Friday, January 13, 2012

ஆஸ்கர் அலசல் - Animation

எல்லாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!! போன வருஷம் தரமானதும், தாங்க முடியாததுமாக எக்கச்சக்கமான அனிமேஷன் படங்கள் ரிலீசாச்சு. இதுல எந்தெந்தப் படங்களுக்கு இந்த வருஷத்துக்கான ஆஸ்கர் அனிமேஷன் விருதைத் தட்டிச்செல்லுவதற்கான சாத்தியம், எந்தளவுக்கு பிரகாசமாக இருக்கிறது என சிறிது அலசுவோம்.. அதுக்கு முதலில் அனிமேஷனுக்கான ஆஸ்கர் விருதோட வரலாற்றை கொஞ்சம் பார்த்துட்டு போவோம்.

முதன்முதல்ல அனிமேஷன் படங்களுக்கும் ஆஸ்கர்ல தனிப் பிரிவொன்றை உருவாக்கி விருது கொடுக்க வேண்டும்-ங்கற ஐடியா 2001ம் ஆண்டுல தான் உருவானது. முதன் முதல் ஆஸ்கர் விருதைப் பெற்ற அனிமேஷன் திரைப்படம் ட்ரீம்வொர்க்ஸின் Shrek. இதுவரைக்கும் கொடுக்கப்பட்டுள்ள 10 அனிமேஷன் விருதுகள்-ல 6 தடவை விருது வென்று முதலிடத்தில் இருப்பது நம்ம பிக்ஸார் ஸ்டூடியோஸ்தான்!!! அதுவும் 2007ல இருந்து தொடர்ச்சியா 4 மெகா ஹிட்டுக்களை கொடுத்து அசைக்கமுடியாத உச்சியில் போய் உட்கார்ந்திருக்காங்க..
ட்ரீம் வொர்க்ஸ் 2 தடவை விருது வென்றுள்ளதோடு, டிஸ்னி தனியாளா ஒரு தடவையும் (Spirited Away), வார்னர் பிரதர்ஸ் ஒரு தடவையும் (Happy Feet) இந்த விருதை ஜெயிச்சிருக்காங்க..

வழக்கம் போல பிக்ஸார் இந்த வருஷத்துக்கும் நிதானமாக ரெடி பண்ணி ஒரேயொரு படம் தந்தாங்க- Cars 2. அந்தப் படம் சிறுவர்களிடம் வெகு பிரபலமானாலும், ரொம்பவே குழந்தைத்தனமாக இருப்பதாக கூறி விமர்சகர்களின் ரேட்டிங் குறைந்து விட்டது. பிக்ஸாரின் இந்த மைனஸ் பாயின்டை பயன்படுத்திக் கொள்வதற்கு ஏற்ற மாதிரி ட்ரீம்வொர்க்ஸ் Kung fu Panda 2, Puss in Boots ஆகிற படங்களைக் கொடுத்தது. அதேவேளை வருட ஆரம்பத்தில் ப்ளூஸ்கை ஸ்டூடியோஸ், Rio-ங்கற மெகா ஹிட்டைக் கொடுத்து அனிமேஷன் ரேஸுல தனக்கும் ஒரு இடம் ஒதுக்கிக் கொண்டது..

ஜுலை மாசத்துல, அமெரிக்காவில் பெருவாரியான வரவேற்பைப் பெற்றிருந்த Smurfs 3டி அனிமேஷன் படமாக வெளியானபோதும் சில குறைபாடுகள் காரணமாக ரேட்டிங்ஸில் பின்வாங்கியது.
பிக்ஸார் காம்பினேஷன் இல்லாமல் டிஸ்னியால் தயாரிக்கப்பட்ட படங்கள் 2 இவ்வருடம் வெளிவந்தன. அதில் Mars Needs Moms கமர்ஷியல் ரீதியாக படுதோல்வியைத் தழுவி "ஆல் டைம் பாக்ஸ் ஆபீஸ் ப்ளாப்" பட்டியலில் 5ம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. மற்றைய படமான Winnie the Pooh 2டியில் வெளியாகி பிஞ்சு நெஞ்சங்களை கொள்ளை கொண்டது..

நிக்கலோடியன்- பாரமவுன்ட் காம்பினேஷனில் இவ்வருடம் Rango படம் மார்ச்சில் வெளியாகி சிறந்த ரேட்டிங்ஸை அள்ளிக் கொண்டது.
வார்னர் பிரதர்ஸ் நவம்பர் மாசம் Happy Feet-2 படத்தை வெளியிட்டது. இதில் சுவாரஷ்யமான விடயம் என்னவென்றால், 2006ம் ஆண்டு பிக்ஸாரின் Cars படத்தை பின்னுக்குத்தள்ளி Happy Feet ஆஸ்கர் வென்று அதிர்ச்சியளித்தது. இவ் இரு படங்களினதும் இரண்டாம் பாகங்களும் மீள 2011ல் வெளியாகியுள்ளன!
வருட இறுதியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Tintin ஸ்பீல்பெர்க்- பீட்டர் ஜாக்ஸன் காம்பினேஷனில் வெளியாகி தற்போதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இவை தவிர வெளியான குறிப்பிடும்படியான அனிமேஷன் படங்கள்-Gnomeo and Juliet, Arthur Christmas
சரி, இப்போ அனிமேஷன் ஆஸ்கரை வெல்வதற்கான நிகழ்தகவுள்ள டாப் 5 படங்கள் எவை எனப் பார்க்கலாம்..

