Tuesday, September 28, 2010

Shutter Island (2010)-2

அட.. டிகாப்ரியோ படத்துக்கு நான் தொடர்பதிவு எழுதறது இது ரென்டாவது முறை!! கவலைப்படாதீங்க இந்த படத்தை ரென்டு பதிவோடயே முடிச்சுக்கறேன்...

ஆன்ட்ருவா? டெடியா? என்ற இந்த மில்லியன் டாலர் கேள்விக்கு விடை ஆன்ட்ருதான்!!
ஆஷ்கிளிஃப் ஒரு கொடூரமான மருத்துவமனை என்ற பேச்சுக்கெல்லாம் இடமில்லை.. மொத்தத்துல தானும் குழம்பினதோட, பார்க்கற நம்மளையும் குழப்பிவிட்டிருக்காரு ஹீரோ ஆன்ட்ரு..

நீங்க ஷட்டர் ஐலன்டை இரன்டாவது முறையா பார்க்கப்போறீங்கன்னா...இந்த முறை டிகாப்ரியோ ஒரு பைத்தியம் தான் என்ற கருத்தை மனதில் நிறுத்திக் கொண்டு பாருங்கள்.. அப்பத்தான் கதை புரியும்...

ஆஷ்கிளிஃப் ஒரு நல்ல மருத்துவமனை. இங்கு வேலை செய்யும் டாக்டர்களில் காவ்லியும் சீஹானும் தான் மனநோயாளிகளை உளவியல் ரீதியா குணப்படுத்தும் முறையில் விருப்பம் உள்ளவங்க... டாக்டர் நேஹ்ரிங்குக்கும் வார்டனுக்கும் அந்த முறை சுத்தமாவே பிடிக்காது. போதைப்படுத்துவதாலும், அடித்துதைப்பதாலும் மட்டுமே நோயாளிகளைக் குணப்படுத்த முடியும் என எண்ணுபவர்கள் அவர்கள்!!


ஆன்ட்ருவின் ரியல் ஸ்டோரி


ஆன்ட்ரு லாடிஸ் ஒரு மார்ஷல். அவனது மனைவியான டொலரஸ் சிறிது மனநிலை சரியில்லாதவர். ஆன்ட்ரு 2ம் உலகப்போரில் தான் பங்கேற்றபோது ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் மன உளைச்சலுக்கு உள்ளாகிறான். அவனது மனைவி ஒருநாள் அவர்களது 3 பிள்ளைகளையும் தவறுதலாக நீரில் மூழ்கடித்து கொல்கிறாள். இதனால் விரக்தியடையும் ஆன்ட்ரு (அவள் தெரிந்தே செய்திருக்கமாட்டாள் என்பதை மறந்து) அவளைக் கொலை செய்கிறான்.


குற்ற உணர்வால் பாதிக்கப்படும் ஆன்ட்ரூவின் ஆழ்மனதால் அவனுக்கே தெரியாமல் ஆன்ட்ரூ இன்னொருவனாக உணர்கிறான் (change of personna). அதாவது தான் இன்னும் பெடரல் மார்ஷல் எனவும், தனது பெயர் டெடி எனவும் எண்ணுகிறான். மேலும் ஷட்டர் ஐலன்ட் பற்றி புதுவிதமான எண்ணங்களை உருவாக்கி, இல்லாத ஒரு பேஷன்டை (ராச்சேல் சொலான்டோ) தேடுவதாக எண்ணல் என தனது கற்பனைகளை வளர்த்துக் கொண்டே செல்கிறான்...

இதில் என்ன விசித்திரமென்றால் andrew laeddis என்ற தனது பெரில் உள்ள எழுத்துக்களைக் கொண்டே edward daniels என்ற பெயரையும்
dolores chanal என்ற மனைவியின் பெயரிலுள்ள எழுத்துக்களைக் கொண்டு rachel solando என்ற பெரையும் உருவாக்கியிருக்கிறது அவனுடைய ஆழ் மனது!! (இது தான் குறிப்பில் எழுதப்பட்டிருந்த rule of 4.. நான்கு விதமான பெயர்கள்!!)

இது படத்தில் வராது.. ஆனால் கதையில் வரும்,
" ஆன்ட்ருவும், நொய்சும் சிறையில் நண்பர்களாக இருந்திருக்கிறார்கள்.. அப்பொழுதும் தான் டெடி என்ற நினைப்பில் இருந்திருக்கிறான் ஆன்ட்ரு. நொய்ஸ் தான் ஷட்டர் ஐலன்ட் ஒரு கொடூரமான மருத்துவமனை எனும் எண்ணத்தை டெடியின் மனதில் விதைத்தான்.. ஒருநாள் நொய்ஸ் டெடியை அவனது உண்மைப் பெயரான லாடிஸ் என அழைக்க மனரீதியாக கோபமடையும் டெடி அவனைத் தாக்குகிறான். விஷயமறிந்த வார்டன் டெடியை மூளையைத் திருகும் வைத்தியம் பார்க்க கொண்டு செல்கிறார். அவரைத் தடுக்கும் காவ்லி தனக்கு டெடியை மனரீதியாக குணப்படுத்த ஒரேயொரு கடைசிச் சந்தர்ப்பம் தருமாறு வேண்டுகிறார். வார்டனும் சம்மதிக்கிறார்....."


