Saturday, June 4, 2011

Rio (2011)

 என்னடா Kung fu Panda 2 எழுத வேண்டிய நேரத்துல "ரியோ" பத்தி எழுதுறானேன்னு யோசிக்கிறீங்களா.. நான் இன்னும் குங்பூ பன்டா 2 பார்க்கவில்லை.. இருந்தாலும் கும்பலோட கோவிந்தாவா இந்தப் பதிவையும் கலந்து விட்டுட்டம்னா யாருக்கும் எது புதுசு? எது பழசுன்னு தெரியாதில்லையா?? அதுதான்..


உலகத்துலயே ரொம்பவும் ஹேப்பியான சிட்டி எது தெரியுமா?? அட.. ரியோடி-ஜெனீரா தாங்க! இத நான் சொல்லல...(சொன்னா மட்டும் ஏத்துக்கவா போறீங்க?) "Forbes" சஞ்சிகை சொல்லுது..
காரணம் அங்கே இருக்க மக்களுக்கு எப்பவுமே ஆட்டம் பாட்டம் தான்!! கொண்டாடுறதுக்கு சின்னதா ஒரு மேட்டர் கிடைச்சா போதும் ஊரே களைகட்டுமாம்..
நம்பலைன்னா இந்த வீடியோவ பாருங்க... இது இந்த வருஷத்துக்கான கார்னிவலில் நடந்த கொண்டாட்டம்!!!

நம்ம படத்தோட கதையும் அங்க தான் நடக்குது.. சின்ன வயசுலயிருந்தே பறக்க கத்துக்காம விட்ட ஒரு நீலவண்ணக்கிளி தான் ஹீரோ.. பேரு ப்ளூ!! அது பாட்டுக்கு தன்னை எடுத்து வளர்த்த லின்டாவுடன் சேர்ந்து சொகுசு வாழ்க்கை வாழ்கிறது!!
காலையில் எழுந்திருக்கறது.. நாள் பூரா லின்டாவுடன் சேர்ந்து லைப்ரரியை கவனிச்சுக்கறது... மாலையில ஜன்னலோரமா காலைநீட்டி, உட்கார்ந்து டீ குடிக்கிறது.. ராத்திரியில எப்படிடா பறக்கலாம்-ங்கறதுக்கு சயின்டிபிக் புத்தகங்களை திறந்து வைச்சுகிட்டு ஆராய்ச்சி பண்றது.. ராஜா மாதிரி வாழ்க்கை!!

திடீர்னு ஒரு நாள் பிரேசில்ல இருந்து டூலியோ-ங்கற பறவை ஆராய்ச்சியாளர் ஒருத்தர் வந்து, ப்ளூவோட இனம் ரொம்ப அரிதாகி விட்டது. தன்னிடம் ஒரு பெண்பறவை இருப்பதாகவும், அதனுடன் ப்ளூவை இனம்பெருக விட்டுத்தான் இனத்தையே அழிவுலருந்து காப்பாற்றலாம்னும் கெஞ்சிக் கேட்கிறான். முதல்ல மறுத்தாலும், பிறகு ஒருவாறாக ஒத்துக் கொண்டு ப்ளூவையும் கூட்டிட்டு ரியோ-டி-ஜெனீராவுக்ககு கிளம்புகிறார்கள்..

அங்கே ப்ளூவும் "ஜுவல்" அப்படீங்கற பெண் நீலவண்ணக்கிளியும் ஒரே கூண்டுக்குள்... ஜுவலுக்கோ சுதந்திரமாக இருக்க விருப்பம்-ங்கறதால தொடர்ந்து அங்கேயிருந்து தப்பிக்க தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொள்கிறது.. ஆனால ப்ளூவுக்கோ கூண்டுக்குள் இருந்தாதான் பாதுகாப்பே!!
வெளியில இருந்துகிட்டு டூலியோ இரண்டு பறவைகளுக்ககுள்ளும் கிளுகிளுப்பை உண்டுபண்ண மேற்கொள்ளும் நடவடிக்கைகளும், அதுக்கு ரியோ அப்பாவியாய் முழிக்கும் ரியாக்ஷன்களும் செம காமடி!! இரண்டுக்கும் கடைசிவரை ஒத்துப்போகவேயில்லை.. ப்ளூ தனக்கு பறக்க முடியாதுங்கறதை ஜுவலிடமிருந்து மறைக்கிறது..

அன்றிரவு அதே பறவைகள் காப்பகத்துல இருக்கும் நைஜல்-ங்கற cockatooவோட (சரியான தமிழ்வடிவம் என்னன்னு தெரியல..) உதவியுடன் "மார்செல்" என்பவனின் தலைமியிலான கடத்தற்காரர் குழு கடத்திச் சென்றுவிடுகிறது. ஆனால் அங்கிருந்து ப்ளூவும், ஜுவலும் ஒரு வழியாக தப்பித்து விடுகின்றன.
இது தெரிந்த மார்செல் ரென்டு கிளிகளையும் தேடிப்பிடிக்கும் பொறுப்பை நைஜலிடம் ஒப்படைக்கின்றான்..

