Saturday, July 30, 2011

Source Code (2011)- 1

 தூங்கிக்கிட்டிருக்கீங்க.. திடீர்னு முழிச்சுப் பார்த்தா "எப்படி வந்தோம்"னே தெரியாம ஒரு இடத்துல இருக்கீங்க! கண்ணாடில போய் பார்த்தா அது நீங்களே இல்லை!!...
இப்படி ஒரு அனுபவம் உங்களுக்கு கிடைத்திருக்காவிட்டால், "அப்பாடா.. உங்களை யாரும் சோர்ஸ் கோடுக்குள்ள அனுப்பல!!"

சோர்ஸ் கோட் அப்படிங்கறது சமாந்தர மெய்நிகர் (parallel reality) உலகம்.. அதாவது உங்கள் உயிரை இறந்த ஒருவரின் உடலுக்குள் அனுப்பி அவராக வாழ வைப்பது.. அதுக்கு ரெண்டு நிபந்தனைகள்-
1. உங்களால் இறந்தவரின் கடைசி எட்டு நிமிடங்களை மட்டுமே அனுபவிக்க முடியும். (அதுக்காக டி.வி பார்க்குற மாதிரியெல்லாம் இருக்காது. நீங்கள் அந்த நிமிடங்களை வாழ வேண்டும், நீங்கள் சுயமாக முடிவுகளையும் எடுக்கலாம்!)
2. சோர்ஸ் கோடிற்குள் அனுப்பப் படுவதற்கு நீங்களும் இறந்திருக்க வேண்டும் !!!

இங்க தான் கன்பியூஷன் தொடங்குகிறது. இறந்த ஒருவரின் (a) உடலை வைத்து, அவரது நினைவுகள், உணர்வுகள் என்பவற்றை சேமித்து அவரைப் போன்ற ஒரு மெய்நிகர் விம்பத்தை தோற்றுவிக்கிறார்கள். பின்னர் அந்த மெய் நிகர் விம்பத்தை சோர்ஸ் கோட் செயன்முறையூடாக இன்னொரு இறந்தவரின் (b) உடலுக்குள் புகுத்தி அவரது இறுதிக்கட்ட நினைவுகளில் வாழச் செய்கிறார்கள்..

சரி வெறுமனே 8 நிமிடங்கள் இன்னொருவராக வாழ்ந்துவிட்டுப் போவதால் என்ன பயன் இருக்கிறது??.. அதற்காகத்தானே படத்தோட கதை இருக்கிறது!!

சிக்காகோ நோக்கிப் புறப்படும் புகையிரதமொன்று தீவிரவாதிகளால் குண்டு வைத்துத் தகர்க்கப் படுகிறது.. குண்டை வைத்த தீவிரவாதிகளில் ஒருவன் அந்தப் புகையிரதத்தை கவனித்துக் கொண்டிருந்திருக்கிறான். அவன் யாரென்பதை a கண்டுபிடித்துக் கூறினால், அதை வைத்து அவனது ஏனைய தாக்குதல்களிலிருந்து நாட்டை காப்பாற்றலாம்!!

aயின் பெயர் கோல்டர் ஸ்டீவன்ஸ். தேசிய ராணுவ ஹெலிகாப்டர் சாரதிகளில் ஒருவன். ஆப்கானிஸ்தானில் நடந்த போரில் துரதிர்ஷ்டவசமாக மரணமடைந்திருக்கிறான்.
bயின் பெயர் சீன் வென்ட்ரஸ். ஒரு ஆசிரியர். புகையிரதத்தில் அவருக்கு எதிரே அமர்ந்திருந்த பெண் க்றிஸ்டினா.

சோர்ஸ் கோடை கண்டுபிடித்த டொக்டர்.ரட்லெஜ், மற்றும் அவரது உதவியாளராக வரும்பெண் குட்வின் இருவரும் சேர்ந்து ஆய்வுகூடத்தில் ஸ்டீவன்ஸின் சமீபத்தைய நினைவுகளை (போரில் இறத்தல், சோர்ஸ் கோடுக்கு அனுப்பப்படல் போன்றவை) அழித்து சோர்ஸ் கோடிற்குள் அனுப்புகிறார்கள்.

