Friday, June 1, 2012

The Darjeeling Limited (2007)

 தந்தை இறந்து ஒரு வருடமாகும் நிலையில், இந்தியாவில் புகையிரதமொன்றில் பயணித்துக் கொண்டிருக்கும் மூன்று வெள்ளைக்கார சகோதரர்கள்...
ஆனால் நீங்கள் நினைப்பது போல இவர்கள் டெல்லிக்கு பாம் வைக்க வந்த தீவிரவாதிகளோ, ரெண்டு நாளில் ஏவப்பட இருக்கும் ராக்கெட்டை அழிக்கவந்த கூலிப்படையோ, அல்லது பல்கலைக்கழகத்தில் படிக்க வந்த வெளிநாட்டு யூத்துகளோ இல்லை... மூன்றுமே அட்டர் காமெடிப்பீஸுகள்!!

மூத்தவன் பிரான்சிஸ்... முகம் முழுக்க bandage உடன் வரும் இவன் தான் இந்தப் பயணத்தையே ஏற்பாடு செய்தது.. சகோதரர்களாக இருந்தும் ஒருவருடன் ஒருவர் அதிகம் பேசிக்கொள்ளாத, பாசம் காட்டாத இவர்கள் இந்தப் பயணத்தின் மூலம் தங்களுக்குள் புரிந்துணர்வொன்றைக் கொண்டு வர முடியுமென பிரான்சிஸ் தனது சகோதரர்களுக்கு எடுத்துச் சொல்கிறான்..
ஆனால் இவனது உண்மையான திட்டம் இந்தப் பயணத்தை முடிந்தளவு ஆன்மீக ரீதியானதாக பயன்படுத்தி, இறுதியில் இந்தியாவில் அனாதைக் குழந்தைகளுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் அவர்களது தாயை சந்திப்பதுதான்..

இரண்டாமவன் பீட்டரோ கர்ப்பிணியாக இருக்கும் தனது மனைவியை விட்டுவிட்டு வந்து அடிக்கடி ரிசல்டு என்னாச்சுன்னு தேடிக்கிட்டிருக்கான்.. இறந்த தன் தந்தையின் ஞாபகார்த்தமாக முடிந்தளவு அவர் உபயோகப்படுத்திய பொருட்களை சேகரித்து வைக்கிறான்..
மூன்றாமவன் ஜாக்.. தனது கேர்ள்ஃபிரண்டினுடனான பிரிவினால் வாடியிருக்கும் இவனுக்கு "லைம் ஜுஸாக" வந்து சேர்கிறாள் புகையிரதத்தில் பணிபுரியும் ஒரு இந்தியப் பெண்..

ஆனால் நினைத்தது போல் பிரான்சிஸின் "சகோதரத்துவ" ஐடியாவுக்கு சுத்தமாகவே வரவேற்பில்லை.. யாராவது ஒருத்தன் உரையாடத் தொடங்கினால், எதிரே இருப்பவன் " நான் ஏன்டா உன்கூட பேசனும்?" ரேஞ்சில் முகத்தை 'உம்'மென்று வைத்துக் கொள்கிறார்கள்... ஒருத்தர் மீது ஒருத்தர் நம்பிக்கையில்லாத நிலையிலேயே பயணம் தொடங்குகிறது.. வழியில் அவர்கள் சந்திக்க நேரிடும் சுவாரஸ்யமான கலாட்டாக்களே படத்தின் மீதிக்கதை!

படத்தின் பலமே அந்த மூன்று சகோதரர்கள்தான்.. யாரு ரொம்பக் காமெடியா இருக்கான்னு சொல்லவே முடியாது.. ஒருத்தரையொருத்தர் மிஞ்சி நடிக்கிறார்கள்.. டி.வி காமெடி சீரியல்களில் வரும் கதாப்பாத்திரங்கள் போல அப்பாவித்தனமும், மேதாவித்தனமும் காட்டி கலந்து கட்டுகிறார்கள்..
படம் முழுக்க காமெடி காட்சிகளால் நிரம்பி வழிகிறது... முற்பாதி முழுவதும் புகையிரதத்துக்குள்ளேயே நடப்பதால் ஆக்ஷன்களுடன் இல்லா விட்டாலும், பேச்சலேயே சிரிப்பைக் கொண்டு வருகிறார்கள்.. பிற்பாதியில் வெளியே வந்தவுடனே படமும், காமெடியும் டாப் கியரில் பறக்கிறது.. முன்பின் தெரியாத இடங்களில் மாட்டி இவர்கள் படும் பாடுகளும், சீக்கியரான புகையிரத நடத்துனருடன் வாக்குவாதப் பட்டுக்கொள்ளும் காட்சிகளும் உங்களை நிச்சயம் சிரிக்க வைக்கும்! அதுவும் சிட்டுக்குருவி லேகியம் விற்பவர்களை 'power doctor'னு தேடி அலையும் காட்சி நான் ரொம்பவே ரசித்தது!

