Shane Carruth ஐ ஞாபகம் இருக்கிறதா? 7000 டாலர் மினி பட்ஜெட்டில் சயின்ஸ் ஃபிக்ஷனையே ஒரு கலக்கு கலக்கியவர்... தலைமுடியைப் பிய்த்துக்கொள்ள வைக்கும் இவரது முதல் முழுநீளத் திரைப்படமான பிரைமர் பற்றி ஏற்கெனவே ஒரு விளக்கத் தொடராக எழுதியது தொடர்ந்து இங்கு வரும் நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்.
அதைத் தொடர்ந்து இவரது அடுத்த படம் எப்போ வரும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டேயிருந்தேன். வந்ததும் (போன வருஷம் ஆகஸ்ட் போல..) டவுண்லோடும் பண்ணிவிட்டேன். முழு எதிர்பார்ப்புடன் இருந்து படத்தைப் பார்த்தா தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. பாதிக்கு மேல் படத்தை பார்க்கவே முடியவில்லை.. இத்தனைக்கும் படம் வெறும் 86 நிமிடங்கள் தான்..
என் நண்பன் ஒருவன் மகா மட்டமான படமாக இருந்தாலும் பார்க்கத் தொடங்கினால், கட்டாயம் பார்த்து முடிக்காமல் விடமாட்டான். அவனுக்கே இந்தப் படம் முழுசாக பார்த்து முடிப்பதற்கு 2 நாட்கள் தேவைப்பட்டது. படம் பார்த்தும் 'இது படமா? இல்லை டாகுமென்டரியா?' என்ற சந்தேகத்துடனேயே இருந்தான்..)
எப்படியும் Shane Carruth மீதிருந்த அபரிமிதமான நம்பிக்கையால் (இவரு எடுத்த படம் கண்டிப்பா வெத்து டப்பாவாக இருக்க முடியாது....) படத்தை பார்த்தேயாக வேண்டும் என்று பல தடவைகள் தொடர்ச்சியாக ட்ரை பண்ணி தோல்விகளைத் தழுவிக் கொண்டதுதான் மிச்சம்.
ஒரு கதையென்றால் சம்பவங்களின் கோர்வையாகத் தானே இருக்க வேண்டும். இங்கு முழுப் படமுமே வெறும் காட்சிகளின் கோர்வையாக இருக்கிறது. எப்பவாவது ஒரு சம்பவம் நடந்து படத்தை சுவாரஸ்யத்தோடு ஃபாலோ செய்தால் வெகு சில வினாடிகளிலேயே சுவாரஸ்யம் காற்றில் கரைந்துவிடுகிறது.
நேற்று வேறு வேலையே இல்லை என்ற நிர்ப்பந்தத்தில்(!?) மீண்டும் படத்தை முதலிலிருந்து துவக்கினேன். ஆரம்பத்தில் கடந்த பார்வைகளின் போது தோன்றிய அதே கொட்டாவிகளே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தபோதும், தட்டுத் தடுமாறி பாதியைத் தாண்டியபின் லேசாக மண்டைக்குள் பொறி தட்டிக்கொண்டிருந்து கடைசியில் 'புரியுது' என்று வாய்விட்டுச் சொல்லும் வேளைக்குள் படம் முடிந்தே விடுகிறது. ஆனால் படம் முடிந்தவுடன் ஒரு ஃபீல் வரும் பாருங்கள்.. வார்த்தைகளால் விபரிக்க முடியாது! படத்தைப் பற்றிய எனது நெகட்டிவ் அபிப்பிராயங்கள் அனைத்தும் முழு பாசிட்டிவாகி விட்டன. எந்த ஸ்லோ திரைக்கதையும், தொடர்ச்சியான காட்சிக் கோர்வைகளும் அலுப்படையச் செய்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேனோ அவை படத்துக்கு அத்தியாவசியமாக இருந்ததை இப்போது உணர்ந்து கொள்ள முடிகிறது.. கிட்டத்தட்ட ஒரு வருஷமா படத்தை டிலீட் பண்ணாமல் ஹார்ட் ட்ரைவிலேயே வைத்திருந்ததற்கு எதிர்பார்த்ததற்கு மேல் பலன் கிடைத்திருக்கிறது!!
![]() |
"டேய், உனக்காவது இந்த படம் புரியுதாடா?" |
ஸபா... அவ்வளவுதாள்! போதும்!! நான் எழுதியதை வாசிக்கும் போது எனக்கே ஏதோ த்ரில்லர் படம் போலிருக்கிறது. நீங்கள் தப்பித்தவறிக் கூட அப்படி நினைத்துவிட வேண்டாம்!
'Experimental படம் எடுக்க ஆசைப்பட்டிருக்கலாம். அதற்காக இவ்வளவு Experimentalஆகவா ஒரு படம் எடுக்கிறது?' சரியா சொல்லனும்னா இது படு ஆழமான Thematic Film!! (தமிழாக்கம் ப்ளீஸ்..)
