Sunday, May 15, 2011

Alpha and Omega (2010)


லேடி அன்ட் த ட்ராம்ப் பதிவிற்கு அடுத்ததாக இதை எழுதுவதால் இரண்டு படங்களையும் ஒப்பிடுகிறேன் என்று மட்டும் எண்ணி விட வேண்டாம்.. இந்தப் படத்தின் கால்தூசிக்கு கூட இது வருமா என்பது சந்தேகமே.. இந்தப் படம் கிட்டத் தட்ட போன வருஷத்தில் வந்த ஒரு அனிமேஷன் குப்பை!




கனடாவிலுள்ள "ஜஸ்பர்" நேஷனல் பார்க்கிலுள்ள கேட், ஹம்ப்ரே எனும் இரண்டு ஓநாய்கள் தான் கதையின் காதல் ஜோடிகள். கேட் ஓநாய் சாதியிலேயே (இங்கேயுமா!!) உயர்ந்த அல்பா சாதித் தலைவனின் மகள். ஆனால் ஹம்ப்ரே தாழ்ந்த "ஒமேகா" இனத்தை சேர்ந்தவன்.
அல்பா ஓநாய்களுக்குள்ளேயே இரண்டு பிரிவு உண்டு. ஒன்று கிழக்கு பிரதேசத்தை சேர்ந்தவர்கள். மற்றையவர்கள் மேற்கு..
மேற்கு அல்பா தலைவனான வின்ஸ்டன் தனது மகளான கேட்டை, கிழக்கு அல்பா தலைவனான டோனியின் மகன் கார்த்-இற்கு கட்டி வைத்து இரண்டு பிரிவையும் ஒருங்கிணைக்க முயற்சிகள் எடுக்கிறார்! (கிட்டத்தட்ட) நிச்சயதார்த்த இரவன்று கேட்டும், கார்த்தும் சந்திக்கிறார்கள். கார்த், கேட் போலவே நன்று பயிற்சியளிக்கப்பட்டவனாய் இருக்கிறான். இருந்தாலும் ஒரு சின்ன குறை... கார்த்தின் ஊளையை சகிக்கவே முடியாது. (அவன் ஊளையிடும்போது அவனுக்கு மேலாகப் பறக்கும் குருவிகள் கூட விழுந்து இறக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!!)

ஒரு ஓநாய் தன்னுடைய துணை ஓநாயைக் கண்டுபிடிப்பதே ஊளையிடுவதில் தானாம்.. கார்த்தின் ஊளையை பொறுக்க முடியாமல் தப்பித்துச் செல்லும் போதுதான் கேட் ஹம்ப்ரேயை சந்திக்கிறாள்!! இருவரும் வெட்டியாக பேசிக் கொண்டிருக்கும் போதே எங்கிருந்தோ வந்த இரண்டு மனிதர்கள் இவர்களுக்கு மயக்க ஊசி போட்டு, தூக்கிக் கொண்டு போய் "சவ்டூத் தேசிய மீளுருவாக்கல் காட்டில்" விட்டுவிடுகின்றனர்.

அந்தக் காட்டில் இருக்கும் ஒரு வாத்திடம் போய் கேட்டதிலிருந்து, ஓநாய்களை இனம் பெருக்குவதற்காவே அவர்களை அங்கு கொண்டு வந்திருப்பதாக அறிகின்றனர்!!! ஹம்ப்ரே முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது... சுத்தி இருக்கற ஏரியாவுலயே அவர்களைத் தவிர வேறு ஓநாய்களே இல்லையாச்சே!! இருந்தாலும் கேட்டின் முடிவின் படி இருவரும் தப்பித்து சொந்தக் காட்டுக்கு செல்ல தீர்மானிக்கிறர்... போய்ச்சேரும் வழியில் இவர்களுக்குள எப்படி காதல் உருவாகிறது என்பது தான் மீதிப் படம்..

அழகா ஓநய்களை வடிவமைத்துவிட்டு, அசைவூட்டம் கொடுப்பதில் ரியாலிட்டியைக் கெடுத்திருக்கிறார்கள். அதுவும் ஆரம்ப சீன்களில் அடிக்கடி zoom in செய்து out செய்வது வெறுப்பேற்றுகிறது. ரொம்பவே "சினிமாத்தனமான" கதையும், வசனங்களும் சலிப்படைய வைக்கின்றன. 10 விநாடிகளுக்கு 1 தடவை என்ற வீதத்தில் அடிக்கடி ஜோக் போடுகிறார்கள். சில சிரிக்க வைக்கின்றன... ஏனையவை.. அறுவை!!!

