ம்.. என்ன பண்ணுறது எல்லாம் என் நேரம்! இன்டர்ஸ்டெல்லார் இங்க ரிலீஸ் ஆவதற்கான அறிகுறி ஒண்ணையும் காணோம். Space Moviesனா எனக்கு அலாதி பிரியம். ஆனா அது இந்த தியேட்டர்காரன்களுக்கு புரிய மாட்டேங்குதே.. 'கிராவிட்டி' படத்துக்கு நடந்தது போல ரெண்டு மாசம் கழிச்சு படத்தை பத்தின டிஸ்கஷன் எல்லாமே முடிஞ்சதுக்கப்புறம் தான் இங்க போடுவாங்க போல..
இன்டர்ஸ்டெல்லார் அளவு இந்த வருஷம் நான் எதிர்பார்த்திருந்த படம்னா அது Boyhood தான். காரணம்
1. இயக்குனர் ரிச்சர்ட் லின்க்லேட்டர்
2. பனிரெண்டு வருஷம் மேக்கங்ல கிடந்த படமாச்சே!!
படத்தைப் பற்றி கேள்விப்படாதவர்களுக்கு - 'இது கேமரூனுக்கு 'அவதார்' படம் போல, லின்க்லேட்டரோட கனவுப்படம், அதான் இவ்வளவு வருஷ கேப்பா?'னு தப்பா கணக்கு போட்டுராதீங்க. படத்தோட கதைக்காகதான் இவ்வளவு பெரிய இடைவெளி. அதாவது ஒரு பையனோட வாழ்க்கையை, அவன் வளர்ச்சியை 6 வயசுலேர்ந்து, 18 வயசுவரைக்கும் அதாவது ஹை-ஸ்கூல் முடிச்சு காலேஜ் போய் சேரும் வரைக்கும் ரெண்டே முக்கால் மணிநேரத்தில் அட்டகாசமான படமா எடுத்து வெளியிட்டிருக்காரு இயக்குனர்!
![]() |
லெட்ஸ் டேக் எ செல்ஃபீ புள்ளங்களா! |
கதையை சற்று லூஸாக வைத்துக்கொண்டு முழுக்க முழுக்க காட்சிகளலும், கேரக்டர் டெவலப்மென்டிலும் அஸ்திவாரத்தை இறக்கியிக்கும் ஒரு படம். லின்க்லேட்டரின் முந்தைய படங்களை பார்த்திருப்பவர்களுக்கு அவர் இந்த ஏரியாவில் எவ்வளவு பெரிய எக்ஸ்பெர்ட் என்பது தெரிந்திருக்கும். கூடவே காட்சக்கு காட்சி கைகொடுக்கும் வசனங்கள்.. பெற்றோர்கள் தங்களுக்குள் விவாதம் செய்வதாயிருக்கட்டும், டீச்சர் future பத்தி அட்வைஸ் செய்வதாயிருக்கட்டும், சகஜமாக 'மனிதர்களில் எத்தனைவிதம்' என்று உரையாடுவதாயிருக்கட்டும்.. நாம் பார்த்துப் பார்த்துப் புளித்துப்போன சீன்களில் கூட நிமிர்ந்து உட்காரவைக்கும் வசனங்கள். ஒவ்வொரு வசனமும் அக்மார்க் ரிச்சர்ட் லின்க்லேட்டர் தரம்!
படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் மேலே குறிப்பிட்ட நான்கு முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடித்த நடிகர்கள்! மேசனாக நடித்திருப்பது 'எல்லார் கொல்ட்ரேன்'. இதுதான் பையன் ஒப்பந்தமான முதல் படம் என்றாலும், படம் ரிலீசாவதற்குள் மேலும் நான்கு படங்கள் நடித்து விட்டிருக்கறார். மிக முக்கியமான casting இவர்- அவ்வளவு சின்ன வயசிலேயே வருங்காலத்திற்கும் சேர்த்து தொடர்ச்சியாக நடிக்கக்கூடியதான ஒரு டீசன்டான நடிகரை கணித்து தேர்ந்தெடுத்திருப்பதே பெரிய சாதனை தான். பையனின் அப்பாவாக இயக்குனரின் ஃபேவரிட் நடிகர் ஈதன் ஹாவ்க்! வெகு சுலபமாக ரோலுக்குள் நுழைகிறார்..
samanthaவைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் ஒரு முக்கியமான சீனையும் குறிப்பிட வேண்டும். படத்தில் அப்பாவுக்கும், மகளுக்கும் ஒரு conversation வரும். teenage pregnancyயைப் பற்றி.. தம்பியை முன்னால் வைத்துக்கொண்டே அப்பா 'இப்படி, அப்படித்தான் இருக்கணும்'னு அடுக்கிக்கொண்டே போக திருப்பி பதில் சொல்லவும் முடியாமல், உரையாடலை நிறுத்தவும் முடியாமல் shy, awkward எல்லாவற்றையும் கலந்துகட்டி நடிப்பார் பாருங்கள்.. இம்ப்ரெஸ்ஸிவ்! ஒருவேளை அந்தப் பொண்ணோட உண்மையான அப்பாவையே பேசவைத்து இவரது ரியாக்ஷனை ஷூட் பண்ணியிருப்பார்களோ என்று யோசித்தருந்தேன். படம் பார்த்ததுக்கப்புறம் தெரிஞ்சுது அந்தப் பொண்ணோட பெயர் Lorelei Linklater.. இயக்குனர் சாரோட பொண்ணே தான்!
ஹ்ம்.. awkwardஆகத்தான் இருந்திருக்கும் படப்பிடிப்பில்!!
![]() |
தசாவதாரம் ஹாலிவுட் வேர்ஷன் ஹீரோ ரெடி! |
ஆனால் முந்தைய முயற்சியில் அவ்வளவு ரிஸ்க் இல்லை. 9 வருஷம் கழித்து படக்குழுவைக் கூட்டி இன்னொரு படம் பண்ணலாமானு சூழ்நிலைகளை ஆராய்ந்து முடிவெடுக்கலாம். எதுவும் சாதகமா இல்லையா? project droppedனு அடுத்த வேலையை பார்த்து போய்க்கிட்டே இருக்கலாம்.
Boyhood படம் அப்படியா? 12 வருஷத்துக்குள்ள முக்கியமான ரோலில் நடிப்பவர்கள் யாருக்காவது எதாவது ஆனால்? மற்ற எல்லா கேரக்டர்களும் வளர்ந்து கொண்டிருக்கும் போது ஒரு கேரக்டரில் மட்டும் ஆள்மாறாட்டம் பண்ண முடியுமா? இன்னும் எக்கச்சக்கமான சின்ன சின்ன ரிஸ்க்ஸ் நிறைய இருக்கு. ஆனால் எல்லாவற்றையும் அழகாக ஓவர்கம் பண்ணயிருக்கிறார் இயக்குனர்.
படத்தோட basic plotஐ மட்டும் எடுத்துக்கொண்டு, வருஷங்கள் செல்லச்செல்ல தனக்குத் தேவையானவாறு கதையை கொஞ்சம் அங்கும் இங்குமாக ஓடவிட்டு திரைக்கதையை அமைத்திருக்கிறார். 2000ம் ஆண்டு படம் செய்யலாம் என்று கிளம்பிய இயக்குனருக்கு வருங்காலத்தில் 9/11 அட்டாக் நடக்கப்போவதோ, ஈராக்குடன் போர் நிகழப்போவதோ, பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாகப் போவதோ தெரிந்திருக்கப் போவதேயில்லை. ஆனால் ஒரேயோரு patriotic கேரக்டர் (தந்தை- ஈதன் ஹாவ்க்) மூலம் பட ஓட்டத்துடன் இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளையும் ஆங்காங்கே இணைத்து ரசிக்க வைக்கிறார். இதே போல பேஜர், கேம்போய் தொடங்கி டச் ஃபோன், பேஸ்புக் வரையும் இளைய தலைமுறையினரின் பொழுதுபோக்குகள், தொழில்நுட்பங்கள் சார்ந்த வளர்ச்சியையும் காட்டியிருப்பது செம!