5. Cars 2
ஐயோ பாவம்! நம்ம 6 டைம் சாம்பியனுக்கு இப்ப low chance தான்.. 2006 ல வந்த Cars படமே சாதாரண பிக்ஸார் தரத்துக்கு கீழாக கருதப்பட்ட நிலையில், எந்த தைரியத்தில் அதுக்கு sequel எடுக்க முயன்றார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது. என்ற போதிலும் வசூலுக்கு குறைவில்லாமல் 560 மில்லியன் திரட்டியது.

விமர்சனம் படிக்க..
விருது வெல்வதற்கான சாத்தியக்கூறு - 5%4. Kung Fu Panda
ரொம்ப வருஷம் கழிச்சு ட்ரீம்வொர்க்ஸ் தனது பரம எதிரியான பி்க்ஸாரை பின்தள்ளியுள்ளது. எதிர்மறை விமர்சனங்கள் சில இருந்த போதிலும் பொதுவாக சிறந்த படமாக அங்கீகரிக்கப்பட்டது. 666 மில்லியன் வசூல்செய்து இந்த வருடத்தின் Top Grossing Animation Film ஆக பதிவானது.

விமர்சனம் படிக்க..
விருது வெல்வதற்கான சாத்தியக்கூறு - 14%3. Rio
இந்த வருஷ அனிமேஷன்களில் என் பேர்சனல் பேவரிட் இந்தப் படம்தான். ப்ளூஸ்கை ஸ்டூடியோஸ் என்றாலே "பிக்சார், ட்ரீம்வொர்கஸுக்கு அடுத்தபடி"தான் என்ற மாதிரி எமக்குள் எழும் எண்ணங்களைத் தகர்த்து, தன்னையும் முண்ணனி அனிமேஷன் ஜாம்பவானாக பதிவு செய்து கொண்டுள்ளது. பெருத்த வரவேற்புக்கு மத்தியில் 485 மில்லியன் வசூல் செய்தது.

விமர்சனம் படிக்க..
விருது வெல்வதற்கான சாத்தியக்கூறு - 25%2. Tintin - Secret of the Unicorn
ஸ்பீல்பேர்க், பீட்டர் ஜாக்சன், டின்டின் காமிக்ஸ் என பிரபலங்களை ஒன்றுதிரட்டியதால் ஏற்பட்ட உச்சபட்ச எதிர்பார்ப்பையும் வென்று டின்டின் ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளது. தற்போது வரையிலும் 332 மில்லியனை வசூல் செய்துள்ளதால் முடிவில் அனிமேஷன் படங்களுக்குள்ளேயே வசூலில் சாதனை படைக்கலாம் என நம்பப்படுகிறது.

விமர்சனம் படிக்க..
விருது வெல்வதற்கான சாத்தியக்கூறு - 26%1. Rango
முதன்முறையா ஒரு நிக்கலோடியன்- பாரமவுன்ட் காம்பினேஷன் படம் 2001ம் ஆண்டு ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பிடித்தது(Jimmy Neutron-Boy Genius). சரியாக 10 வருடங்கள் கழித்து இப்போ, இந்தப் படம் நாமினேட் செய்யப்படுவதற்கு மாத்திரம் அல்லாமல் விருது வெல்வதற்கும் அதிக சாத்தியக்கூறை கொண்டுள்ளது. 2011 முடிவதற்குள்ளேயே டீன் சாய்ஸ், பீபள் சாய்ஸ், ஹாலிவுட் பிலிம் பெஸ்டிவல் உள்ளிட்ட 10ற்கும் மேற்பட்ட விருதுகளை வென்று குவித்துள்ளது. என்ற போதிலும் இது திரட்டிய வசூலானது (245 மில்லியன்) மீதி 4 படங்களிலும் குறைவாக இருப்பது சிறிய மைனஸ்!
விமர்சனம் படிக்க..
விருது வெல்வதற்கான சாத்தியக்கூறு - 30%

பின்னூட்டமிடுபவர்கள் மறக்காமல் தங்களைப் பொறுத்த மட்டிலும் எந்தப் படம் ஜெயிப்பற்கு சாத்தியம் அதிகமாகவுள்ளதென்பதை தெரிவித்து விட்டுச் செல்லுங்கள்..

7 comments:

 1. Rioவுக்கு அதிக வாய்ப்புள்ளதாக நினைக்கிறன்

  ReplyDelete
 2. டின்டின்கும் விருது எதிர்பார்க்கலாம்

  ReplyDelete
 3. வெல்கம் லக்கி! நானும் ரியோ வெல்ல வேண்டும் என்றுதான் வேண்டிக்கொண்டிருக்கிறேன்..

  ReplyDelete
 4. இன்னும் டின்டின் பார்க்கவில்லை. ப்ளூரேக்கு வெயிட்டிங்.

  Rio, Rango, Tin Tin மூன்றுமே கேள்விப்பட்ட அளவில் மிக நன்றாகவே இருக்கின்றன.

  Tin Tinக்கு சற்று வாய்ப்பு அதிகமாக தோன்றுகிறது.

  ReplyDelete
 5. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஹாலிவுட்ரசிகன்!

  ReplyDelete
 6. 1. Kung Fu Panda, 2.Rio, 3. Tin Tin 4. Cars இதுவே என் தர வரிசை... பார்க்கலாம்...

  ReplyDelete
 7. நீங்க Rango படம் பிடிக்கலைங்கறதுக்காக அதை சேர்த்துக்காம விடலாம். ஆனா அது most critically acclaimed அனிமேஷன் மூவிகள்ல ஒண்ணு ஃபாயிக்!
  வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!!

  ReplyDelete

Related Posts with Thumbnails