Sunday, August 19, 2012

Flipped (2010)

 உங்களுக்கு உங்களது முதல் காதல் நினைவிருக்கிறதா? காதலைப் பற்றி சிந்தித்துத் தெளிந்து, உணர்ந்தவராய்த் தயங்கித் தயங்கிப்போய் propose பண்ணும் "யூத்து"க் காதல் இல்லை.. பள்ளிப் பருவத்துக் காதல்! அது அட்ராக்ஷனோ, பாசமோ, அறியாத வயசின் அளவில்லா அன்போ.. என்னாவோ இருந்துட்டுப் போகட்டும்!
அந்த வயதுக்கு, அந்த மனதுக்கு அதைக் காதலாகவே எண்ணத் தோன்றும்.. அப்படிப் பட்டதொரு பள்ளிப் பருவக் காதலைப் பற்றியதே இக்கதை!

1950களில் நடக்கிறது கதை.. ப்ரைஸ் இரண்டாந் தரத்தில் கல்வி கற்றுக் கொண்டிருக்கிறான்.. அந்த சமயத்தில்தான் அவனது தெருவில் குடியிருக்க ரெண்டாவது வகுப்பில் படிக்கும் ஜுலியா என்பவளும், அவளது ஃபேமிலியும் வருகிறார்கள்.. ஜுலியாவுக்கு ப்ரைஸைப் பார்த்தவுடனே ஒரு மெகா crush.. பற்றாக்குறைக்கு ரெண்டு பேரும் ஒரே பாடசாலையில் படிப்பதால், எந்நேரமும் அவனைச் சுற்றிச்சுற்றியே வருகிறாள்.. பெண்பிள்ளைகளுடன் பழகுவதற்கு கூச்ச சுபாவம் கொண்ட பிரைஸ் முடிந்தளவுக்கு ஜுலியாவை தவிர்த்து வருகிறான்!

சமூக சேவை.. அப்படியே என்னமாதிரியே!5 வருஷம் கழிச்சு ஏழாம் வகுப்பு படிக்கும் சமயத்தில், பிரைஸின் தாத்தா அவர்களோடு வந்து செட்டிலாகிறார்.. எப்போதும் உதவி பண்ணும் ஜுலியாவை தாத்தாவுக்கு உடனே பிடித்துப்போகிறது.. ஆனால் பிரைஸ் ஜுலியாவைக் கண்டாலே தலைதெறிக்க ஓடுவதைக் கண்டு அவனுக்கு புத்திமதி கூறுகிறார்.. ஆனாலும் பிரைஸ் ஜுலியாவுடன் பழகுவதற்குத் தயாராகவில்லை..
 காலப்போக்கில் ஜுலியாவின் மீது பிரைஸ் கொண்டிருந்த பார்வை மாறுபடுகிறது.. ஜுலியாவின் நல்ல உள்ளத்தைப் புரிந்து கொண்டு அவளை நேசிக்கத் தொடங்குகிறான்.. ஆனால் அதே நேரம் சில misunderstandingகளால் ஜுலியாவுக்கு பிரைஸ் மேல் வெறுப்பு உண்டாகிறது.. இப்படியாக இருவரது மனநிலையும் திருப்பிப் போடப் படுகிறது (flipped..). இவர்களது பள்ளிக் காதல் நீடிக்குமா என்பதை நீங்களே கண்டு அறிந்து கொள்க!

