Friday, August 19, 2011

Rango (2011)

 ஒரு செல்லப்பிராணி பச்சோந்தி தனது எஜமானருடன் காரில் சென்று கொண்டிருக்கிறது. எதேச்சையாக கரர் சற்று திரும்பும்போது ஏற்படும் அசைவால், பச்சோந்தி இருந்த கண்ணாடிப் பெட்டி தூக்கியெறியப்பட்டுபெயரே தெரியாத பாலைவனத்தில் தனியாளாக மாட்டிக் கொள்கிறது.. தாகம் உயிரை எடுக்கத் தொடங்குகிறது. சுற்று முற்றிலும் தண்ணியே காணோம்.. பருந்திடமும், எலிகளிடமும் தப்பித்து ஒரு நாள் இரவை தனிமையில் கழித்துக்கொள்கிறது..

மறுநாள் எங்கிருந்தோ வந்த பீன்ஸ் எனும் பெண் ஓணானை சந்திக்கிறது. அதனுடன் பேச்சுக் கொடுத்துக்கொண்டே, பாலைவனத்தின் மத்தியிலுள்ள Dirt எனும் பாலைவன விலங்குகளுக்கான ஊரைச் சென்றடைகிறது..

"டர்ட்" கிராமவாசிகளும் தண்ணிப் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். அங்கங்கு கிடைக்கும் நீரைச் சேமித்து வங்கி போல் பாதுகாத்து வருகின்றனர். இந்த ஊருக்கு 2 பொதுவான வில்லன்கள்.. முதலாவது ஒரு பாம்பு, இரண்டாவது பருந்து! (எனினும் பருந்தின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், பாம்பு இங்கு இப்பொழுது வருவதில்லையாம்..)

ஊருக்குள் நுழைந்தவுடன், முதல்வேலையாக தண்ணி தேடி பாருக்குச் செல்கிறது. முதலில் தன்னைக் கேலியாக பார்த்த அங்குள்ள விலங்குகளிடம், "தனது பெயர் ரங்கோ எனவும், தான் பல வீரசாகசங்களை புரிந்ததாகவும்" பீலா விடுகிறது. அந்த மிருகங்களோ "இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்" படம் பார்த்த மாதிரியே ரங்கோவால் ஈர்க்கப்பட்டு நிற்கின்றனர்.


பின்னர் பருந்து பறந்து வருவதைக்கண்டு எல்லா விலங்குகளும் தத்தம் வீடுகளில் ஓடி ஒளிந்து கொள்கின்றன. ரங்கோ மட்டும் முட்டாள் தனமாக ரோட்டில் வந்து நிற்கவே, பருந்தின் கண்ணில் அகப்படுகிறது. நீண்ட துரத்தல்களுக்குப்பின், எதேச்சையாக விழும் பழைய தண்ணீர்த்தொட்டியின் அடியில் மாட்டி பருந்து உயிரை விடுகிறது. இதற்கும் ரங்கோதான் காரணமெனஎண்ணும் மக்கள் அவனை புகழ்ந்து தள்ளுகின்றனர். அவ்வூர் மேயரால் "ஷெரீப்" பதவி ரங்கோவுக்கு அளிக்கப்படுகிறது. ஊரின் நீர்ப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டிய பொறுப்பும் ரங்கோவின் கைகளில் வந்து சேர்கிறது!!!
மீதிக்கதை தான் படம்.. படத்தின் வில்லன் யாரென்பதில் சின்னதா ஒரு ட்விஸ்ட்.

படம் முழுக்க பாலைவனத்தை காட்டுவதும், வறண்டு போன சருமத்தோடு விலங்குகளை உருவாக்குவதும் பெரிய சவால். ஆனாலும் Nickelodeon ஊதித் தள்ளியிருக்கிறார்கள். தாகத்தின் கொடுமையைக் காட்டும் காட்சிகளை ரொம்பவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள. அதிலும் ரங்கோ ஊர்மக்கள் முன்னிலையில் 'நீரைப் பாதுகாக்க வேண்டியதன் தேவை' பற்றி வீரஉரை பேசிவிட்டு, மடமடவென தண்ணீரை அள்ளிக் குடிக்கும் காட்சி ரசனையின் உச்சம்!! படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை, கதையைச் சொல்லுவதற்காக அடிக்கடி வந்து போகும் 3 பருந்துகள் கிளாசிக் கெளபாய் கதைகளை நினைவூட்டுகின்றன...

