Monday, January 16, 2012

ஆஸ்கர் அலசல் - Visual effects

ஹாய் நண்பர்களே, கடந்த பதிவுல அனிமேஷனுக்கான ஆஸ்கர் விருது பெறும் சாத்தியக்கூறுள்ள படங்கள் எவை-ன்னு பார்த்தோம். இப்போ இந்த வருடத்தில் வெளிவந்த, விஷுவல் எஃபெக்ட்ஸுக்கான ஆஸ்கர் விருதைப் பெறுவதற்கு வாய்ப்புள்ள படங்கள் எவைன்னு மேலோட்டமா பார்த்துட்டு போவோம். அதுக்கு முதல்ல இந்த விருதோட வரலாறு...

ஆஸ்கர் வரலாற்றில் சர்ச்சைகளுக்குட்பட்ட விருதுகளில் இந்த விருதும் உண்டு. இப்ப மாதிரி அந்தக்காலத்துல விஷுவல் எஃபெக்ட்ஸ் அனேகமான படங்களில் உபயோகப்படுத்தவில்லை என்ற காரணத்தால், இந்த பிரிவுக்கு விருது கொடுக்கறதா? வேணாமாங்கற கன்பியூஷனே இருந்திச்சு!  இருந்தாலும் Special Effects எனும் பெயரில் விருது 1927ம் ஆண்டு அறிமுகமானது.
முதன்முதல்ல விருது வென்ற படம் "Wings". இந்த விருது 1962ம் ஆண்டு வரைக்கும் நடைமுறையிலிருந்தது.
பிறகு 1963ம் ஆண்டுலேர்ந்து 1971 வரைக்கும் Visual Effects என்ற பெயரில் பிரிவு அமைக்கப்பட்டது. பிறகு இதுவும் இடைநிறுத்தம் செய்யப்பட்டு, 1972ம் ஆண்டு முதல் Special Achievements என்ற பெயரில் விருது வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஒரு விருதுலயே Visual Effects, Sound Effects, Sound Editting, Animation ஆகிய நான்கு பிரிவுகளும் இணைக்கப்பட்டு இருந்ததால, ஒரு வருஷத்துக்கு ஏதாவது ஒரு பிரிவில் சிறப்பாக செய்த படத்துக்கு மட்டும்தான் விருது கொடுக்க முடியும்-ங்கற சிக்கலான நிலை உருவாச்சு!
இந்த கன்பியூஷன் எல்லாத்துக்கும் முடிவு கட்டுவதற்காக 1977ம் ஆண்டு 4 பிரிவுகளையும் தனித்தனியாக பிரிச்சு, ஒவ்வொண்ணுக்கும் தனி விருது உருவாக்கினாங்க..

இதுதான் குழப்புதுன்னா, இந்த விருது கொடுக்கறதுக்கே பல கண்டிஷன்களைப் போட்டு சிக்கலாக்கியிருக்கிறார்கள்!
Rule no 1. பயன் படுத்தப்பட்ட விஷுவல் எபெக்ட்ஸானது, படத்தோட Overall Production எந்தளவு பங்களிப்பு செய்கிறது என்பது கவனத்தில் கொள்ளப்படும்..
Rule no 2. விஷுவல் எபெக்ட்ஸோட கலையாக்கம், திறன், நம்பகத்தன்மை என்பவையும் கவனத்தில் கொள்ளப்படும்.
ஸோ, என்னதான் அபாரமா புது தொழில்நுட்பங்களைக் கொண்டு விஷுவல் எபெக்ட்ஸ் காட்சிகளை இமைத்திருந்தாலும் படத்தோட கதைக்கு அது மேலதிகமாக அல்லது அநாவசியமாகத் தென்பட்டால் விருது கைநழுவிச் செல்லும்!!
* 2010ல இருந்து கண்டிப்பாக 5 படங்களை நாமினேட் செய்ய வேண்டும் என்ற புது rule-ம் போடப்பட்டிருக்கு..

ஆஸ்கர் வரலாற்றிலேயே தொடர்ச்சியாக 3 தடவை விஷுவல் எஃபெக்ட்ஸ் விருதைக் கைப்பற்றிச் சென்ற படவரிசை Lord of the Rings சீரீஸ்தான்!! (2001-2003). அதற்குப்பிறகு விஷுவல் எஃபெக்ட்ஸில் கலக்கும் என எதிர்பார்க்கப்பட்ட Harry Potter சீரீஸ் 2004லயும், 2010லயும் நாமினேஷன் வரை வந்தது மட்டும் தான்.. விருது கிட்டவில்லை!
Pirates of the Carribean 2003ல் நாமினேட் ஆனதோடு, 2006ல் அதன் 3ம் பாகம் விருது வென்றது! இந்த இரண்டு சீரீஸ்களினதும் அடுத்த பாகங்கள் 2011ல் வெளியானதால் விருதுக்கு பெரும் போட்டி நிலவலாம் எனக் கருதப்பட்டது. சப்பையாகப் போய்க்கொண்டிருந்த Planet of the apes சீரீஸும் மாறுதலான், அட்டகாசமான எபெக்ட்ஸுடன் களத்தில் குதித்ததால் போட்டி கடுமையாக்கப்பட்டது.. இது போதாதென்று பெரும் புகழ்பெற்ற Mission Impossible, X-men, Transformers ஆகிய சீரீஸ்களின் அடுத்த படங்கள் வேறு போட்டியில் இணைந்து கொண்டன.