படத்தின் கதை சொல்லபட்டிருக்கும் விதம் ரொம்ப வித்தியாசமானது.. Double Narration! அதாவது, முதலில் ஒரு காட்சி பிரைஸின் பார்வையில்/narrationஇல் காட்டப்படும்.. பின்னர் அதே காட்சி திரும்பவும் ஜுலியாவின் பார்வையில் எப்படியிருக்கிறதென காட்டப்படும்.. இப்படி ஒவ்வொரு சீனுக்கும் ரெண்டுவிதமான ஷாட்கள்..
அண்ணன் வெக்கப்படுறாப்ல!இந்த டெக்னீக்தான் கிட்டத்தட்ட இந்தப் படத்தின் பலமும் பலவீனமும்.. காரணம் இதன் மூலம் ஜுலியா, பிரைஸ் ரெண்டு கதாப்பாத்திரங்களுக்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுக்க முடியும்.. ரெண்டு பேரினதும் மனநிலைக்கு பெரிய insight கொடுக்க முடியும்.. ஆனால் இதனால் சிறிய திரைக்கதையையும் பெரிதாகக் காட்ட வேண்டி இருக்கிறது.. சில சமயங்களில் பார்த்த சீன்களையே திரும்பிப் பார்க்க போரடிக்கிறது!
இவ்விதமான டபுள் நேரேஷன் வேறு எந்தப் படத்திலும் பார்த்ததாக ஞாபகம் இல்லை.. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்!

படத்தோட இயக்குனர் Rob Reiner.. 1992 ல் வெளிவந்த A few good menக்குப் பிறகு பேர்சொல்லிக் கொள்ளும் படி எந்தப் படமும் இல்லை! ஆனாலும் இவரது படங்கள் எல்லாம் மட்டமும் இல்லை.. (உ.தா-The Bucket List) இவரது சமீபத்திய படங்ளில் பெரும்பாலானவை ஓய்வுபெற்ற மனிதர்களைப் பற்றியோ, ப்ளாஸ்பேக்குகளைப் பற்றியோதான் இருக்கும்.. ஆனால் இந்தப் படத்தின் மூலம் தனக்குள் ஒளிந்திருக்கும் சிறுவனைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும்.. அவ்வளவு ஃப்ரெஷ்ஷாகவும், கலர்ஃபுல்லாகவும் இருக்கிறது கதையோட்டம்.. கடந்த 18 வருஷத்தில் இவரோட சிறந்த ஆக்கம் இந்தப்படம்தான்னு சொல்லியிருக்காங்க..
படத்தின் இசை பழைய காலகட்ட ஃபீலைக் கொடுப்பதற்குத் துணைபுரிகிறது.. ஒளிப்பதிவும், முக்கியமாக  ஜுலிக்குப் பிடித்த ஒரு மரம் பற்றிய ஷாட்களில் கவர்கிறது..

இந்த சிரிப்புக்குத்தான் சிக்கினாளோ??ப்ரைஸாக callan mcauliffe.. கேரக்டருக்கு ஏத்த அப்பாவித்தனமான நடிப்பு! இவரு அடுத்த வருஷம் வெளிவரும் Great Gatsby படத்துல சின்ன வயசு டிகாப்ரியோவா நடிக்கப் போறராம்.. காம்பினேஷன் எப்படின்னு கண்டிப்பா பார்க்கனும்!
ஜுலியாவாக Madeline Carroll.. ஏதோ ஆசியப் பொண்ணு போலவே இருக்கிறார்.. கோபப்படும் போதும், அழும் போதும் முடிந்தளவு நடிப்பை வழங்கியிருக்கிறார்.. இயக்குனர் Rob Reinerன் இந்த வருஷ படம் The Magic of Belle Isleலும் முக்கியமான கதாப்பாத்திரம் ஒன்று செய்திருக்கிறாராம்.. படம் இன்னும் பார்க்கலை..

இப்படியான படங்களுக்கு பல பெரியவர்கள் தங்கள் பள்ளிப் பிள்ளைகளை அழைத்து வரவும் போவதில்லை.. சின்னஞ்சிறுசுகளின் காதலைப் பற்றிப் பேசும் படத்தை அவர்கள் காசு செலவு செய்து தியேட்டரில் பார்க்கப் போவதுமில்லை.. யாராவது nostalgiaவுக்காக பார்த்தாத்தான் உண்டு.. இப்படி இருந்தா எவனாலதான்யா எக்ஸாம் செய்ய முடியும்??கிட்டத்தட்ட சமூக ரீதியில் பெரிய அளவு ஆடியன்ஸை ஈர்க்க முடியாத படம்.. அதனால்தானோ என்னவோ 14 மில்லியன் செலவில் எடுக்கப்பட்ட இப்படம், வெறும் ஒண்ணே முக்கால் மில்லியன்களை வசூலித்து படுதோல்வியடைந்தது! ஆனாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு படத்துக்கு..

