Saturday, September 22, 2012

Moonrise Kingdom (2012)

வந்திருச்சு.. வந்திருச்சு.. ஒருவழியா வந்தே தொலைஞ்சிருச்சு.. இந்த படத்துக்காக  Darjeeling Limited எழுதுன காலத்திலிருந்தே காத்துக்கிட்டிருக்கேன்.. இந்த வருஷத்தோட சிறந்த படங்கள்ல ஒண்ணு, வெஸ் ஆண்டர்சனின் பெஸ்டு.. இப்படி ஏகப்பட்ட பில்டப்புக்கள் இணையம் முழுக்க துரத்தவும் படத்துக்காக அதி தீவிரமா தேடிக்கிட்டிருந்தேன்.. என் நேரம் எங்கயுமே படம் இருக்கலை.. இருந்ததுல்லாம் ஜெர்மன் வேர்ஷன் தான்.. இங்கிலிஷ்ல கேவலம் ஒரு காமிரா காப்பி கூட இல்லை.. வாரத்துக்கு ரெண்டு தடவை இந்தப் படத்தையும், Beasts of the southern wild படத்தையும் புது லிங்க் வந்திருக்கான்னு தேடிப் பார்த்துக்கிட்டேயிருப்பேன்..

எதேச்சையா இன்னிக்கு ட்யூப்-பிளஸ் பக்கம் போக, முன் பக்கத்திலேயே படம் எனக்காக காத்துக்கிட்டிருக்கு.. வந்திச்சே ஒரு மரண சந்தோஷம்! தியேட்டர்ல அடிச்சுப்புடிச்சுக்கிட்டு பார்த்திருந்தாக் கூட இப்படியொரு சந்தோஷம் கடைச்சிருக்குமா தெரியாது.. அத்தனையையும் அடக்கிக்கிட்டு படத்துக்கு தயாரானேன்..

ரிசல்ட்டு?.. எதிர்பார்த்ததே!! வெஸ் ஆண்டர்சனை எனக்கு எதுக்காகவெல்லாம் பிடிக்குமோ அத்தனை டிரேட்மார்க்குகளுக்கும் குறைவில்லாத ஒரு படம்!
1960களில் இங்கிலாந்திற்குச் சொந்தமான தனித்தீவொன்றில் நடத்தப்பட்டு வரும் கட்டுப்பாடுகள் நிறைந்த சாரணர் இயக்கத்திலிருந்து 'சாம்' எனும் சிறுவன் தப்பித்துப் போய்விடுகிறான்.. "தான் சாரணர் படையிலிருந்து விலக விரும்புவதாகவும், தன்னை மேற்கொண்டு தேடவேண்டாமெனவும்" தலைமை அதிகாரிக்கு கடிதம் எழுதி வைத்திருக்கிறான்.. அவர் இதைப் பற்றி உடனே சாமின் குடும்பத்தவர்களுக்கு தெரிய முயல்விக்கும் போதுதான், சாம் ஒரு அநாதை எனவும், அவனது சாரணர் Bio-Dataவில் அந்த உண்மை தெரிவிக்கப்படாததும் தெரியவருகிறது..

இதே நேரம் அதே தீவில் வசிக்கும் வழக்கறிஞர் குடும்பத்து மகளான சூசி என்பவளும் வீட்டைவிட்டு காணாமல்போயிருக்கிறாள்.. பொலீஸார் இந்த இரு கேஸ்களையும் விசாரித்து வரும் போதுதான் சாமும், சூசியும் ஒரு வருஷத்துக்கு முன்பு நடந்த மேடை நாடகமொன்றில் சந்தித்துக் கொண்டதும், அதைத் தொடர்ந்து இரகசியமாக பேனா நண்பர்களாக இருந்து வந்திருக்கின்றமையும், கடிதங்கள் மூலமாகவே இருவரும் சேர்ந்து தத்தமது இடங்களை விட்டு தப்பித்தோடி சேர்ந்து வாழ முடிவெடுத்திருக்கின்றமையும் தெரிய வருகின்றது! போலீசாரும், வழக்கறிஞர் குடும்பமும், சாரணர் படையும் இந்த இரு இளங்காதலர்களைத் தீவு முழுக்கத் தேடத் தொடங்குகின்றனர்..