படத்தில் அவதானிக்கக்கூடிய முக்கியமான விஷயம் "கலர்ஃபுல்" காட்சிகள்தான்... ஒவ்வொரு காட்சியும் குறைந்தது நான்கு கலர்களுக்கு மேலாகவாவது இருக்கும்.. ஆனால் எதுவுமே கண்ணை உறுத்தாமல்படத்தின் தீமோடு பொருந்திப் போகிறது.. படத்தின் பிற்பாதியில் இவர்கள் இதுவரை சந்தித்த மனிதர்களெல்லாரும் ஒரே ட்ரெயினில் வருவது போன்ற காட்சி போதும், படத்தோட விஷுவல் குவாலிட்டியை எடுத்துச் சொல்ல..
படத்தின் இசை இன்னொரு முக்கியமான விஷயம்.. ஆரம்பக் காட்சியிலிருந்து கிளைமேக்ஸ் வரைக்கும் இந்தியக் கலாச்சாரத்தோடு பொருந்திய பிண்ணனி இசை.. வேகமான, சீரியசான காட்சிகளின் போது பழைய தமிழ்ப்படங்களின் இசை மெட்டுக்களும் ஒலிப்பதைப் போல உணர முடிகிறது..

படத்தோட இயக்குனர் Fantastic Mr.Fox படத்தை இயக்கிய வெஸ் ஆண்டர்சன்.. இவரோட படங்கள் எல்லாமே விமர்சன ரீதியில் பெரு வரவேற்புக்குள்ளானவை.. எந்தவெரு படமும் இவரோட ரசிகர்களை ஏமாற்றியதேயில்லை.. இந்த வருஷம் கூட இவரோட Moonrise Kingdom படம் ரிலீசாயிருக்கு.. இவரோட படங்கள்லேயே இதுதான் பெஸ்டுன்னு இணையத்தில் பேச்சு நடந்துக்கிட்டிருக்கு.. போதாக்குறைக்கு IMDB, rotten tomatoes ரேட்டிங் எல்லாம் வழமையை விட தூக்கலாவே இருக்கு.. கண்டிப்பா பார்த்தே ஆகனுங்கற வெறியில தேடிக்கிட்டிருக்கேன்.. கிடைக்க மாட்டேங்குது.. முடிஞ்சா இந்தப் படத்தையும் பார்த்துருங்க! உங்களை ஏமாத்தாதுங்கறதுக்கு நான் கேரண்டி!!

படம் இந்தியக் கலாச்சாரங்களை நக்கலடிப்பதாக எடுக்காமல், "இந்தக் காட்சிக்கு இப்படியொரு உள்ளர்த்தம் இருக்குமோ?' என்றெல்லாம் யோசிக்காமல் பார்த்தால், ஒன்றரை மணித்தியாலம் நிம்மதியான ஒரு காமெடி எண்டர்டெயினர் - டார்ஜீலிங் லிமிட்டட்... ஒரு தடவையென்ன.. நாலு வாட்டி பார்க்கலாம்!

ரேட்டிங்ஸ்,
நடிப்பு = 17
இசை = 12
கதை+திரைக்கதை = 15
கலை+ஒளிப்பதிவு =15
இயக்கம் = 18

மொத்தம் = 77% மிக நன்று!

The Darjeeling Limited (2007) on IMDb

19 comments:

 1. பாஸ்,
  ரொம்ப நல்ல விமர்சனம்...
  படத்தை பத்தி நான் கேள்விப்பட்டு இருக்கேன்.. போஸ்டர் பார்த்து மொக்கை படம்ன்னு நினைச்சுட்டேன். B rate காமெடின்னு தப்பா நினைச்சுட்டேன்.. உங்க விமர்சனம் என்னோட என்னத்தை மாத்திவிட்டது. Fantastic Mr.Fox பார்த்து உள்ளேன். படம் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்து...
  அப்புறம் பாஸ் "புகையிரதத்தில்" அப்படினா ட்ரெயின் தானே..??? # டவுட். :)

  ReplyDelete
 2. @ ராஜ் - நன்றி பாஸ்.. வெஸ் ஆன்டர்சன் படங்கள் பிரபலமாவது குறைவு.. ஆனால் பார்ப்பவர்களை நிச்சயம் கவரும்!!

  * ட்ரெயின்னே எழுதியிருப்பேன்.. ஆனா நிறைய ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழில் எழுதுவதை குறைக்கறதுக்காகத்தான் இப்படிப்பட்ட முயற்சிகள்! :)

  ReplyDelete
 3. கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன் டவுன்லோட் பண்ணி வச்சிருந்தேன். இந்த மாசம் பார்த்துட்டு விமர்சனம் பண்ணணும்னு யோசிச்சு வச்சிருந்தேன். அதுக்குள்ள நீங்க போட்டுட்டீங்க. நல்லாயிருக்கு விமர்சனம். ரேடிங்கும் தூக்கலா இருக்கு. கட்டாயம் பார்த்துடறேன்.