அதே நேரம் மார்செலிடம் வேலை பார்த்து, பின்னர் ஏமாற்றப்பட்டு திரும்பும் "பெர்னான்டோ" எனும் சிறுவன் லின்டாதான் ப்ளூவுக்கு சொந்தக்காரர் என்று தெரிந்ததும், அவளுக்கு உதவி செய்ய முன்வருகின்றான்.. பறக்க முடியாத ப்ளூவும், சுதந்திரத்தை விரும்பும் ஜுவலும் நைஜலிடமிருந்து தப்பித்தார்களா?? ப்ளு லின்டாவுடன் போய்ச் சேர்ந்தானா என்பது மீதிக்கதை!!

அனிமேஷன் படங்களுக்கு முழு செட்டிங்கா ரியோ -டி-ஜெனீராவை எடுப்பது இதுதான் முதல்முறை என்பதால் காட்சிகள் ஒவ்வொன்றும் ஈர்க்கிறது.. படத்தோட ஆரம்ப பாடல் மெகா கலர்புல்.. ஏனைய பாடல்களும் நிச்சயம் ரசிக்க வைக்கும்!!

டைரக்டர் Carlos Saldanha-உம் இதே ஊரு தானாம். பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்க்கறதுன்னா என்னான்னு எல்லாரும் இந்த படத்தை பார்த்து தெரிஞ்சுக்குங்கோ!!
படம் முழுக்க சிரிக்க வைக்க ஏராளமான காமெடி சீன்கள்.. உண்மையை சொல்லப்போனா படத்துல "ஜுவல், நைஜல், மார்செல்".. இந்த மூணு பேரத் தவிர மீதி எல்லாமே காமெடிப்பீஸுகள்தான்!!!

படத்துல என்னை மிகவும் கவர்ந்த கேரக்டர் அந்த "பெர்னான்டோ" பையன்தான்!! அவன் கண்களை ஒருதடவை கவனிச்சுப் பாருங்க.. ஏக்கம், தவிப்பு எல்லாதே தத்ருபமா தெரியுது.. கடைசி சீன்ல லின்டா, டூலியோவோட பெர்னான்டோவும் சேரும் சீன்.. சோ ஸ்வீட்!!
"ஐஸ் ஏஜ்"க்கு அப்புறம் ப்ளூஸ்கை ஸ்டூடியோஸ் ரொம்பவும் மெனக்கெட்டு நேர்த்தியான படத்தை கொடுத்திருக்காங்க.. இந்த வருஸத்துக்கான ஒஸ்காருல கண்டிப்பா பிக்ஸாரோட "Cars-2"க்கு இது ஒரு போட்டிதான்!!

பாத்திரங்கள்- 18
அனிமேஷன்-17
பின்னணித் தரவுகள்- 18
கதை+திரைக்கதை- 16
இயக்கம்-15

மொத்தம்- 84% சூப்பர்!!

Rio (2011) on IMDb

7 comments:

 1. சும்மா கலக்கிருக்காங்க... குங்ஃபூ பாண்டாவை விட இந்த படம் ரொம்ப புடிச்சு போச்சு நண்பரே

  ReplyDelete
 2. ரியோ தியேட்டரில் பார்க்க மிகவும் கொண்டாட்டமாக இருந்தது.அந்த லவ் சாங் மறக்க முடியாதது.
  ரியோடிஜெனிரோ நகரத்தை பற்றிய தகவல் அருமை நன்றி.அடிக்கடி எழுதுங்கள்.

  ReplyDelete
 3. லக்கி - இப்படித்தான் Bluesky எப்போதாவது அத்தி பூத்தாற் போல Dreamworksஐ முந்துது..

  உலக சினிமா ரசிகன் - ரியோ மாதிரி சாங்க்ஸை வேறெந்த அனிமேஷன்லயும் அவ்வளவு ஈஸியா பார்க்க முடியாது. (விதிவிலக்கு பிக்ஸார்!)

  ReplyDelete
 4. படம் சூப்பர் .. review கலக்கல் ... ரிவர் Of ஜனவரி அப்டிங்கறது தான் RIO DE ஜெனிரோ ... 2016ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ரியோ டி ஜனேரோவில
  தாங்க நடக்க போகுது .....

  ReplyDelete
 5. @ DUGGU - 2014க்கான பீபா கால்பந்தாட்ட உலகக் கோப்பையும் பிரேஸில்ல நடக்க இருக்கிறது. அதுல Hosting Cityகள்ல ஒண்ணாகவும், Broadcasting Centre ஆகவும் ரியோ டி ஜெனீரா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கு!!

  ReplyDelete
 6. ஊருக்கு போயிருந்தேன்.......அப்புடியே உங்க பதிவு விட்டுப் போச்சு...

  ஏய்யா....வயிதேரிச்சல கெளப்புறீங்க......எங்க - அதாவது நா வேலை பார்க்கும் ஊர்ல - Rioயும் KF2யும் ரெண்டுமே ரீலஸ் ஆகல.......வேதாளம் 2ன்னு ஒரு மொக்க தான் போட்டிருக்காங்க....

  நீங்க எதுல பாத்த்தீங்க......தியேட்டர்லயா ?

  ReplyDelete
 7. வேதாளம் 2ங்கறது Nightmare on Elm Street தானே.. அதையாவது பார்த்து பசியை போக்கிக்குங்க..
  நான் பார்த்தது டவுன்லோடிங் மூலமாத்தான்!!

  ReplyDelete

Related Posts with Thumbnails