Saturday, November 3, 2012

Sweet Land (2006)

நெட்டுல "நீங்கள் பார்த்திராத/ கேள்விப்பட்டிருக்க முடியாத நல்ல படங்கள்"னு பல லிஸ்டுகள் பரவிக் கிடக்கின்றன.. இதை எழுதுறவனுங்க 'இந்தப் படத்தை எவனுமே பார்த்திருக்க மாட்டாங்க' அப்படீங்கற தைரியத்தில் மொக்கைப்படங்களுக்கு முலாம் பூசி ரெக்கமன்ட் பண்ணுவாங்க.. சேற்றிலே முளைச்ச செந்தாமரை போல ஒரு (நெஜமாவே) நல்ல படமும் அங்கு சேர்ந்திருக்கும்.. அப்படி எனக்கு கிடைச்ச செந்தாமரை தான் இது!
அதிகம் யூகிக்க வைக்காத, தாக்கம் எதுவும் பெருசாக ஏற்படுத்தாத சிம்பிளா, ஸ்வீட்டா ஒரு ஃபீல்-குட் ரொமான்டிக் படம் பார்க்கனும் என்பவர்கள் தாராளமாக தொடர்ந்து வாசிக்கலாம்..

நிகழ்காலத்தில் ஒரு இளைஞனின் குடும்பம் காட்டப்படுகிறது.. அவனது தாத்தா இறந்து விட்ட நிலையில் 'அவர் வாழ்ந்த, தற்போது பயனில்லாமல் இருக்கும் விவசாய நிலத்தை விற்றுவிடலாமா? வேண்டாமா?' என்னும் சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறான்.. இது பற்றி தனது பாட்டியிடம் ஆலோசிக்க செல்கிறான்.. அப்போது அந்தப் பாட்டி தான் இந்த ஊருக்கு வந்ததையும், தாத்தாவை சந்தித்த கதையையும் அவனுக்கு கூறத்தொடங்குகிறார்!
.....பிளாஷ்பேக்....

அமெரிக்காவில் வாழும் விவசாயி இளைஞனான ஓலாப்-இற்கு நோர்வேயில் வாழும் அவனது பெற்றோர்களால் திருமணத்துக்கு பெண் பார்க்கப்பட்டு, பெண் அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்படுகிறாள்.. வந்து சேரும் இன்கே எனும் அந்தப்பெண்ணுக்கு(மேலே பார்த்த பாட்டி) சுத்தமாக ஆங்கிலமே தெரியாது.. அவள் ஜெர்மானிய பூர்வீகத்தை கொண்டவள்.. முதலாவது உலகப் போரின் பின்னதான காலகட்டம் அப்போது என்பதால், இன்கேயின் ஜெர்மனிய பின்னணியையும், அவளிடம் உத்தியோகபூர்வ குடிபெயர்வு பத்திரங்கள் இல்லாததையும் காரணம்காட்டி, அவ் ஊர் தேவாலயத்தினால் இவர்களது திருமணத்துக்கு மறுப்புத் தெரிவிக்கப் படுகின்றது.. ஊர்மக்களும் இவர்கள்பால் அதிருப்தியடைகின்றனர்.. ஆகவே, ஆங்கிலத்தை நன்கு கற்றுக்கொள்வதோடு, பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளும் வரை அவ்வூரிலேயே இன்கே வாழும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறாள்..
இவர்களது திருமணம் நிறைவேறியதா? இவர்களால் ஊர்மக்களின் அபிமானத்தை வெல்ல முடிந்ததா? என்பதே மீதிக்கதை..