"ரொம்ப சீரியசான கதை போல இருக்கே!.."ன்னு யோசிச்சுக்கிட்டு வந்தீங்கன்னா, நீங்க ஆண்டர்சன் படம் எதுவும் பார்த்ததில்லைன்னு அர்த்தம்... படம் தொடக்கத்துலயிருந்து கடைசிவரைக்கும் எல்லாமே ஆண்டர்சன்தான்.. அதுனால அவரைப் பத்தி தெரியாதவங்களுக்காக ஒரு சின்ன விளக்கம்..
ஆண்டர்சன் 'பெரும்பாலான' இயக்குனர்கள் லிஸ்டில் எப்போதுமே வரமாட்டார்.. மிக மிக தனித்துவமான இயக்குனர்.. அடுத்த ஜெனரேஷனின் potential வாய்ந்த இயக்குனர்களில் இவரும் ஒருவர்.. மார்ட்டின் ஸ்கார்செஸியே இவருதான் 'அடுத்த ஸ்கார்செஸி'னு சொல்லியிருக்காருன்னா பார்த்துக்கோங்களேன்! இவரோட படங்கள் நடிப்புக்காகவோ, கதைக்காகவோ பெரிசா பேசப்படாது.. (யதார்த்தம் எனும் வார்த்தையே இவரது அகராதியில கிடையாது..) ஆனா க்ரியேட்டிவிட்டிக்காக நிச்சயம் பேசப்படும்.. Magic School Busஐ எடுத்துக்கிட்டு இவரோட மூளையில எப்படித்தான் ஒரு கதை உருவாகுதுன்னு ஆராய்ச்சி பண்ணியாவோனும்!

நெறைய படங்கள் அமெரிக்காவுலயே limited release தான்.. இதனாலேயே இவரது படம் பெரும்பான்மை ரசிகர்களால் 'சுத்த வேஸ்டு'ன்னு நிராகரிக்கப்பட்டுவிடும்.. ஆனால் யாருக்காகவும் இவர் தனது பாணியை மாத்திக்கறதா இல்லை..  இவரது வெறித்தனமான ரசிகர்களால் ஆகா, ஓகோவெனக் கொண்டாடப்படும்.. இலக்கியப் பார்வையைத் தாண்டிய ஒரு வியூ இவரது படங்களுக்கு தேவைப்படும்ங்கறது அவர்களின் கருத்து.. (நான் ரெண்டுக்கும் நடுவுல!) ஆனா இந்தப்படத்துல எல்லாத் தரப்பினரையும் திருப்திப்படுத்தியிருக்காருன்னுதான் சொல்ல வேண்டும்!

'பசங்க' படம் ஞாபகமிருக்கா.. ஒரு கணம் சின்னப்பசங்களாகவே மாறி அவர்களது சீரியஸ்னஸை ரசித்துக் கொண்டிருந்தோம்.. கிட்டத்தட்ட அதே கேட்டகரிதான் இந்தப்படமும்.. அதுவும் ரெண்டாவது பாதிதான் செம்ம கலாட்டா! எதாவது ஒரு பெரிய தீவை கண்டுபிடித்து explore பண்ணி, கூடாரம் கட்டி, வெளியுலகத்தைப் பத்தியே கவலையில்லாம ஒரு adventure வாழ்க்கை வாழனுங்கறது எல்லா சின்ன பசங்களினதும் கனவு.. அதை உணர்ந்து தன் பாணியில் கதையாக்கி ரசிக்க வைத்திருக்கிறார்.. சின்னப்பசங்களளுக்கான கதைப் புத்தகம் வாசித்த உணர்வு மனதில் தங்குகிறது!
தெரிந்த நடிகர்களில் சாரணர் தலைவராக எட்வர்ட் நோர்ட்டன்.. காக்கிச் சட்டையில் ரெண்டு, மூணு வயசு குறைந்திருக்கிறார். பொலீஸாக ப்ரூஸ் வில்லிஸ். ஆனால் இவர்கயும் தாண்டி முக்கியத்துவம் அந்த சிறுவன்,சிறுமி மேல் விழுவது படத்துக்கு கிடைத்த வெற்றி!