இதையே காரணமா வைச்சுக்கிட்டு இந்தப் படத்தை ஒதுக்கி விட்றாதீங்க ப்ரெண்ட்ஸ்.. கண்டிப்பா பார்க்குற எல்லாருக்கும் பிடிக்கும்! உங்கள் இதமான இளம் நினைவுகளை மீ்ட்டித்தர இது உதவும்.. அப்புறம் மனசுக்குள்ள இன்னொரு ஆட்டோகிராஃப் கதையே ஓடுனால் நான் பொறுப்பல்ல!

ரேட்டிங்ஸ்,
நடிப்பு = 15
இசை =16
கதை+திரைக்கதை = 13
கலை+ஒளிப்பதிவு =15
இயக்கம் = 16

மொத்தம் = 75% மிக நன்று!
Flipped (2010) on IMDb

18 comments:

 1. அந்த பாய் , கேர்ள் சைகாலஜி சீன்ஸ் பத்தி இன்னும் விளக்கமா சொல்லாம விட்டுடிங்களே...? ஒரு பொண்ணு என்ன நினைப்பா , பையன் என்ன நினைப்பான்னு ஒவ்வொரு பார்வையையும் சும்மா புகுந்து விளையாடியிருப்பார். நீங்க போட்ட மதிப்பெண் குறைவோன்னு தோணுது நண்பா...

  Superb film... Must watch nanbaa....

  ReplyDelete
  Replies
  1. நம்மளே ஒரு பச்சப்புள்ள.. நம்மகிட்ட போய் கேர்ள் சைக்காலஜில்லாம் எதிர்பார்க்கலாமா? எனிவே, படம் அவர்களது எண்ணங்களை மேக்ஸிமம் எங்களுக்கு உணர வைக்கும் வகையில் எடுக்கப்பட்டது உண்மையே..
   //நீங்க போட்ட மதிப்பெண் குறைவோன்னு தோணுது நண்பா...// இருக்கலாம்!.. இது வெறுமனே என் பார்வையே.. :)
   வருகைக்கு நன்றி நண்பா!

   Delete
 2. விமர்சனம் மிகவும் அருமை நண்பரே,
  டவுன்லோட் போட்டு விடுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா!

   Delete
 3. Rob Reiner இன் இப்படி ஒரு படம் வந்து கேள்விப் படவே இல்லையே? இவரின் The Princess Bride பாருங்க. அட்டகாசமா இருக்கும். (ஃபேண்டஸி கதைகள் பிடிக்கும் என்றால்)

  டவுன்லோட் பண்ணி வைப்போம்.

  ReplyDelete
  Replies
  1. Princess Bride.. இது பத்தி இப்பதான் செக் பண்ணிட்டு வர்றேன்..இதுல நம்ம பழைய wrestler, Andre the Giant நடிச்சிருக்காரே! நிச்சயம் பார்க்கிறேன்..

   Delete
 4. விமர்சனத்திற்கு நன்றி... 75 % - பார்க்க வேண்டியது தான்... (TM 1)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

   Delete
 5. Double Narration - இந்த ஸ்டைலில் எந்தப் படம் பார்ததாகவும் நியாபகம் இல்லை. இதற்காகவே பார்த்து விடுகிறேன்...

  ReplyDelete
 6. //பெண்பிள்ளைகளுடன் பழகுவதற்கு கூச்ச சுபாவம் கொண்ட பிரைஸ் முடிந்தளவுக்கு ஜுலியாவை தவிர்த்து வருகிறான//

  நானும் அப்பிடி தான் நண்பா hi hi

  சூப்பர் நண்பா கண்டிப்பா பார்த்துடறேன்

  ReplyDelete
  Replies
  1. நம்பிட்டோம்... நம்பிட்டோம்!