தன் தகுதிக்கும் மீறிப் பெருமை பேசி, அலட்சியமாக நடிக்கும் "ரங்கோ" பாத்திரத்துக்கு குரல்கொடுக்க ஜானி டெப்பை தேர்வு செய்தது செம பொருத்தம்!! மக்களால் துரத்தப்பட்டு சோர்ந்து போயிருக்கும் ரங்கோ ஆவியொன்றை சந்திக்கும் காட்சியும், பின்னால் ஒலிக்கும் பாடலும் படத்தின் ஹைலைட்.. வழமையாக பார்த்து வரும் பி்க்சார், ட்ரீம் வொர்க்ஸ் படங்கள் போலில்லாமல், மெதுவாக நகரும் காட்சிகளும், close-to-feel அனிமேஷனும் படத்தை தனியொரு லெவலுக்கே எடுத்துச் செல்கின்றன..

ரேட்டிங்ஸ்,
பாத்திரங்கள்- 16
அனிமேஷன்-16
பின்னணித் தரவுகள்- 17
கதை+திரைக்கதை- 16
இயக்கம்-14

மொத்தம்- 79% மிக நன்று!

Rango (2011) on IMDb

8 comments:

 1. நண்பா...இந்த படத்த போன மாசம் முக்கி முக்கி rapidshareல download செஞ்சேன்..சனியன்...பாஸ்வேர்ட் கேட்டு ஓபன் ஆக மாட்டேன்ன்னு அடம் புடிச்சுது..ரிகவரி sw போட்டும் பாஸ்வேர்ட் தெரியல..

  சரின்னு மெட்ராஸ்ல வாங்கி பாத்தேன்(பாதி வரை தான் )..ஆரம்பத்துல ரொம்ப புடிச்சது..அப்பறம் draggingஆ தெரிஞ்சது.......

  டெனிம் மோகன்....இதுல வர அனிமேசன் குறித்து சிலாகிச்சு சொல்லியிருந்தார்....

  ReplyDelete
 2. // கதையைச் சொல்லுவதற்காக அடிக்கடி வந்து போகும் 3 பருந்துகள் //

  அது ரொம்ப புடிச்சது..அடிக்கடி வந்து எதுனா பிட்டு போட்டுகிட்டே இருக்குங்க

  ReplyDelete
 3. நண்பா! ஒபனிங் சீனே அற்ப்புதமாக இருந்தது.சமீபத்தில் நான் சிபாரிசு செய்யும் படங்களில் இதுவும் ஒன்று.

  ReplyDelete
 4. @யோஹான் - வருகைக்கு நன்றி!!

  @கொழந்த - படம் நடுவுக்குள்ள அப்படித்தான்.. ஜவ்வு மாதிரி இழுக்கும். பிறகு எல்லாம் சரியாயிடும்.

  @உலக சினிமா ரசிகன் - கரெக்டு!

  ReplyDelete
 5. எனக்கு இந்தப் படம் பிடிக்கவே இல்ல பாஸ்.. க்ராபிக்ஸ் கேவலமா இருந்தது.. ஒரு வேலை நான் டவுன்லோட் பண்ணிய காபி சரியில்லையோ தெரிய்ல

  ReplyDelete
 6. நீங்க அந்த village-ஐ சொல்றீங்களான்னு தெரியலை.. ஆனால் கதைப்படி அது அழுக்கு ஊறிய மாதிரித்தான் காட்சியளிக்க வேண்டும்!
  வருகைக்கு நன்றி Faaique!

  ReplyDelete

Related Posts with Thumbnails