கிட்டத்தட்ட ஒரு (definite?!) ஸ்டோரிலைனை வைத்துக்கொண்டு இந்த genreயின் பார்டர் வரை சென்று விளையாடி வந்திருக்கிறார். 'இந்த மனுஷனா அவ்வளவு மூளைக்கு வேலை கொடுக்கும் திரைக்கதை கட்டமைப்புடன் பிரைமரை எடுத்தார்?' என்று சந்தேகம் கொள்ளவைக்கிறது இந்தப் படம்.. உண்மையைச் சொல்லப் போனால் இரண்டுமே படு complex-ஆன கதைகள். அதை படமாக எடுப்பது சவாலான விடயமென்றால், படத்தை விளங்கிக் கொள்வது அதை விட சவாலானது. கண்டிப்பாக இரண்டுக்குமே மறுபார்வைகள் தேவைப்படும்... பிரைமராவது ஒரு என்ஜினியரிங் மூளைக்கு விளங்கக்கூடும், இது அதையும் தாண்டிப் புதிரானது!! படம் முடிந்ததும் ஒவ்வொருவரும் படத்தை ஒவ்வொருவிதமாக விளங்கிக் கொண்டிருக்கலாம். படத்திற்கான general interpretation என்னவென வினவியபோது இயக்குனர் அளித்த பதில் இதோ :
about whether we control our identity or whether our identity controls us
இந்தப் படத்துக்கும் ஒரு விளக்கப்பதிவு எழுதலாம்னு ஆசைதான். ஆனால் அந்தளவுக்கு நான் விளங்கிக் கொள்ளவேயில்லை என்பதுதான் உண்மை. இன்னும் 2 தடவையாவது படத்தை முழுமையாக பார்க்க வேண்டுமென்று நினைக்கிறேன். அதைவிட உண்மையில் இந்தப் படத்தை நேரடியாக விளக்கவே முடியாது!! விளக்கமேயில்லாமல் கண்ணை மூடிக்கொண்டு ஒரு படத்தை appreciate பண்ணக் கூடாதுதான். ஆனால் இந்தப் படத்தை என்னவென்று சொல்வது?... பேசாமல் யாராவது புத்திஜீவிகள் பேசத் தொடங்கும் வரை கையைக் கட்டிக்கொண்டு நிற்க வேண்டியதுதான்.. படத்தை பார்த்தவர்கள் மாத்திரம் இங்கே போய் டவுட் ஏதாவது கிளியராகுதா என்று பார்க்கலாம்..
![]() |
இட்ஸு மி... த வன் மேன் ஆர்மி!!! |
படத்தில் பங்காற்றிய குழுவைப்பற்றி சொல்லனும்னா போனமுறை போலவே நடிப்பு, எழுத்து, இயக்கம், தயாரிப்பு, எடிட்டிங், இசை எல்லாமே அவர்தான். என்ன.. இந்த முறை எக்ஸ்ட்ராவாக ஒளிப்பதிவுக்கும், electrical department தோள் கொடுத்திருக்கிறார்!! இதைத் தவிர்த்து படத்தின் மிகப்பெரிய பலம் Amy Seimetz. தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை இந்தளவுக்கு உள்வாங்கி அழகாக நடிக்கும் இந்த நடிகைக்கு பெரிய வாய்ப்புக்கள் அமையாதது ஏனோ??
படத்தின் final verdict - ஸ்ட்ரிக்டாக உலக சினிமா ரசிகர்களுக்கு மட்டும். அதிலும் மிகப் பொறுமைசாலிகளாக இருத்தல் நன்று. அதிலும் பாதி பேர் தான் படத்தை முழுமையாக பார்க்கக்கூடும். அதிலும் வெகுசிலருக்கே படம் பிடிக்கக்கூடும். ஆனால் பிடிச்சிருந்தால் இப்படியொரு படம் உங்கள் சினிமா பார்க்கும் அனுபவத்தில் இன்னொரு முறை வருமா என்று உங்களுக்கே டவுட்டாகக்கூடும்.!!
என் ரேட்டிங் - 7/10
பாஸு.. எவ்ளோ நாளாச்சு.. யுத்தம் ஆரம்பம்" ல மிஸ் ஆனிங்க.. இப்போ தான் நெக்ஸ்டு மீட் பண்றோம் போலியே.. என்னாச்சு???
ReplyDelete/யுத்தம் ஆரம்பம்/ டைம்லாம் மறக்க முடியுமா?.. முதல் சில எபிஸோடுகள் செமையாக போச்சு. நானும் ப்ளாட் பாயின்டுகள்லாம் எடுத்து வைச்சுகிட்டு ட்விஸ்ட் ஒண்ணு பண்றதுக்கு ரெடியாகவே இருந்தேன். ஆனா கேரக்டர் எண்ணிக்கை கூடிவிடவும், கதை வேறு கோணத்துக்கு செல்லவும் கழன்டுகிட்டேன்.. ஸாரி.
Delete* யாராவது அந்த கதையை முடித்தார்களா??