  Coriolanus படம் நேத்து தான் டவுன்லோட் பண்ணினேன். இரண்டையும் அடுத்த வாரம் பார்த்துவிடுகிறேன்.

  ReplyDelete
 4. @ ஹாலிவுட்ரசிகன் - ஆஹா முந்திக்கிட்டேனா? கண்டிப்பாக ரெண்டையும் பார்த்துருங்க நண்பா! நன்றி.

  ReplyDelete
 5. சூப்பர் விமர்சனம் நண்பா..ரொம்ப நல்லாருக்கு..இந்த படத்தை சில நாட்களுக்கு முன்பு ஐஎம்டிபியில் பார்த்தேன்..இந்தியா சம்பந்தப்பட்ட கதை என்று தெரிந்ததும் அப்பவே பார்க்க வேண்டுமென ஆவல் கிளம்பியது..இப்போது உங்க விமர்சனம்..பிரமாதமா இருக்கு..உங்க ரேட்டிங் கூட அதிகமா இருக்கு.படம் பார்க்க டிரை பண்றேன்..தொடருங்கள்..வாழ்த்துக்களோடு என் நன்றி.

  ReplyDelete
 6. @ குமரன் - நன்றி நண்பா! படம் உங்களுக்கும் பிடித்திருக்க வேண்டுகிறேன்..

  ReplyDelete
 7. ஏது சிட்டுக்குருவி லேகியமா? இங்க விக்கமாட்டாங்களா ?

  படத்தை பாத்துட வேண்டியது தான்.

  ReplyDelete
 8. @ கிஷோகர் - தம்பி, உங்களுக்கு என்னத்துக்கு லேகியமெல்லாம்?? போயி மந்திரிச்சு கயிறு கட்டுங்கோ.. அப்படியே படத்தையும் பார்த்துருங்கோ..

  ReplyDelete
 9. ராஜ் சொன்ன மாதிரி நானும் இத மொக்க படம்னு நெனச்சேன்.. நல்லவேள சொன்னிங்க.. மைன்ட்ல வெச்சிகறேன்..

  ReplyDelete
 10. படம் இப்பத் தான் பார்த்து முடிச்சேன். நல்லாயிருக்கு. ஆங்காங்கே நல்ல தருணங்கள் இருக்கு. ஒரு 70மார்க் கொடுக்கலாம். படத்தின் அந்த இந்தியன் தீம் பின்னணி இசை நல்லாயிருந்தது. ரொம்ப நாளா தமிழ்ப்படம் பார்க்காத ஃபீலிங்கை இது நிரப்பிடுச்சு. Thanks for the recommendation. :)

  ReplyDelete
  Replies
  1. சாரி பாஸ், நானே இப்பெல்லாம் என் ப்ளாகுக்கு வர்றதில்லை.. அதுனால உங்க கமென்டை பார்க்க முடியலை!
   அப்புறம், என் விமர்சனத்தையும் கன்ஸிடர் பண்ணி படத்தை பார்த்ததுக்கு ரொம்ப நன்றி!

   * ரெண்டு வீக்கா விமர்சனம் எதுவும் காணோம்!!
   (ஓ.. இதை நான் கேக்க கூடாதில்லை..)

   Delete
  2. ஏன் வேலைல பிஸியாகிட்டீங்களா? இல்ல எக்ஸாம் ஏதாச்சு?

   Delete
  3. பில்லா 2 படத்தை மொத நநாளு பார்க்குற வரைக்கும், கிக்கை ஏத்தி வைச்சிருக்கறதுக்காக படம் ஏதும் பார்க்க வேணாமேன்னு முடிவு பண்ணி.. அந்த படம் ரிலீசோ 1,15,21, இப்ப 29-ன்னு தள்ளிக்கிட்டே போனதால படம் பார்க்கலை.. பதிவெழுதலை.
   இடையிலல இந்த யுரோ 2012ல ஆர்வம் வேற எகிறிருச்சு... ஜுலை சாவகாசமா வர்றேன்..

   *நீங்களும், குமரனும் கூட வேலைகள்ல பிஸியாகிட்டீங்க போல!

   Delete
 11. நல்ல விமர்சனம்....நல்ல படம்!!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா!

   Delete
 12. என்னிடம் இந்த படம் இருந்தும், ரொம்ப நாளா இந்த படத்த பார்க்கவில்லை..... ராஜ் நினைச்ச மாதிரி தான் நானும் நினைத்தேன்....இப்போ தான் தெரிகிறது இது நல்ல படம் என்று.
  கண்டிப்பாக பார்கிறேன். விமர்சனம் எப்போதும் போல் அருமை

  ReplyDelete
 13. Romba nall movie..
  i hv seen it.
  Nice Post
  கட்டாயம் பாருங்கள் இந்த Movie. மிகவும் அழகான படம்!.
  உங்கள் ப்ளாக் மிகவும் அருமை.
  http://dohatalkies.blogspot.com/2012/07/hachi-dogs-story-tale-movie-review.html

  ReplyDelete

Related Posts with Thumbnails