இந்தப் படத்தோட சினிமேட்டோகிராஃபி one of the best! டைட்டில்ல இருக்க sweetnessஐ படத்துல கொண்டுவர்றதே இதுதான்.. பத்தாதுன்னு அருமையான லொக்கேஷன்.. ஓலாப்போட வீட்டை மட்டுமே லாங்-ஷாட்டில் எக்கச்சக்கமான ஆங்கிள்களில் எடுத்துக் காட்டுவார்கள்.. ஒவ்வொன்றும் வால்பேப்பராக போட்டுக் கொள்ளும் அளவு அழகு!!
ஸ்வீட்டை ஓவராக sugary ஆக்காமல் பார்த்துக் கொண்டதில் புதுமுக இயக்குனர் அலி செலிம்முக்கு முக்கிய பங்குண்டு.. இன்கே ஓலாப்பின் நண்பனது வீட்டில் தங்கும் போது, அவள் அந்த புதிய சமூகத்துடன் adapt பண்ண எத்தனிக்கும் காட்சிகளை மிக அருமையாக காட்டிருப்பார்.. படத்தின் இசை கொஞ்சம் மைனஸ்.. 1920களின் கிராமமப்புறங்களை காட்டுவதற்காகவே இசையமைத்திருப்பார்கள் போல.. ஒன்றி அனுபவிக்கும் அளவு இல்லையென்றாலும், இனி எப்போ கேட்டாலும் இந்தப் படம் இலகுவில் ஞாபகம் வரும் அளவுக்கு வித்தியாசமாக பொருந்துகிறது!

Ingeவாக எலிஸபெத் றீசர்.. ட்வைலைட்டில் Esme ஆக நடித்தவங்களேதான்.. அதில் அதிகம் கவனிக்கப்படாத பாத்திரம். ஆனால் இதில் அவங்கதான் படத்துக்கு உயிர்நாடியே! எல்லாராலும் ஈஸியா செய்து விடக்கூடிய பாத்திரமில்லை.. தெரிஞ்ச ஆங்கிலத்தை தட்டுத்தடுமாறியும், தெரியாத ஜெர்மனை தாய்மொழி மாதிரியும் பேசணும்! முதல்லை ஸ்கிரிப்டைப் பார்த்து பயந்து விலகப் போன இவங்க கடைசி நிமிஷத்தில் மனம் மாறி ஒத்துக்கிட்டிருக்காங்க. மத்த எல்லாரும் நம்மளை எதிரியாவே பார்க்குறாங்கன்னு புரிஞ்சுகிட்டும் அப்பாவித்தனமா முழிப்பாங்களே.. சான்சே இல்லை. படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் இவரது ஆக்டிங் கண்டிப்பாக கவரும்.. ஏனையவர்களும் தங்கள் பாத்திரத்துக்கு நிறைவாகவே நடித்திருக்கிறார்கள்!

படத்துல ரொமான்ஸ் காட்டப்படும் விதமும் வித்தியாசம்.. ஹாலிவுட் படங்களுக்குரித்தான ரொமான்ஸ் எதுவும் இதில் கிடையாது.. ஏன் 'ஐ லவ் யூ'ங்கற வார்த்தையே வரலை! உலகசினிமா சாயல் படத்தில் சில இடங்களில் படுறா மாதிரி வேற இருக்கு.. கொஞ்சம் மரியாதை, கொஞ்சம் பரிதாபம், கொஞ்சம் எதிர்பார்ப்பு எல்லாத்தையும் கலந்து வித்தியாசமான காதலைக் காட்டியிருக்கிறார்கள்!

வெறும் ஒரு மில்லியன் செலவில் உருவான இப்படம், அமெரிக்காவில் பெருசாக ரிலீஸ் செய்யப்படவில்லை.. எல்லாம் இன்டீஸ்தான். ஆனா தயாரிப்பாளரின் கையையும் சுடாமல் போட்ட வசூலைத் திரும்பி எடுத்துக் கொண்டது. ஏதோ ஒரு பிராந்திய தியேட்டரில் மட்டும் 37 வாரங்கள் விஷேட காட்சிகளாக ஓடியிருக்கிறதாம். அவ்வளவுக்கும் பார்வையாளர்களிடமிருந்து நல்ல ரெஸ்பான்ஸ்!
படத்துல நிறைய ஜெர்மன் வசனங்கள் உண்டு.. அதுக்கு சப்டைட்டிலும் தரல.. நானும் தேடிப் பார்க்கலை.. படத்தோட ஈர்ப்பு அப்படி! சாரல் மழைக்கு ஜன்னலோரமாய், காஃபியுடன் பார்க்க ஏத்த படம்..

