐ விட ஸ்லோ பார்ட்டி.. 1990லிருந்தே சினிமாவுக்குள் வந்துவிட்ட இவர் இதுவரையிலும் இயக்கிய மொத்தப் படங்களின் எண்ணிக்கை வெறுமனே 4 தான்! முன்னைய படங்களான metroploitan, barcelona, the last days of disco ஆகியவை விமர்சன ரீதியில் பெரும் வரவேற்புக்குள்ளாக சரியாக 13 வருடங்கள் கழித்து அவர் கொடுத்திருக்கும் படமே இது...

இவ்வளவு பெரிய இடைவேளைக்குப் பின் யார் படம் எடுத்தாலும் அந்தப் படம் மிக முக்கியமானதொன்றாகவும், அந்த இயக்குனரின் படைப்பின் உச்சகட்டமாகவும் இருக்கம் என்பதே பலரினதும் எதிர்பார்ப்பாக இருக்கும்.. ஆனால் அவ்வளவு எதிர்பார்ப்புக்களை இது நிறைவேற்றத் தவறியிருக்கிறது என்றே சொல்லலாம்..  என்னைப் பொறுத்தவரையில் படம் சுவாரஸியமானதுதான்.. இந்த வருஷம் வெளிவந்த ஹாலிவுட் படங்களில் சிறந்ததை பட்டியலிட்டால் அதில் டாப் 25ற்குள்ளும் வரக்கூடும். ஆனால் அவ்ளோ பெரிய அப்பாட்டக்கரில்லை!

படம் வெகு சுவாரஸ்யமாக ஆரம்பித்தாலும், பிற்பாதியில் கதை சோர்ந்து போவதைப் போல் உணர முடிந்தது.. ஆனாலும் கடைசி வரை என்னைப் படத்துடன் கட்டிப் போட்டது அந்த நான்கு கேர்ள்ஸும்தான்.. Greta Gerwig, Carrie MacLemore, Megalyn Echikunwoke, Analeigh Tipton... நாலு பேரில் யாரைப் பார்ப்பதென்றே தெரியவில்லை.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரேஞ்சில் அழகாகத் தெரிகிறார்கள்! கதைக்குத் தேவையான அளவு நடிக்கவும் செய்கிறார்கள்.. எல்லாக் கதாப்பாத்திரங்களையும் ஒரே மாதிரிப் படைக்காமல் கவனம் செலுத்தி ஒவ்வொருவரது கேரக்டரையும் சிறுசிறு வேறுபாடுகளுடன் வடிவமைத்திருக்கிறார்கள்.. அதுவும் வயலட்டின் கதாப்பாத்திரத்தின் தன்மை மாறும் காட்சிகள் அழகு!
படத்தில் இன்னும் முக்கியமான விஷயம் வசனங்கள். காமெடிக்கு சுவை கூட்டும் சிச்சுவேஷனுக்குத் தகுந்த வசனங்கள்தான் இந்த இயக்குனரின் ஸ்பெஷாலிட்டியாம்.. அதை இந்தப் படத்தில் தெளிவாகவே தெரிந்துகொள்ள முடியும்!
அப்புறம் படம் எடுத்திருக்கும் லொக்கேஷன்களெல்லாம் கண்ணுக்கு குளிர்மை.. படத்தின் இறுதியில் வரும் பாடல் சூப்பர் ரகம்!

இந்தப் படம் எல்லாருக்கும் பிடிக்கிற டைப் கிடையாது.. காமெடிப் படங்களின் ரசிகர்கள், ரிலாக்சாக ஒரு படத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் பார்க்கவேண்டிய படமுங்கோ! பார்த்துட்டு சொல்லுங்கோ!