பணக்கார பொண்ணு... வெட்டி பையன்... வலுக்கட்டாய திருமணம்... விரும்பி வரும் ஹீரோவை கண்டுகொள்ளாமல் இருக்கும் ஹீரோயின்.. உயிரைக் காப்பாற்ற போற சீன்ல காதல் வருவது... யப்பா!! அந்த ஓநாய்களை மட்டும் எடுத்துட்டுட்டா.. பக்கா தமிழ் சினிமா!!

ஒரு தடவை "அல்பா அன்ட் ஒமேகா" ட்ரெயிலரையும், பின்னர் இந்த எடிட் பண்ணிய ட்ரெயிலரையும் பாருங்க..

தாங்கல... எதையும், எதையும் காம்பேர் பண்றதுன்னு ஒரு அறிவு வேணாம்!! சரி விடுங்க.. மில்லியன்களை கொட்டி இப்படி ஒரு உதவாத படத்தை 3டி-ல எடுக்கறதுக்கு, பழையபடி நேர்த்தியா கொஞ்ச 2டி படங்கள் எடுத்தாலே பரவாயில்லைன்னு எண்ணத் தோன்றுகிறது...

என்ன இருந்தாலும் அனிமேஷன்-ங்கற வார்த்தைக்காவது சிறிது கூட்டித்தான் போட வேண்டியிருக்கிறது. (rotten tomatoes கொடுத்ததே 15%.. நாம ரொம்ப அள்ளிக் கொடுக்கறமோ??)

ரேட்டிங்ஸ்,
பாத்திரங்கள்- 13
அனிமேஷன்-9
பின்னணித் தரவுகள்- 10
கதை+திரைக்கதை- 9
இயக்கம்-8

மொத்தம்- 49% பார்க்கலாம்..

9 comments:

  1. நா தான் ப்ஸ்ட்.....ஆபிஸ்ல இருக்கேன்...நைட் பொறுமையா படிச்சிட்டு போடுறேன்

    ReplyDelete
  2. ஓகோ.. அதுக்குள்ள கமென்ட் போட்டாச்சா?? நீங்கதான் என் ப்ளாக்ல ஃபாஸ்டஸ்ட் ரெக்கார்ட்!!

    ReplyDelete
  3. பல கதைகளை ஒன்று சேர்த்து எடுத்தது போல் இருந்தது. படத்தை அரைமணி நேரம் தான் பார்த்தேன் வெறுத்து விட்டது. கதையும் சரியில்லை,அனிமேஷன் சரியில்லை, சற்று கூட சுவராசியமாக இல்லை.

    20 மில்லியன் தான் பட்ஜெட் என்பதொலோ என்னவோ அனிமேஷன் சரியில்லை

    இதில் இரண்டாம் பாகம் வேறு வருகிறதாம்.

    ReplyDelete
  4. //படத்தை அரைமணி நேரம் தான் பார்த்தேன்//
    @ லக்கி... நீங்க நெஜமாவே லக்கி !

    ReplyDelete
  5. நண்பரே,
    ஓட்டு பட்டை எதனையும் காணவில்லையே

    ReplyDelete
  6. ஐயையோ நான் எந்தக் கட்சியையும் ஆரம்பிக்கல்ல,
    எனக்குல்லாம் ஓட்டு போட்டு ஏன் டயத்த வேஸ்டு பண்ணிக்கிட்டு..
    பதிவை ஏதும் ரேட் பண்ண விரும்பினா ரியாக்ஸன்ஸை "க்ளிக்"கிட்டு போங்க!!

    ReplyDelete
  7. boss...
    மொக்க படம் தெரிஞ்சே மாட்டினிங்களா...

    அதுவும் IMDBலாம் பாத்த பெறகும் சொந்த செலவுல சூன்யமா....(ஆனா நெறைய நேரம் IMDBயையும் நம்புறதுக்கில்ல,,

    ReplyDelete
  8. பாஸ்...மியூசிக்ல உங்களுக்கு ஈடுபாடு உண்டுன்னு சொன்ன ஞாபகம்..அதுமாதிரியும் கொஞ்சம் எழுதலாமே...

    ReplyDelete
  9. கொழந்த நண்பா,
    மியூசிக் பிடிக்கும் தான்.. ஆனா பதிவு எழுதற அளவுக்கெல்லாம் நெறய மியூசிக் கேட்டதோ, பாடகர்களைப் பற்றித் தேடிப் பார்த்ததோ இல்லை!!

    ஆனாலும் ரிக்வெஸ்ட கன்ஸிடர் பண்ணி விரைவில் எழுத முயல்கிறேன்...
    (ரொம்பத்தான் சீன் போடுறமோ??)

    ReplyDelete

Related Posts with Thumbnails