அட.. அடுத்தே இந்தப் படத்தை பார்த்துருவோம்னுல்லாம் பார்க்காதீங்க! 'பார்த்தே ஆகனும்'ங்கற படமும் இல்லை.. எப்பவாவது ஆறுதலுக்கு ஒரு படம் தேவைப் பட்டிச்சுன்னா இந்தப் படத்தை பார்க்கலாம்னு நினைவில் வைச்சுக்குங்க! இதே டைப் படங்கள் ஏதாவது ஞாபகம் வந்திச்சுன்னா கீழே சொல்லிட்டு போங்க!

ரேட்டிங்ஸ்,
நடிப்பு = 17
இசை = 12
கதை+திரைக்கதை = 14
கலை+ஒளிப்பதிவு =19
இயக்கம் = 16

மொத்தம் = 78% மிக நன்று!

Sweet Land (2005) on IMDb

19 comments:

 1. வாங்க தல....செமையான உலக சினிமா மாதிரி தெரியுது..ஜெர்மன வசனங்களுக்கு கூட சப் டைட்டில் இல்லைங்கறது ஒரு மாதிரியா இருக்கு.. :):):)
  நீங்க செமையா எழுதி இருக்கீங்க...இந்த படத்தையும் பார்க்கிறேன் தல..
  அப்புறம் தல நீங்க பார்த்து இருப்பீங்கன்னு "The Reader" படம் கூட இதே மாதிரி தான் WW background
  ல நடக்குற அருமையான காதல் கதை..ஆனா கொஞ்சம் வித்தியாசமான காதல் கதை...பார்க்காடி பாருங்க...
  டெம்ப்ளேட் நல்லா இருக்கு தல... :):):)

  ReplyDelete
  Replies
  1. சப்-டைட்டில் இல்லாதது பெரிய இடைஞ்சலா ஒண்ணும் இருக்கல தல.. பல இடங்களில் அவங்க என்ன சொல்றாங்கன்னு நம்மளாலேயே யூகிக்க முடியும்.
   The Reader பத்தி தெரியாது நண்பா.. பார்த்துடுவோம்!

   Delete
 2. 78% நன்று என்றால் பார்த்துட வேண்டியது தான்...

  நன்றி...
  tm1

  ReplyDelete
 3. நண்பரே,

  தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
  http://www.tamilkalanchiyam.com

  - தமிழ் களஞ்சியம்

  ReplyDelete
 4. ஹி ஹி ... இப்பத் தான் டெம்ப்ளேட் அப்டேட் பண்ணிட்டிருக்கீங்க போலயிருக்கு? ரொம்ப சிம்பிளா இருந்திச்சு.. இப்ப ஃபான்ட் எல்லாம் மாற்றி மெருகேற்றிட்டு இருக்கிங்க.. நல்லாயிருக்கு. ஏதாச்சு 3ட் பார்ட்டி டெம்ப்ளேட் ட்ரை பண்ணலாமே?

  இப்ப மூணு நாளைக்கு முன் தான் Flipped, Damsels in Distress டவுன்லோட் பண்ணி வச்சேன். அதையே இன்னும் பார்க்கலை.. இது எப்பவோ? ராஜ் சொன்ன The Readerம் (தனியா பெட்டர்) பார்த்துருங்க. வித்தியாசமான நல்ல படம்!

  ReplyDelete
  Replies
  1. இத எடுத்ததே போன டெம்ப்ளேட் லோட் ஆவ லேட்டாவுதுன்னுதான்.. 3ட் பார்ட்டி எதுவும் ட்ரை பண்ணதேயில்லை.. லோடாக லேட்டாகுமோன்னு சின்ன கவலை!

   Delete
  2. நம்ம சைட் உங்களுக்கு எப்படி லோட் ஆகுது பாஸ்? லோட் ஆகுறது கொஞ்சம் ஸ்லோ மாதிரி ஃபீல் ஆகுதா?