வழக்கம் போல மஞ்சள் நிறத்தை மையப்படுத்திய ஒளிப்பதிவு.. சில லொக்கேஷன்களெல்லாம் நிஜமா, செட்டான்னு பிரித்தறிய முடியவில்லை.. ஓவியங்களில் மாத்திரமே காணக்கூடிய கற்பனை உலகங்கள்!  இல்லாத ஒரு தீவையும் அதுக்கு ஒரு மேப்பையும் உருவாக்கிவிட்டு அதை நிஜத்தில் செதுக்குவதற்கு நாள்வரம்பில்லாமல் உழைத்திருக்கிறார்கள்..  படத்தின் காமடி ஃபீலுக்கு இசையும் பல இடங்களில் கைகொடுக்கிறது..
ஆஸ்கர் நாமினேஷன் எங்கயாவது கிடைக்கும்னு நம்புறேன்.. பார்க்கலாம்ஸ்!

ரேட்டிங்ஸ்,
நடிப்பு = 17
இசை = 15
கதை+திரைக்கதை = 17
கலை+ஒளிப்பதிவு =17
இயக்கம் = 18

மொத்தம் = 84% சூப்பர்!

Moonrise Kingdom (2012) on IMDb

28 comments:

  1. நோட் பண்ணிக்கிட்டேன் தல...நன்றி ;)

    ReplyDelete
  2. ஹீ ஹீ ... பாத்துட்டா போச்சு...

    ReplyDelete
  3. அருமைய எழுதி இருக்கீங்க நண்பா..
    இன்னைக்கு தான் நானும் டவுன்லோட் போட்டேன்..
    நாளை பார்த்து விடுவேன்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா! அப்ப எல்லாரும் என்னைய மாதிரித்தான் படத்துக்கு வெயிட் பண்ணியிருக்கீங்களா?..

      Delete
    2. அமாம் நண்பா...
      டவுன்லோட் ஆகிவிட்டது. இன்று பார்த்துவிட்டு நாளை சொல்கிறேன் நண்பா.
      TM2

      Delete
  4. இன்னிக்கு தான் பார்த்தேன். ப்ளுரே ப்ரிண்ட் ரிலீஸாகியிருக்கு. பார்த்துட்டு எழுதுவோம்னு நினைச்சேன். நீங்க எழுதிட்டீங்க (நான் எழுதியிருந்தா இன்னும் மூணு மாசம் போயிருக்கும்)

    ஆனா இந்த மாச இன்டர்நெட் லிமிட்டை அவசரப்பட்டு தாண்டிட்டேன். அவ்வ்வ் ... அடுத்த மாசம் தான் இனி டவுன்லோட் எல்லாம். ப்ளாக் லோட் ஆகவே மணிக்கணக்காகுது. அதனால Breaking Bad உடன் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கேன்.

    இதைப் பார்த்துட்டு சொல்றேன். :)

    ReplyDelete
    Replies
    1. நீங்க மூணு மாசம் கழிச்சே எழுதினாலும் அது பாலிஷ்டா தான் இருக்கும்..
      பார்த்து சொல்லுங்க, தல! நன்றி!

      Delete
    2. இன்னிக்குத் தான் பார்த்தேன் பாஸ்... டிஃபரண்ட்டான செம்ம படம். நிறைய இடங்களில் காமெடி பிடிச்சிருந்திச்சு. அதிலும் ரெண்டு பசங்களும் பீச்ல கிஸ் பண்ணி பேசிக் கொள்ளும் இடம் சீரியஸா இருந்தாலும் எனக்கு சிரிப்பை அடக்க முடியல.

