Saturday, July 16, 2011

Mars needs Moms (2011)


 செவ்வாய்க் கிரகத்தில் புதிதாக பிறக்கும் குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக ரோபோ-அம்மாக்கள் உருவாக்கப்படுகின்றன. அவற்றை பயிற்றுவிப்பதற்காக பூமியிலுள்ள ஏதாவது கண்டிப்பான அம்மாவை கடத்திக் கொண்டு வர வேண்டும் என செவ்வாய் கிரகத்தின் வில்லி + தலைவியாக உள்ள சூப்பர்வைசர் தீவிரமாக தேடுகிறாள்...

ஆவி ரஜினியை கூட்டிக் கொண்டுவந்து "உனக்கு எந்த உடம்பு வேணும்?"னு கேட்டது போல, இங்கேயும் "கீ" அப்படீங்கற ஏலியன் ஹை-டெக்-திரையில் சூப்பர்வைசரிடம் ஒவ்வொரு அம்மாவாக காட்டிக் கொண்டே வருகிறாள். இறுதியில் கண்டிப்பான ஒரு அம்மாவை செலெக்ட் செய்கிறார்கள்..

இந்த கீ இருக்காளே, செவ்வாயிலேயே புரட்சிகரமான ஏலியன் அவள்தான்.. எப்போதோ பூமியைப் பற்றிப் பார்த்த வீடியோவை வைத்துக் கொண்டு, பூமியைப் போல செவ்வாயையும் கலர்புல்லாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன், முக்கியமான கட்டங்களின் மீது ரகசியமாக வண்ணங்களைத் தீட்டி மினி-புரட்சி நடத்துகிறாள்..

இதற்கிடையே பூமியில் சுட்டித்தனமான 9 வயது பையனாக வருகிறான் ஹீரோ "மைலோ". அவனது அப்பா வணிக விஷயமாக வெளியூர் போயிருக்கிறார். மைலோவின் அம்மாவோ (செலெக்ட் பண்ண அதே அம்மாதான்!) அவனை "இத செய், இத செய்யாதே!!"ன்னு கண்டிஷன் போட்டே வெறுப்பேற்றுகிறார். இதனாலேயே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில், "இப்படி ஒரு அம்மா கிடைக்காமல் இருந்திருந்தால், என் வாழ்க்கையே நல்லா இருந்திருக்கும்!"னு ஏதோ ஆவேசத்துல மைலோ பேசி விடுகிறான்.

அன்று இரவு முழுக்க மைலோவுக்கு தூக்கமேயில்லை.. தவறை உணர்ந்து அம்மாவிடம்  மன்னிப்பு கேட்க செல்கிறான். அங்கே ஒரு விண்கலத்தில் அம்மாவை யாரோ கடத்திக் கொண்டு செல்வதைப் பார்த்து, ஓடிப் போய் அதில் பற்றிக் கொண்டு அவனும் செவ்வாய் போய் இறங்குகிறான்!!

அம்மாவிடமிருந்து தாய்மைப் பண்புகளை எடுப்பதற்காக தன் அம்மாவை கொன்று விடுவார்கள் என்பதையும் அங்கு சென்று அறிகிறான். அம்மவைக் காப்பாற்ற 3 பேரின் உதவியை நாடுகிறான்.. 1வது - க்றிப்ளர் (மைலோவைப் போன்ற சூழ்நிலையிலேயே செவ்வாய்க்கு சிறுவனாக வந்து பல ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வரும் ஆசாமி), 2வது "பேக்கர்" எனப்படும் கிறிப்ளரின் செல்ல பயோனிக்-நாய்க்குட்டி, 3வது கீ!
சூப்பர்வைசரையும், அவளது கட்டளையின் கீழ் இயங்கும் ஆயிரக்கணக்கான ஏலியன்களையும் தாண்டிப் போய் அம்மாவைக் காப்பாற்ற மைலோவுக்கு இருப்பது வெறும் 5 மணித்தியாலங்கள் மட்டுமே!!!