   Delete
 7. எனக்கும் என்னோட சின்ன வயசு காதல் "எல்லாம் " ஞாபகம் வருது... அது ஒண்டா ரெண்டா ? இங்க சொன்னா அதுக்கு நீயி தனி பதிவே போடணும். அப்புறம்..... உனக்கு சுட்டுப்போட்டாலும் விம்ர்சனம் எழுத வராது... மகா மொக்கை... சீக்கிரம் எழுத கத்துக்கோ....

  அப்புறம் இந்த படத்தோட டைரக்டர் , கட்டவிழ்த்துவிட்ட தன்னோட சிறுவனை மறுபடி கட்டிட்டாரா? அப்டீங்கறதை விசாரித்து சொல்லவும்!

  எவன்டா அது மேல .. நான் அவளவு சொல்லியும் "விமர்சனம் அருமை" , "இப்பவே டவுன்லோடு" போடுறேன்னு மனப்பாடம் பண்ணினத ஒப்பிச்சிட்டு போயிருக்கிறவன்? நாலஞ்சு நாளா இந்த பக்கம் நான் இல்லாதது எல்லருக்கும் குளிர்விட்டு போச்சு......

  ReplyDelete
  Replies
  1. //மகா மொக்கை... சீக்கிரம் எழுத கத்துக்கோ.... //
   அண்ணன் உங்க எழுத்த பார்த்துதாளேன தம்பி கத்துக்கரனும்.. நீங்க ஏன் பதிவு போடாம ஆப்சென்ட் ஆவுறீங்க?

   //அப்புறம் இந்த படத்தோட டைரக்டர் , கட்டவிழ்த்துவிட்ட தன்னோட சிறுவனை மறுபடி கட்டிட்டாரா? அப்டீங்கறதை விசாரித்து சொல்லவும்!//
   இல்லை! இப்போது அவன் ஒரு சுதந்திரப் பறவை...

   //எவன்டா அது மேல .. நான் அவளவு சொல்லியும் "விமர்சனம் அருமை" , "இப்பவே டவுன்லோடு" போடுறேன்னு மனப்பாடம் பண்ணினத ஒப்பிச்சிட்டு போயிருக்கிறவன்? நாலஞ்சு நாளா இந்த பக்கம் நான் இல்லாதது எல்லருக்கும் குளிர்விட்டு போச்சு......//
   கீய்ஞ்சுது போ! போன பதிவுல ஒன்னைத் தவிர மூணு பேருதான் வந்து கமெண்டு போட்டு போனாங்க.. இந்த முறை எப்படியோ அந்த எண்ணிக்கை ஆறுக்கு உயர்ந்திருக்கு.. அது பொறுக்கலையோ?

   Delete
  2. அப்சென்டு எல்லாம் இல்ல நண்பா! கொஞ்சம் சோம்பல் முத்தி போச்சு! சீக்கிரம் எழுத முயற்சி பண்ணுறேன்.

   Delete
 8. சூப்பர்.... நீங்க பலரும் அறியப்படாத இவ்வளவு நல்ல திரைபடங்கள பார்த்து விமர்சனம் பன்னரிங்க JZ, (இத்தனை நல்ல படங்கள் பார்கறதுக்கு எதனை படங்கள் மொக்க படங்களா பார்க்க வேண்டியது வரும்!!!!!!!!)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா..

   Delete
 9. //இவ்விதமான டபுள் நேரேஷன் வேறு எந்தப் படத்திலும் பார்த்ததாக ஞாபகம் இல்லை.. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்! //

  என்ன நண்பா ? விருமாண்டி படத்த மறந்துட்டீங்களே. அதுல கொத்தாளத்தேவன் பார்வைல ஒரு தடவ, கமல் பார்வைல ஒரு தடவனு ரெண்டு நேரேஷன் வருமே. ஆங்கிலப் படங்களுக்கெல்லம் முன்னோடியா அப்பவே எடுத்துருக்காரு.

  எனக்கும் ரொம்ப பிடித்த படம் இது நண்பா. நல்ல விமர்சனம்.

  ReplyDelete

Related Posts with Thumbnails