காவ்லியின் பிளான்


கிட்டத்தட்ட படத்தில் பெரும்பகுதி காவ்லியின் பிளானின்படியே பயணிக்கிறது. எட்வர்ட் டெடி என்ற ஆன்ட்ருவின் கற்பனை உலகத்திலிருந்து அவனை மீட்டெடுத்து உண்மையை அவனுக்கு புரியவைக்கவே இப்படியொரு திட்டம்.. காவ்லியின் டீமால் உருவாக்கப்பட்ட அந்த துருப்புச்சீட்டு மிக முக்கியமானது. அதில் வரும் law of 4 ஆனது 2 உண்மையான பாத்திரங்களைக் கொண்டே மேலும் 2 கற்பனைப் பாத்திரங்கள் உருவாக்கப்பட்டன என்பதை ஆன்ட்ருவுக்கு புரியவைக்க உதவுகிறது.
மற்றையது patient no 67.. உண்மையில் ஆன்ட்ரு(டிகாப்ரியோ) தான் 67வது பேஷன்ட். எனவே டெடி நான்தான் ஆன்ட்ரு என ஏற்றுக்கொள்ளும் வரை அந்த 67வது பேஷன்ட் கிடைக்கமாட்டான்..(ரென்டு பேரும்தான் ஒரே ஆள் ஆச்சே..)


இறுதிக் காட்சி

இறுதிக்காட்சியில் ஆன்ட்ருவும், சீஹானும்(ஆன்டருவின் கற்பனை உலகின் "சக்") பேசும் போது, ஆன்ட்ரு டாக்டர் காவ்லியும், வார்டனும் தன்னையே கூர்ந்து கவனிப்பதை அவதானிக்கிறான். நான்தான் ஆன்ட்ரு என ஒத்துக் கொண்டிருந்தாலும் குற்ற உணர்வு அவனை விடவில்லை. குற்றவாளியான ஆன்ட்ருவாக இருப்பதா.. அல்லது நல்லவனான ஆனால் நிஜத்தில் இல்லாத எட்வார்டாக வாழ்வதா.. எனும் யோசனையில் தவிக்கிறான். இதனால்தான் அவன் டாக்டர் சீஹானிடம் "மிருகமாக வாழ்வதா? அல்லது மனிதனாக சாவதா மேல்?" எனக் கேட்கிறான்.

ஆன்ட்ரு மனநிலை சரியில்லாதவன் தான் என நிரூபிக்கும் சான்றுகள்-

* தீவில் உள்ள பொலிஸ்காரர்கள் டெடியையும், சக்கையும் வரவேற்கும் போது டெடியின் துப்பாக்கியை வாங்கிக் கொள்கிறார்கள். உண்மையில் ஒரு மார்ஷலுக்கு எங்கு வேண்டுமானாலும் துப்பாக்கியைக் கொண்டுசெல்லும் அதிகாரமுண்டு. ஆனால் டெடிதான் மனநோயாளியென அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவனால் எதுவித அசம்பாவிதமும் ஏற்படாமலிருக்க வாங்கிக் கொள்கின்றனர்.
அதே போல் சக்கிடம் கேட்கும் போது, சக் துப்பாக்கியை எடுக்கத் தெரியாமல் திணறி லெதர் உறையுடன் சேர்த்து எடுத்துக் கொடுக்கிறார். (துப்பாக்கியை எடுக்கக் கூட தெரியாமல் உதவி மார்ஷல் இருப்பார்?? சக்தான் உண்மையில் வைத்தியராயிற்றே..)

* அவ்வாறே படம் முழுதும் டெடியை நாய்க்குட்டி போல சுற்றிச் சுற்றி கண்காணிக்கும் பொலிசார், ராச்சேலைத் தேடுவதில் அக்கறை காட்டிக் கொள்ளவில்லை.

* படத்தின் ஆரம்ப சீன்களில் நிலத்தைக் கூட்டும் ஒரு மனநோயாளிப் பெண் டெடியைப் பார்த்து கையசைக்கிறாள்.. ஸோ.. அவளுக்கு டெடியை ஏற்கெனவே தெரியும்..(நோயாளியாக) !!