டிஸ்னி பிக்சர்ஸோட இந்த வருஷத்து பந்தயக் குதிரை இந்தப் படம்தான்.. ஆனால் படம் ரிலீசாக முதல்நாள் வரைக்கும் நெறய பேருக்கு இப்படி ஒரு படம் வருவதாகவே தெரியாது.. 2010 இறுதியில் வழக்கமாக வெளியிடப்பட்ட "அடுத்த வருடத்திற்கான எதிர்பார்ப்புக்குரிய படங்கள்"- லிஸ்டுலயும் இந்தப்படம் பெரும்பாலும் இருக்கவில்லை.. காரணம் டிஸ்னி விளம்பரப்படுத்தல்ல கவனம் செலுத்தாமை..
விளைவு??... ஒன்று, இரண்டல்ல.. 111 மில்லியன் நட்டம்!!! இந்த ஆண்டுக்கான மிகப்பெரிய கமர்ஷியல் ப்ளொப் இதுவாத்தான் இருக்கனும்..

அதுக்காக படம் "படு மட்டம்"னும் சொல்லிவிட முடியாது. காரணம் கண்ணை ஈர்த்து வைத்திருக்கும் அனிமேஷன். பெரிய வீடியோ கேம்களில், கதை சொல்லும் காட்சிகளின் போதிருக்குமே.. அப்படிப்பட்ட தரத்துல ஒரு அனிமேஷன்!!
படத்துல பூமியில் நடக்கும் காட்சிகளில் அமைப்பும், அசைவும் நேர்த்தியாக பொருந்துகிறது. செவ்வாய்க்கிரகத்திற்கு கூட்டிக்கிட்டு போனதன் பின் புவியீர்ப்பு விசை குறைந்து போனதாக சித்தரிக்கும் போதுதான் உறுத்தல் தொடங்குகிறது..

இதற்கிடையே கதாப்பாத்திரங்கள் வேறு சிற்சில இடங்களில் ஓவர் ரியாக்ட் செய்வது போலுள்ளது.. பார்த்துக் கொண்டிருக்கும் போதே நமக்கு டிஸ்னிக்கும் பிக்சாருக்கும் உள்ள வித்தியாசம் தெள்ளத் தெளிவாகிறது.
படத்தின் கடைசி 30 நிமிடங்களில் அம்மா சென்டிமென்ட் வெள்ளமாக வழிந்தோடுகிறது.. ஆனால் மீதிக் கதையை யூகிப்பதும் இலகுவாகிக் கொண்டே செல்கிறது..

படத்தில் வரும் ஜோர்ஜ் ரிப்ளரின் (சுருக்கி "கிறிப்ளர்"..) ப்ளாஷ்பேக் கதையில் காட்டிய ஆர்வத்தைக் கூட ஒட்டுமொத்தப் படத்தின் கதையில் காட்டவில்லை!! சுவாரஷ்யம் அப்பப்போ வந்து போவதால், படம் மனதுடன் ஒட்ட மறுக்கிறது!!

பாத்திரங்கள்- 15
அனிமேஷன்-15
பின்னணித் தரவுகள்- 11
கதை+திரைக்கதை- 07
இயக்கம்-09

மொத்தம்- 57% பரவாயில்லை!

Mars Needs Moms (2011) on IMDb

3 comments:

  1. //அதுக்காக படம் "படு மட்டம்"னும் சொல்லிவிட முடியாது//

    நான் படம் படு மொக்கை என நினைத்தேன். பொழுதுபோகும் என்றால் பார்த்து விட வேண்டியது தான்.

    ReplyDelete
  2. இந்த படத்தையெல்லாம் எங்க புடிக்கிறீங்க..............பரவலா கேள்விப்பட்டது இல்லையே...........

    ReplyDelete
  3. லக்கி லிமட் - பார்க்கலாம்.. ஒரு தடவை மட்டும்!

    கொழந்த - நான் ப்ளாக்கர்களின் விமர்சனங்களுடன், அவ்வப்போது screenrant.com போய் விமர்சனங்களையும் படிப்பதுண்டு.. அங்குதான் இதை பற்றி அறிந்தேன்!

    ReplyDelete

Related Posts with Thumbnails