   Delete
  3. கன்ட்டென்ட் நார்மலா வந்துரும்.. கமென்ட் செக்ஷன், பாலோவர்ஸ்லாம் வர லேட் ஆகும்.. :)
   உங்க பேஜ் லோடிங் டைமை இங்க போய் செக் பண்ணிக்குங்க.. அதுல கம்ப்பேரிசனா உங்களோடது ஃபாஸ்டா, ஸ்லோவான்னு சொல்லுவாங்க
   http://tools.pingdom.com/fpt/

   Delete
 5. //ஆகவே, ஆங்கிலத்தை நன்கு கற்றுக்கொள்வதோடு, பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளும் வரை அவ்வூரிலேயே இன்கே வாழும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறாள்..//

  இதை ஊதா கலரில் ஹைலைட் பண்ணிக் காட்டிய காரணம்??? எனக்கு ஏனோ English Vinglish ஞாபகம் வந்துச் தொலைச்சுது.

  ReplyDelete
  Replies
  1. இதை வச்சுத்தான் மீதிக்கதை தொடருதுன்னு காட்டத்தான்.. ஆனா English Vinglish மாதிரி இங்கிலிஷ் கத்துக்கறது இதுல பிரதான பங்கு வகிக்கலை.. மேக்சிமமே ஒரு 5,6 சீன்தான்!

   Delete
 6. ஹ்ம்ம்ம்ம்.. கண்டிப்பா பார்க்கலாம்..அதுவும் இப்போ இங்கே இருக்குற சீசனுக்கு இந்த மாதிரி ஒரு படம் ரொம்பவே இதமா இருக்கும்னு நெனக்குறேன், அப்புறம் நீங்க கேட்ட இதே டைப் படங்கள் நிறைய இருக்கு... ஆனா ரொமாண்டிக்கா இல்லாம ஜாலியா போகும் Just My Luck, Its a Boy Girl Thing, She's out of my league...!! இதெல்லாம் முடிஞ்சா பாருங்க... கண்டிப்பா நல்லா இருக்கும்.. :) :) :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பா.. நீங்க சொன்ன படங்கள் modern-day romantic comedy படங்கள்.. நான் எதிர்பார்ப்பது கொஞ்சம் rural, feel-good romance படங்கள்.. எனிவே இவற்றையும் நோட் பண்ணிக்கிறேன்.. நன்றி!! :-)

   Delete
 7. நல்ல படமாதிரிதான் தெரிது நண்பா..லேட்டா கமெண்டு அளிப்பதற்கு மன்னிக்கவும்..ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க..இப்பதான் படத்தையே கேள்விப்படுறேன்.வித்தியாசமான காதல் படங்கள் என்றால் எனக்கு பிரியம் ஜாஸ்தி..நீங்க ரெக்கமண்ட் பண்ற படமிது.கண்டிப்பா பார்க்குறேன்.
  மிக்க நன்றி..இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா..

  ReplyDelete
  Replies
  1. ஆனா கமெண்டை பார்த்து திருப்பி வாழ்த்துக்கள் சொல்ல லேட் ஆயிருச்சே.. வெரி சாரி!
   திருப்பி பதிவு எழுத வந்தமைக்கு நன்றி + வாழ்த்துக்கள்!!

   Delete
 8. தல சௌக்கியமா? நான் தான் ஒபாமா வந்திருக்கேன்......

  ReplyDelete
  Replies
  1. ஒபாமா.. கமெண்டுக்கு வந்தா மட்டும் போதாது. பதிவும் போடனும்!
   -விசுவாசத்துடன், ரொம்னி

   Delete
 9. நல்ல பீல் குட் மூவி-னு சொல்லி இருக்கீங்க. கண்டிப்பா பார்க்க தூண்டுது விமர்சனம்.. விமர்சனமும் படத்தின் டைட்டில் போல ஸ்வீட்- ஆ இருக்கு நண்பா. Vicky, christina, Barcelona படம் பாருங்க. ரொம்ப வித்தியாசமான படம்

  ReplyDelete

Related Posts with Thumbnails