* டெடி மனநிலை பாதிக்கப்பட் பெண்ணை விசாரிக்கும் போது அவள் டாக்டர் சீஹான் பற்றி புகழ்கிறாள்... அப்பொழுது அவள் சக்கை வித்தியாசமான ஒரு பார்வை பார்ப்பாள். (அவள் பேசுவதே அவரைப்பற்றித் தானே!!)
இந்த நாடகத்தின் படி யாருமே டெடியை நோயாளியாகப் பார்க்கமாட்டார்கள்.(பேஷன்டுக்கு ராஜ மரியாதைதான்) ஆகவே டெடி இலகுவாக அங்கிருந்து தப்பிக்க சந்தர்ப்பம் உண்டு. இதைத் தெரிந்து கொண்ட அவள் டெடியைத் தப்பித்து ஓடுமாறு சீட்டில் எழுதிக் கொடுக்கிறாள்..

* டெடி, டாக்டர் நேஹ்ரிங்கிடம் 67வது நோயாளி பற்றி staff meetingல் சொல்லும் போது., அவர் எரிச்சலடைகிறார். (டாக்டர் காவ்லி ஒரு நோயாளியை இவ்வளவு சுதந்திரமாக நடமாட விட்டிருப்பதால்..)


நீரும் நெருப்பும்


படத்தில் ஆன்ட்ருவின் கற்பனை உலகத்துக்கு அடையாளமாக நெருப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. வார்ட் Cயில் தீக்குச்சி வைத்திருக்கும் போதும், நெருப்பு மூட்டிய குகையில் ராச்சேல் எனக்கூறும் பெண்ணுடன் உரையாடும் போதும், காரை வெடிக்க வைக்கும் போதும், மனைவியினதும் பிள்ளைகளினதும் உருவங்கள் பிரமைகளாகத் தோன்றும்!!!

அதே போல் நீர் நிஜத்தின் அடையாளமாகும். டொலரஸ் பிள்ளைகளை நீரில் மூழ்கடித்துக் கொன்றாள்.. நீர் படத்தில் வரும் இடங்களில் டெடி சற்று மன உளைச்சலுக்கு உள்ளாகிறான்/ உடம்பு சுகமில்லாததைப்போல் உணர்கிறான்..

இது தாங்க படத்தை நீங்கள் வியூவில் பார்க்கும் போது கவனிக்க வேண்டியவை.. இந்த மாதிரியான படத்தை ஒரு தடவை பார்த்தால் போதுமா என்ன? (நானும் இன்னொரு தடவை பார்க்லாம் என்றிருக்கிறேன்..)

இவ்வளவு கஷ்டமான படத்தை திரைப்படமாக கொண்டு வந்த படக்குழுவினருக்கு என்ன சொல்லிப் பாராட்டினாலும் அது தீராது..

ரேட்டிங்ஸ்,

நடிப்பு = 17
இசை = 16
கதை+திரைக்கதை = 18
கலை+ஒளிப்பதிவு = 19
இயக்கம் = 16

மொத்தம் = 86% சூப்பர்

9 comments:

 1. வாவ்! அருமை. ஒரு படத்தின் நுணுக்கமான விஷயங்களை கவனித்து விவரிப்பது எளிதான காரியமல்ல! வாழ்த்துக்கள்! இன்சப்சன் மட்டுமல்லாது மற்ற படங்களையும் செய்கிறீகள். தொடரட்டும் உங்கள் திறமை!

  ReplyDelete
 2. நன்றி எஸ்.கே

  ReplyDelete
 3. படம் பார்த்தாச்சா??

  ReplyDelete
 4. //JZ said...//
  இன்னும் இல்லை இந்த வாரம் பார்த்திடுவேன்!

  ReplyDelete
 5. அருமையான பதிவு.மார்ட்டின் ஸ்கார்சி பெர்க்மன் தரத்தில் எடுத்த படம்.

  ReplyDelete
 6. @உலக சினிமா ரசிகன்- கருத்துக்களுக்கு நன்றி

  ReplyDelete
 7. நண்பா..
  எனக்கு மிக மிகப் பிடித்த டைரக்டரின்,பிடித்த நடிகரின் ஒரு மிகப் பிடித்த படம். ஆனால் முதல்முறையாக பார்க்கும் போதே ஒருவாறு எனக்கு கதை புரிந்து விட்டது. கடைசியில் //அவன் டாக்டர் சீஹானிடம் "மிருகமாக வாழ்வதா? அல்லது மனிதனாக சாவதா மேல்?" எனக் கேட்கிறான்// இது நான் எதிர்பாராதது.

  அருமையாக எழுதுகிறீர்கள். Classic Suspense வகை திரைப்படங்களின் விமர்சனங்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்..

  ReplyDelete
 8. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி கொழந்த! நேரம் கிடைச்சா கண்டிப்பா எழுதுவேன்..

  ReplyDelete
 9. Thanks for your clear review. Its easy to understand the story i watched more than 2 times . but the ending was confused now its clear

  ReplyDelete

Related Posts with Thumbnails