      அடுத்து எப்போ எழுதுறதா உத்தேசம்? :)

      Delete
    3. படம் பார்க்குறதே வெறுத்துப் போன ஒரு கன்டிஷன்லேர்ந்து இப்பதான் ஃபுல்லா மீண்டிருக்கேன்.. இன்னும் எதுவும் பெரிசா பார்க்கலை!
      ஒக்டோபர் முடிஞ்சா முடிஞ்சுட்டு போவுது.. நவம்பரில் என்ட்ரியொன்னை போடலாமுன்னு உத்தேசம்!

      மூன்ரைஸ் கிங்டம் பார்த்து நம்மளை உற்சாகப்படுத்துறதுக்கு நன்றி தல!

      * காணாமப் போயிருந்த பிரபல பதிவர் திரும்பி வந்திருக்காரு.. சந்தோஷத்துல தேடிப்போனா பதிவு ரிமூவாகியிருக்கு. என்ன மேட்டருன்னு ஏதும் தெரியுமா??

      Delete
  5. " வெஸ் ஆண்டர்சன்" பத்தி அறிமுகம் இருக்கு தல....அந்த அறிமுகம் கூட உங்க முலம் தான் கிடைச்சது. ஏனோ அவர் படம் இது வரைக்கும் பார்த்தது இல்லை.இதையாவது பார்க்கிறேன் .. :) :)

    ReplyDelete
    Replies
    1. பாருங்க பாஸ்.. சில வேளை ஆண்டர்சன் ஸ்டைல் உங்களுக்கு பிடிக்கலாம்.. இல்லை அந்த வகைப் படங்களை நீங்கள் அறவே வெறுக்கலாம்!

      Delete
  6. வெஸ் ஆண்டர்சனை நீங்க வெறி பிடிட்டு தேடிகிட்டு இருக்கீங்க...
    நான் அப்படி ஒரு ஆள் இருக்கிறது தெரியாம வாழ்ந்துகிட்டு இருக்கேன்.

    அவரது மாஸ்டர்பீஸ் படம் எதுவென்று சொல்லுங்கள்.
    அதை முதலில் பார்த்து விடுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நான் எழுதியிருக்கும் இந்த சின்ன விளக்கத்தைப் பார்த்து, ஆண்டர்சன் பெரிய பீஸுன்னு எண்ணிவிடத்தேவையில்லை.. அவரது படங்களைப் பார்த்துவிட்டு நீங்கள் குப்பையென்று தூக்கியெறிந்தாலும் ஆச்சரியமில்லை.. ஏதோ ஒரு சின்ன நிகழ்தகவளவில் உங்களுக்கும் படம் பிடிக்கலாம். :)

      பெஸ்டு படம் - The Royal Tenenbaums

      Delete
  7. வணக்கம் நண்பா! வந்துட்டேன்!

    ReplyDelete
  8. இந்த மாதிரி கதைகள், அதாவது இந்த சின்ன பசங்க கூட பெரியவங்க கூட்டு சேந்துகிட்டு அட்வஞ்சர் போற மாதிரியான படங்கள் எனக்கு பொதுவா பிடிக்கிறது இல்ல. விதிவிலக்கு த ஜேர்னி-2 , இதை ராக் நடிச்சார்ங்கிறதுக்காக பாத்தேன், பத்தப்படி இந்த மாதிரியான சின்னப் பசங்க அட்வெஞ்சர் எனக்கு பிடிக்கிறது இல்ல. நீ ஏதோ பில்டப் குடுக்கிற? நம்மி பாக்கலாமா? அப்புறம் சொதப்பினா? தேடிவந்து வீட்டு முன்னால வாந்தி எடுத்து வச்சிருவேன்!

    ReplyDelete
    Replies
    1. இல்லை பாஸ்.. இது ஒரு அட்வெஞ்சர் கதை கிடையாது..
      ஒரு dry humor உடன் ஏதாவது யோசிக்க வைக்கற மாதிரி படம்..