ரேட்டிங்ஸ்,
நடிப்பு = 15
இசை =15
கதை+திரைக்கதை = 11
கலை+ஒளிப்பதிவு =14
இயக்கம் = 15

மொத்தம் = 70% மிக நன்று!
Damsels in Distress (2011) on IMDb

14 comments:

  1. ஏனோ தெரியவில்லை இப்படி படங்கள் எனக்கு ஆவதில்லை (monte carlos, bride maids, mamma mia) இப்படி போஸ்டர் பார்த்தே அவைட் பண்ணி இருக்கிறேன்

    //கதைக்கேற்றாற் போலவே அந்தக் கல்லூரியிலிருக்கும் ஆண்களெல்லாம் அடிமுட்டாள்களாகவும், சுத்தமில்லாதவர்களாகவும் காட்டப்படுகிறார்கள்.. // இது ஏன் நமக்கு

    ReplyDelete
    Replies
    1. ரைட்டு.. உங்க ரசனையில் இல்லைன்னா விட்டுருங்க நண்பா! அப்படியிருந்தும் வாசிச்சு கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி!

      Delete
  2. மிக அழகான விமர்சனம்..
    வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  3. ///அதுலயும் ஒருத்தன் கல்லூரியில் படிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்ட பின்னரும் பச்சைக் கலருக்கும், நீலக் கலருக்குமே வித்தியாசம் தெரியாமல் இருப்பான்.///

    நீ எப்போ மச்சி அங்க போய் படிச்ச?

    ReplyDelete
    Replies
    1. நேத்து முந்தாநாள் கனவுல!

      Delete
  4. ///நாலு பேரில் யாரைப் பார்ப்பதென்றே தெரியவில்லை.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரேஞ்சில் அழகாகத் தெரிகிறார்கள்!///

    நீயி இப்பி ஆ.. என்று அந்த பொண்ணுங்கள பாத்துக்கிட்டு இருந்திட்டு , எங்க கிட்ட வந்து படம்.. டாப் 25 க்குள்ள வரும், ஆஸ்கார் அள்ளும்ன்னு அள்ளியா விடுற ராஸ்கல்!

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் உங்க ஆசீர்வாதம்தான் குருவே..
      *சீச்சீ.. ஆஸ்கர் எல்லாம் அள்ளாது!

      Delete
    2. ///எல்லாம் உங்க ஆசீர்வாதம்தான் குருவே..///

      உன் பணிவில் யாம் மனம் மகிழ்ந்தோம் சிஸ்யா!

      *அப்புறம் மட்ரிட்டுக்கு கடஃபே ஆப்படித்ததாக ஒரு சிறு செய்தியும் உண்டு யான் உனக்கு உரைக்க! ஆனாலும் உனது மன்செஸ்டர் பயலுகளின் ஆட்டம் நன்றாக உள்லதையும் சொல்லியே ஆக வேண்டும்!

      Delete
  5. இது போல ஒரு படம் ஏற்கனவே பார்த்திருப்பதாக ஞாபகம் நண்பா! இந்த படம் பார்த்தால் ஒரு வேளை அந்த இரு படங்களுக்கும் இருக்கும் வித்தியாசம் தெரியலாம். அந்த படத்தின் பெயர் கூட ........ மஸ்ட் டை" என்று இருக்கும். ( கீறிட்ட இடைவெளி நீயே நிரப்பிக்கோ, ஏன்னா எனக்கு மறந்து போச்சு) , அந்த படம் கூட மூன்று பெண்களையும் ஆண்களையும் சுற்றி நடப்பது தான். எனக்கு சரியா தெரியல!

    ReplyDelete
    Replies
    1. நீ என்ன படம் பத்தி சொல்ல வர்றன்னு தெரியலை நண்பா..
      http://www.imdb.com/find?s=all&q=must%20die
      இதுல எது உன் படம்னு தேடிக்கோ..

      ஆனா கண்டிப்பா அது இது மாதிரி இருக்காதுன்னு நம்புறேன் :)

      Delete
    2. ஆற்றுப்படுத்தலுக்கு மிக்க நன்றி நண்பா!

      Delete
  6. புது படங்கள் எதையும் விட்டு வைபதில்லை போல....

    கடந்த ஒன்றை மாதமா கொஞ்சம் பிஸி அது தான் மொத்தமா விட்டு போன எல்லா விமர்சனங்களையும் படிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அப்பப்போ ரிலாக்சுக்கு பார்க்குறது பாஸ்.. புதுப் படங்கள் இன்னும் நெறைய பார்க்க வேண்டி இருக்கு!

      Delete

Related Posts with Thumbnails