சின்னதா ஒரு பிரேக் எடுக்கப்போயி பெரிய ஹாலிடேவாயிருச்சு நண்பா. இப்போ திருப்பி கொஞ்சம் கன்ஸிஸ்டன்டா எழுதலாம்னு பார்க்குறேன் :)
உங்க ப்ரைமர் தொடரை மறக்க முடியுமா ? நீங்க எழுதுன காலகட்டத்துல எனக்கு ப்ளாக்னா என்னன்னே தெரியாது.. ஆனா அந்தப்படம் பாத்துட்டு நெட்ல தேடுனப்போ உங்க லிங்க்தான் கிடைச்சது. அப்டித்தான் உங்க ப்ளாக் எனக்கு அறிமுகமாச்சு. உங்க விளக்கத்தைப் படிச்சதுக்கப்புறம் தான் நிறைய விஷயங்கள் புரிஞ்சது.. அதுக்கப்புறம் யார் ப்ரைமர் பத்தி பேசுனாலும் உங்க லிங்கை தான் ரெஃபர் பண்ணச் சொல்லுவேன். நிறைய இடங்கள்ல(ஃபேஸ்புக்ல) ஷேரும் பண்ணிருக்கேன். அவ்ளோ உழைப்பு அந்தத் தொடர்ல.. :)
ReplyDeleteஇந்தப்படம் நானும் முன்னாடியே டவுன்லோட் பண்ணி வச்சுருக்கேன். நீங்க சொல்ற அந்த பொறுமையான நேரத்துக்காக, சூழ்நிலைக்காக வெயிட் பண்ணிக்கிட்டிருக்கேன். நல்ல சந்தர்ப்பம் அமைஞ்சா உடனே பாத்துர வேண்டியது தான்.. :)
இவராச்சும் மெயின்ஸ்ட்ரீம் படங்கள் எடுக்கற ஸ்டுடியோ கைல சிக்காம இருக்கட்டும் தல.. இண்டிபெண்டன்ட் படங்களே எடுக்கட்டும்.. அதான் நம்மள மாதிரி ரசிகர்களுக்கு வேணும்..!!
பிரைமர் எழுதும் போது உங்களைப் போல சைலணட் ரீடர்ஸ் இருந்ததே தெரியாது.. தேங்க்ஸ் நண்பா! :)
Delete//இவராச்சும் மெயின்ஸ்ட்ரீம் படங்கள் எடுக்கற ஸ்டுடியோ கைல சிக்காம இருக்கட்டும் தல..//
நீங்கள் சொல்வதும் சரிதான். இன்டிபென்டன்ட் ரிலீசுல கிடைக்குற சுதந்திரம் புரொடியூசருக்கு கீழே கிடைக்காதுதான். ஆனா இன்னமும் இவர் under-appreciated ஆகவே இருப்பதுதான் சிறிது வருத்தம் அளிக்கிறது..
Upstream Colors பார்த்து ரொம்ப நாள், அதுக்கு விமர்சனம் ஒன்னும் எழுதியிருக்கேன். (அது படத்தை விட குழப்பமாக இருக்கும் என்பதால் பதிவிடவில்லை) எனக்கு பிடிச்ச படம்.... இயக்குனரை பற்றி ஏலவே தெரியும் என்பதால் கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டுதான் பார்த்தேன்... அப்ப கூட பாருங்க போட்டு வாங்கு வாங்குனு வாங்கிட்டார்... ஆனா சிம்பள் ஒன்லைன்.
ReplyDeleteஎனக்கு ரொம்ப பிடிச்ச படங்களில் ஒன்று.
பிரதர், அவரையும் மெயின் ஸ்ட்ரீமுக்கு இழுக்க வேணாமே...
//அது படத்தை விட குழப்பமாக இருக்கும் என்பதால் பதிவிடவில்லை//
DeleteWhy man.. why???
மெயின் ஸ்ட்ரீம் மக்களின் பார்வையில்னு நான் சொல்ல வருவது Nolan மாதிரியெல்லாம் மாறாம Terrence Malik மாதிரி கொஞ்சம் வைட் ரிலீஸ் கிடைச்சா நல்லாருக்கும்னுதான்... எனிவே, நான் சொன்னாலும் அவர் வரப்போவதில்லைதானே :P.. இதே மாதிரி தரத்தில் அவர் படங்கள் கொடுக்கும் மட்டில் எங்கிருந்து வந்தாலும் நமக்கு கவலை இல்லை :)
இப்படியொரு படத்தையே இப்பதான் கேள்விப்படுறேன் நண்பா..உஙளோட பிரைமர் சீரிசை மறக்க முடியுமா என்ன..??
ReplyDeleteவிமர்சனம் எப்போதும் போல ரொம்பவும் நல்லா இருக்கு..
படம் பார்ப்பேனானு தெரில...எனக்கு நார்மலா சாதாரணமான படமே புரியாது..இதுல இந்த படம் ?? ஆனால் எதுக்கும் இப்பவே டவுன்லோடு போட டிரை பண்றேன்..
தொடர்ந்து எழுதுங்க நண்பா..வாழ்த்துக்கள்.