Saturday, August 27, 2011

Sweeney Todd (2007)


டிம் பர்ட்டன் - ஜானி டெப் கூட்டணியின் 6வது படம் தான் இந்த Sweeney Todd: Demon Barber of the Fleet Street. வித்தியாசமாவே படம் எடுக்கற ரெண்டு பேரோடயும் கூட்டணிப் படங்களிலேயே வித்தியாசமானது இந்தப்படம். காரணம் இது பக்கா Black-Horror Musical படம்!!

இந்தப் படத்தோட கதை முதன்முதலா 1973ல கிறிஸ்டோபர் பொன்ட் என்பவரால் நாடகமாக எழுதப்பட்டதாம். 1979ல ஸ்டீபன் சொன்டெயிம், ஹியூ வீலர் அப்படீங்கற ரெண்டு பேரும் இந்த நாடகம் மியூசிக்கலா இருந்தா ரொம்ப நல்லாயிருக்குமேன்னு எண்ணி ஸ்டீபன் பாட்டுக்களையும், ஹியூ வசனங்களையும் எழுதினராம்... சாதாரண நாடகத்தைவிட இந்த மியூசிக்கல் பிளே-க்கு பெருவாரியான வரவேற்பு கிடைச்சுதாம்..

Tuesday, August 23, 2011

Edward Scissorhands (1990)

 ஹாலிவுட்டில் fairytale டைப் கதைகளுக்கே பிரசித்தமானவரும், இந்த காலகட்டத்தின் சிறந்த இயக்குனர்களுல் ஒருவருமாக திகழ்பவர்தான் டிம் பர்ட்டன்.. இவரும், நடிகர் ஜானி டெப்பும் "கே.எஸ் ரவிக்குமார்-கமலஹாசன்" மாதிரி!! ரெண்டு பேரும் சேர்ந்து பண்ண 7 படங்களில் "Ed Wood"ஐ தவிர மத்த 6-ம் சுப்பர் ஹிட்! இவங்களோட லேட்டஸ்ட் கூட்டணி "அலிஸ் இன் வொண்டர்லேன்ட்" போன வருஷம் வெளிவந்து வசூலை வாரிக்குவித்தது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

Saturday, August 20, 2011

Adjustment Bureau (2011)

காலையில் எழுந்திருச்சி, அவசர அவசரமா ஓடி பஸ்ஸை புடிச்சு வேலைக்கு கிளம்பறது முதல், கம்ப்யூட்டரை ஆன் பண்ணி "என்னடா எழுதலாம்?"னு யோசிச்சு, கிறுக்கி, பதிவை பப்ளிஷ் பண்ணுற வரைக்கும் எல்லாமே நம்ம விருப்பம் படித்தான் நடக்குது.. நாமதான் முடிவை எடுக்கிறோம்... அல்லது நாம முடிவெடு்க்கறதா நினைச்சுகிட்டிருக்கோமா?

நிஜமாவே "விதி"ன்னு ஒண்ணு இருந்து, நம்மை வாழ்க்கையை யாரோ ஒருத்தர், ஏதோவொரு மூலையில் கூலா உட்கார்ந்துகிட்டு டிசைன் பண்ணிக்கொண்டிருந்தால்?? இந்த டவுட்டுக்கெல்லாம் ஒரு தியரியை உருவாக்கி, அதை காதல் கதையொன்றின் மூலம் வெளிப்படுத்தும் படம் தான் "அட்ஜஸ்ட்மென்ட் ப்யூரோ"!

Friday, August 19, 2011

Rango (2011)

 ஒரு செல்லப்பிராணி பச்சோந்தி தனது எஜமானருடன் காரில் சென்று கொண்டிருக்கிறது. எதேச்சையாக கரர் சற்று திரும்பும்போது ஏற்படும் அசைவால், பச்சோந்தி இருந்த கண்ணாடிப் பெட்டி தூக்கியெறியப்பட்டுபெயரே தெரியாத பாலைவனத்தில் தனியாளாக மாட்டிக் கொள்கிறது.. தாகம் உயிரை எடுக்கத் தொடங்குகிறது. சுற்று முற்றிலும் தண்ணியே காணோம்.. பருந்திடமும், எலிகளிடமும் தப்பித்து ஒரு நாள் இரவை தனிமையில் கழித்துக்கொள்கிறது..
Related Posts with Thumbnails