      என் பில்டப்பையெல்லாம் நம்பிரக்கூடாது.. உனக்கு படம் 'தேமே'ன்னு போற மாதிரி இருக்கலாம்.. அல்லது கொஞ்சமா "பரவால்லை"னு பிடிக்கலாம்! அதுக்ககாக வாந்தில்லாம் எடுக்கக்கூடாது!!

      Delete
    2. ///என் பில்டப்பையெல்லாம் நம்பிரக்கூடாது..////

      வெளங்கிரும்! ஒன்ன்ய எல்லாம் நான் பெரிய லெவல்ல வச்சிருக்கேன் தல! இப்புடி பல்டி அடிச்சா எப்புடி?

      Delete
  9. ஒரு உதவி செய்யணும் தல! உன்னோட பிளாக்ல மேல் பகுதியில் Home, Actors, Animations,comedy....... அப்டீன்னு வகைப்படுத்தி வச்சிருக்கிற இல்ல. அந்த செட்டிங்க எப்புடி செய்யிறது? கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. நான் எதுவும் html எதுவும் யூஸ் பண்ணிக்கல தல.. (அதுல்லாம் நமக்கு வந்தா தானே!) ப்ளாக்கரா பார்த்து தந்ததை யூஸ் பண்ணிருக்கேன். அம்புட்டுதேன்.

      மேல இருக்க actors, directorsலாம் தனித்தனி pages.. அதுல ஒவ்வொரு டைரக்டர் பத்தியும் எழுதிட்டு அவங்களுக்கான labelஐ லிங்க்-கா குடுத்துருக்கேன்!

      கீழே இருக்க Animation, horror எல்லாம் genre வாரியாகப் பிரித்த labels.
      அதைக் காட்டுறதுக்கு
      Layout -> Add a gadget -> Labels
      அங்க show - Selected labels தெரிவு செஞ்சுட்டு, genre பத்தின லேபல்ஸை மட்டும் 'டிக்' பண்ணியிருக்கேன்..
      Show number of posts per label ஐ uncheck பண்ணியிருக்கேன்

      ரெண்டு gadgetsஐயும் (pages, labels) லேஅவுட்ல மேல தூக்கி வைச்சிட்டு
      Template -> Customize -> Tabs Text அப்புறம் Tabs Background ரெண்டையும் தேவைக்கேத்த மாதிரி மாத்தியிருக்கேன்..

      Delete
    2. ரொம்ப நன்றி தல! எனக்கு இந்த ஃபுட்பால் பதிவுகளை தனியா ஒரு லேபிளாக காட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தது. ( நான் தான் தமிழ்ல ஃபுட்பால் பத்தி எழுதுறதில ஸ்பெசலிஸ்டுன்னு இல்லாத ஒண்ன இருக்குன்னு காட்டுற டெக்னிக் தான்) அந்த ஆசையா நிறைவேத்தி வச்சிட்ட நண்பா! ரொம்ப தாங்ஸ்!

      Delete
    3. கெணறு வெட்ட பூதம் வந்த கதையா, நீயி சொன்ன ஐடியாவ ஃபாலோ பண்ணி நெறைய விசயம் தெரிஞ்சிக்க முடிஞ்சிது நண்பா ! ரொம்ப நன்றி!

      Delete
  10. தல இன்னிக்கு டெம்லேட் கிண்ட போய் தான் என்னோட பழைய பதிவுகளுக்கும் போயி நீ பின்னூட்டம் போட்டிருப்பது தெரியவந்தது, மிக்க நன்றி!அதுவும் அந்த தொப்புள் பதிவில் உனது ஆதங்கம் தெரிந்தது. சீக்கிரம் அந்த மாதிரி ஏதாவது போட்டிரலாம்!

    ReplyDelete
  11. ஹி..ஹி.. தங்கள் சேவை.. நாட்டுக்குத் தேவை!

    ReplyDelete
  12. போன வரம் தான் படத்தை டவுன்லோட் செய்தேன் yify-torrentsல தான் 1080p பிரிண்ட். படம் பார்கிறேன்.

    ReplyDelete

Related Posts with Thumbnails