புகையிரதத்தில் 1வது மிஷனுக்காக அனுப்பப்படும் ஸ்டீவன்ஸிற்கு ஒரே குழப்பம்... ஆப்கானிஸ்தானுக்கு ஹெலிகொப்டரில் பயனித்துக் கொண்டிருந்த நான் எப்படி இந்த புகையிரதத்தில் வந்தேன்? முன்னாலிருக்கும் பெண் (க்றிஸ்டினா) யார்? என்னைத் தெரிந்தது போல் சகஜமாக கதைக்கிறாளே??.. குழப்பங்களுக்கு மத்தியில் 1வது மிஷன் தோல்வியில் முடிந்து, ஆய்வுகூடத்திற்கு திரும்புகிறான்..
அங்கு குட்வின் "அவன் ஏன் அனுப்பப்படுகிறான்" என்பதையும் "எவ்வளவு குறைந்த மிஷன்களில் வேலையை முடிக்கிறானோ, அவ்வளவு சீக்கிரம் அடுத்த தாக்குதலை நிறுத்தலாம்" என்பதையும் நன்கு விளக்கி 2வது தடவையாக சோர்ஸ் கோடுக்குள் அனுப்புகிறார்.

சோர்ஸ் கோடைப் பொறுத்த வரையிலும் சின்ன தியரி ஒன்றுண்டு..
சோர்ஸ் கோடில் இருப்பவர்கள் எல்லோரும் குண்டுவெடிப்பில் இறந்தவர்களென்பதால் ஒவ்வொரு மிஷனிலும் அவர்களது நினைவுகள் பழையதிலிருந்தே தொடங்கும்..
ஆனால் சோர்ஸ் கோடுக்குள் அனுப்பப்படுபவருக்கு (ஸ்டீவன்ஸ்) நிஜ உலகிலும், சமாந்தர மெய்நிகர் உலகில் நடக்கும் விடயங்கள் யாவும் மூளையில் சேமிக்கப்பட்டுக் கொண்டிருக்கும். காரணம் ஸ்டீவன்ஸ் இறந்திருந்தாலும், அவரது முளை ஆய்வு கூடத்தில் செயற்கையாக செயற்பட வைக்கப்படுகிறது!!

தொடர்ந்து அனுப்பப்படும் ஸ்டீவன்ஸ் கிறிஸ்டினா மேல் இனந்தெரியாத அன்பை வளர்த்துக் கொள்கிறான்.. அதனால் ஒரு மிஷனில் அவளை ரயிலிலிருந்து வெளியே கொண்டுசென்று குண்டு வெடிப்பிலிருந்து காப்பாற்றுமளவிற்கும் துணிகிறான்..
அவனுக்கு தரப்பட்ட எட்டு நிமிடங்கள் முடிகின்றன.....

(குழப்பங்கள் தொடரும்!!)

5 comments:

  1. // சமாந்தர மெய்நிகர் (parallel reality) உலகம் //

    முடியல.....................

    ReplyDelete
  2. இந்த படத்த என்னமோ காரணத்தால் பாக்க முடியாமயே போயிருச்சு............பாக்கனும்னு தோணல.......trailer - குறிப்பா ட்ரெயின் தீடீர்னு வரும் காட்சி புடிச்சது..ஆனாலும் இன்னும் பாக்கல...அடுத்து எழுதுங்க.....


    டெம்ப்ளேட் கமென்ட் மாதிரி இருந்தாலும் - நீங்க எழுதுனத வெச்சு பாக்கலாம்னு தோணுது..

    ReplyDelete
  3. ட்ரெயிலரை பார்த்தா ஏதோ அடுத்த இன்செப்ஷன்-ங்கற ரேஞ்சுக்கு இருக்கும்..

    ஆனா இதை விட்டா இந்த வருஷத்துல வேற உருப்படியான சயின்ஸ் பிக்ஷன் படம் இல்லை.. (adjustment bureau விதிவிலக்காக) so உங்களை மாதிரி சயின்ஸ் ரசிகர்கள் பார்த்துத்தான் ஆகனும்..

    ReplyDelete
  4. http://specialdoseofsadness.blogspot.com/


    add tis movie blog to ur google reader...essays r written in simple english and very shortly...

    add tis movie blog too in ur google reader

    http://cliched-monologues.blogspot.com/

    ReplyDelete

Related Posts with Thumbnails