இவ்வளவு வருஷம் கடந்து செல்லும் படத்துக்கு பட்ஜெட், சேலரி எப்படி போட்டிருப்பார்கள் என்பது ஆச்சரியமே.. வெறும் 4 மில்லியன் மொத்த செலவில் எடுத்து 10 மடங்கு அதிகமாக பாக்ஸ் ஆபீஸில் ஈட்டியிருக்கிறார்கள். படம் ரிலீசானதிலிருந்து முற்றுமுழுதாக எல்லாத் தரப்புகளிடமிருந்தும் பாராட்டுக்கள் மாத்திரமே குவிந்து கொண்டிருக்கின்றன. Rotten Tomatoesஇல் 99%, Metacriticஇல் 100/100.. இப்படியெல்லாம் மார்க்ஸ் வாங்கிய கடைசி படம் என்ன என்பதே எனக்கு நினைவில் இல்லை! பல விமர்சகர்கள் இப்பொழுதே "மாஸ்டர்பீஸ்" என்று லேபல் செய்து விட்டார்கள். டெக்னிக்கலாக பார்க்கும்போது இப்படியொரு முயற்சி நிச்சயம் அத்தனை பாராட்டுக்கும் உரித்துடையதுதான். ஆனால் இந்த '12 வருஷ மேக்கிங்' என்பதை ஓரம் கட்டிவிட்டு சாதாரண படம் போல் பார்த்தால் "மாஸ்டர்பீஸ்" என்ற பதத்திற்கு தகுதியுடையதா என்பதில் சிறு சந்தேகம்.. அவ்வளவு தான். மற்றையபடி அடுத்த வருஷம் ஆஸ்கர்களில் சிறந்த படம், சிறந்த இயக்குனர் நாமினேஷன்கள் உறுதி! ஒருமுறைக்கு இருமுறை கட்டாயம் பார்க்கவேண்டிய படம்!!
என் ரேட்டிங் - 8/10

Interstellar படம் பற்றிய சுவாரசிய தகவல்கள்:
ReplyDeleteInception, Memento மற்றும் The Dark Knight படங்களை குடுத்த Christopher Nolan ன் சமிபத்திய படம் தான் Interstellar.
(1) இந்த படத்தின் கதை மற்றும் திரைகதையை உருவாக்க Christopher Nolan மற்றும் அவரது சகோதரர் Jonathan Nolan அவர்களுக்கு நான்கு ஆண்டுகள் பிடித்தது.
(2) நோலனின் சகோதரர் Jonathan Nolan இந்த கதை முழுக்க Relativity, Gravity, WormHole, Blackhole போன்ற அறிவியல் சார்ந்த விஷயங்கள் இருப்பதால் கலிபோர்னியா யுனிவர்சிட்டியில் Relativity பற்றி படித்துக் கொண்டே இந்த கதையை உருவாக்கினார்.
(3) படத்தில் உள்ள ஒரு சோளக்காடு எரிவது போல உள்ள காட்சியமைப்புக்காக நோலன் கிராபிக்ஸ் பண்ண விரும்பவில்லை. Production Designer ஐ அழைத்து 500 ஏக்கர் அளவில் சோளத்தை பயிரிட்டு அது வளர்ந்ததும் அதை கொண்டு காட்சியமைப்பை உருவாக்கினார்.
(4) படத்தில் நிறைய அறிவியல் சார்ந்த விஷயங்கள் இருப்பதால் அறிவியலை தவறாக சொல்லிவிடக்கூடாது, முடிந்தவரை சரியாக சொல்ல வேண்டும் என்பதற்காக Theoretical physicist Kip Thorne அவரை இந்த படத்தின் scientific consultant ஆக நியமித்து அவர் மூலம் இந்த Relativity, Wormhole மற்றும் Blackhole பற்றி முடிந்தவரை சரியாக படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
(5) படத்தில் Wormhole மற்றும் Blackhole காட்சியமைப்புக்காக Theoretical physicist Kip Thorne மற்றும் 30 பேர் கொண்ட Visual Effects குழுவும் இணைந்து பணியாற்றினர். உண்மையாக Wormhole மற்றும் Blackhole எப்படி இருக்குமோ அதை திரையில் உருவாக்க Kip Thorne அவர்கள் Theroritical equation ஐ உருவாக்கி அதில் உள்ளது படி Visual Effects செய்தனர்.
(6) Blackhole உருவாக்கத்தில் உள்ள சில frame ஐ correction செய்யவே 100 மணி நேரம் ஆகியதாம். அதற்காக அவர்கள் பயன்படுத்திய data மட்டும் 800TB அளவானது.
Blockhole Making Video...
https://www.youtube.com/watch?v=MfGfZwQ_qaY
(7) IMAX கேமராவில் 66 நிமிடங்கள் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. The Dark Kinght Rises படம் 72 நிமிடங்கள் படப்பிடிக்கப்பட்டது. அந்த படத்திற்கு அடுத்தபடியாக இந்த படம் தான் அதிக நேரம் IMAX கேமராவில் எடுக்கப்பட்ட திரைப்படம்.
மேலும் பல உலக சினிமா தகவலுக்கு
https://www.facebook.com/hollywoodmve
லைக் செய்யவும்...