ஜுலையில் ரிலீசான Captain America- The First Avenger படத்தில் ஒல்லியான ஸ்டீவை கட்டுமஸ்தான ஸ்டீவாக மாற்றிய காட்சி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்ததோடு, விஷிவல் எஃபெக்ட்ஸிலும் ஒரு புதிய பரிமாணத்தை உலகுக்கு காட்டியது..
கடைசியாக மார்ட்டீன் ஸ்கோர்ஸீசின் உருவாக்கத்தில் வெளிவந்த Hugo படமானது, குழந்தைகளை மகிழ்விக்கும் படமாக மாத்திரம் நின்று விடாது, "3டி-ன்னா இப்படி இருக்கணும்"னு உரக்கச் சொல்லிச்சென்றுள்ளது. இவ்வளவு படங்கள்லேயும் விருது வெல்வதற்கான அதிகபட்ச சாத்தியக்கூறுள்ள 5 படங்கள் பின்வருமாறு -

5. Pirates of the Carribean - On Stranger tides


5 வருடம் கழித்து வரும் அடுத்த பாகமென்பதால் Vfx-ஐ அள்ளி இறைத்திருக்கிறார்கள்.. பத்து விஷுவல் எஃபெக்ட்ஸ் கம்பனிகளின் உதவியோடு 1,112 CG ஷாட்களை உருவாக்கியிருக்கிறர்கள்!! அந்த கடற்கன்னிகள் காட்சிக்காக மட்டும் 8 மாடல் நடிகைகளும், 22 நீச்சல் வீராங்கனைகளும், motion capture-suit அணிந்த ஸ்டன்ட் பெண்களின் க்ரூப்பும் தேவைப்பட்டருக்கிறதாம்!
விருது வெல்வதற்கான சாத்தியக்கூறு -9%

4. Hugo

3டி-ங்கறது வெறும் பொழுதுபோக்குக்காக அல்ல, அது படத்தினை மெருகேற்றவும், முழுமையாக அனுபவிக்கவுமே சேர்க்கப்படுகிறது என்பதை நிரூபித்திருக்கிறது இந்தப்படம்.. படத்தின் முக்கியமான செட்டான ட்ரெயின் ஸ்டேஷனை உருவாக்க, ஒன்றுக்கும் மேற்பட்ட வெவ்வேறான செட்களில் படம்பிடித்து அதை சந்தேகமே வராத வண்ணம் ஒன்றிணைத்திருக்கிறார்கள்!!
விமர்சனம் படிக்க..
விருது வெல்வதற்கான சாத்தியக்கூறு -19%

3. Transformers - The dark of the Moon

இந்த 5 படங்கள்லேயும் விஷுவல் எஃபெக்ட்ஸுக்காக அதிக பணத்தை விரயப்படுத்திய படம் இதுதான்! இதிலே வரும் Driller எனும் கதாப்பாத்திரம் தான் அனிமேட்டர்களுக்கு பெரும் தலையிடியைக் கொடுத்ததாம். காரணம் 70,000 பகுதிகளை ஒன்றிணைத்துத்தான் செய்ய வேண்டுமாம்.. (Optimus Primeக்கே வெறும் 10,000 பகுதிகள் தான் தேவைப்பட்டது)
அதைவிட முக்கியமாக இறுதிக்கட்ட சீனை ரெண்டர் செய்வதற்கு, ILM விஷுவல் எபெக்ட்ஸ் கம்பனியிலுள்ள அத்தனை கம்ப்யூட்டர்களையும் ஒரு நாளுக்கு 200,000 hours of rendering power கொடுத்துத்தான், ஒருவாரத்தில் செய்து முடிக்க முடிந்ததாம். இதே வேலையை ஒரேயொரு கம்ப்யூட்டரில் விட்டிருந்தால் 22.8 வருடங்கள் தேவைப்படுமாம்... அடேங்கப்பா!!! ஆனால் எல்லா செலவையும் டபுளாக யஈடுகட்டுவது போல் 1,124 மில்லியன் சம்பாதித்திருக்கிறார்கள்.
விருது வெல்வதற்கான சாத்தியக்கூறு -21%

2. Rise of the Planet of the Apes


 மனதர்களுக்கு மேக்கப் போட்டு குரங்கு மாதிரி நடிக்க வைத்த காலம் போய், இந்த பட சீரீஸ்ல முதன் முறையா Motion capture டெக்னாலஜியை பயன்படுத்தி மனிஷனை நடிக்க விட்டு அனிமேட் செய்திருக்கிறார்கள். இந்த டெக்னாலஜி ஹாலிவுட்டுக்கு புதிதில்லை என்றபோதும், இந்தளவு வினைத்திறனாக பயன்படுத்தியிருக்கிறார்களா என்பது சந்தேகமே.
விருது வெல்வதற்கான சாத்தியக்கூறு -25%

1. Harry Potter and the Deathly Hallows - 2

போன வருஷத்தோட ப்ளாக்பஸ்டர் ஹிட்டு... மொத்தமா 1,328 மில்லியன் வசூல் என்பவற்றுக்கெல்லாம் காரணமாக இருந்தது, 10 வருடங்களாக உலகைத் தனது மந்திரப்பிடியில் கட்டிப் போட்டு வைத்த ஹாரி பாட்டரின் கடைசிப்படம் என்பதால் மட்டுமல்ல.. அதில் வரும் விஷுவல் எஃபெக்டஸுக்கும்தான்! கண்டிப்பாக தியேட்டரில் மாத்திரமே பார்த்து அனுபவிக்க வேண்டிய ஒன்று அது!! அதுவும் ஹாக்வர்ட்ஸில் நடக்கும் அந்த இறுதிக்கட்ட யுத்தத்துக்கான வேலைகளை இப்போ இல்லை... 2008ம் ஆண்டுல இருந்தே தயாராக்கி வந்திருக்கிறாராம்.
Double Negativeங்கற விஷுவல் கம்பனியின் உதவியும் ஸ்கூலை இன்ச்சு இன்ச்சா ஸ்கேன் பண்ணி முற்றுமுழுதா டிஜிட்டலாக மீளக்கட்டியிருக்கிறார்களாம்!
விருது வெல்வதற்கான சாத்தியக்கூறு -26%

பின்னூட்டமிடுபவர்கள் மறக்காமல் தங்களைப் பொறுத்த மட்டிலும் எந்தப் படம் ஜெயிப்பற்கு சாத்தியம் அதிகமாகவுள்ளதென்பதை தெரிவித்து விட்டுச் செல்லுங்கள்..

8 comments:

 1. எனது பிளாக்குக்கு வந்ததோடு பின்னூட்டம் இட்டு என்னை ஊக்கபடுத்தியதற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் முதலில்.

  சில பணி காரணமாக இணையம் பக்கம் வரவில்லை.அதற்கு ஒரு மன்னிப்பு.
  அருமையான பதிவு..Visual effects பற்றி நிறைய தெரிந்துக்கொண்டேன்.பல நன்றிகள்.
  ஹுகோ படம் இன்னும் பார்க்கவில்லை.ஆனால் டிரைலர் பார்த்துவிட்டு அசந்துவிட்டேன்.இந்த படம் இந்த ஆண்டு நிறைய விருதுகளை பெறும் என நினைக்கிறேன்.என் வோட்டு ஹூகோ, Pirates of the Carribean - On Stranger tides - தான். நன்றி/

  ReplyDelete
 2. வருகைக்கு நன்றி குமரன்!
  //இந்த படம் இந்த ஆண்டு நிறைய விருதுகளை பெறும் என நினைக்கிறேன்//
  கண்டிப்பாக.. Hugo தான் இந்த வருஷம் மத்த படங்களுக்கெல்லாம் பெரிய காம்படிஷனே!!!

  ReplyDelete
 3. என் வோட்டு Hugoக்கும் Rise of the Planet of the Apesக்கும் தான்.

  ReplyDelete
 4. கருத்துக்கு நன்றி ஹாலிவுட்ரசிகன்!

  ReplyDelete
 5. என்னோட ஒரு பதிவுக்கு உங்க ப்ளாக் லிங்க் குடுத்து உள்ளேன்.
  உங்க அனுமதி இல்லாம லிங்க் குடுத்ததுக்கு தவறா நினைக்க வேண்டாம்.

  ReplyDelete
 6. @ ராஜ் - தாராளமாக நீங்கள் லிங்க் கொடுத்துக் கொள்ளலாம் நண்பா!

  ReplyDelete
 7. Hi nice info how did you find this

  ReplyDelete
 8. I searched for the films with the keyword "vfx", and i took the informational points from the searches i got!

  ReplyDelete

Related Posts with Thumbnails